Type Here to Get Search Results !

இயல் 1-தமிழ்-7ம் வகுப்பு-அமுதத் தமிழ்

இயல் 1-அமுதத் தமிழ்

 table of contents(toc)

எங்கள் தமிழ்

⚔   அருள்நெறி அறிவைத் தரலாகும்
      அதுவே தமிழன் குரலாகும்
      இன்பம் பொழிகிற வானொலியாம்
      எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
        -நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

சொல்லும் பொருளும்

  • ஊக்கிவிடும்     - ஊக்கப்படுத்தும் 
  • குறி         - குறிக்கோள் 
  • விரதம்     - நோன்பு 
  • பொழிகிற     - தருகின்ற

நூல் வெளி

  • வெ. இராமலிங்கனார் "நாமக்கல் கவிஞர்" என்று அழைப்பர். 
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். 
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப்பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். 
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி - இவரின் படைப்புகள்

ஒன்றல்ல இரண்டல்ல

⚔  ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
      ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
        ......
      சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த
      வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு
             - உடுமலை நாராயணகவி

நூல் வெளி

  • பகுத்தறிவுக்கவிராயர் என்று புகழப்படுபவர் 
  • உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.

பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

  • வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை.
  • கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழியாகும். இவ்வாறு எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை. 
  • பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகள்.

⚔  ”எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
        திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்”-நன்னூல் நூற்பா.

  • பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும்.
  • இவையே அன்றி வேறுவகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்- மு.வரதராசனார் 
  • ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர் 
  • கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் ஆகும். 
  • பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர். 
  • பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும் 
  • தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார். 
  • தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர்.
⚔   “எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
        இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
        வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக
        விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு
        தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து
        செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.”
        - பாவேந்தரின் ஆசை.

குற்றியலுகரம், குற்றியலிகரம்

  • தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர். உயிர் 12, மெய் 18 ஆகிய 30 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். 
  • சார்பெழுத்து பத்து வகைப்படும். 
  • அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.

குற்றியலுகரம்

  • கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். 
  • இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். 
  • குறுமை+இயல்+உகரம் = குற்றியலுகரம்.
  • (எ.கா.) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

முற்றியலுகரம்

  • தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.   
  • வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும். 
  • இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர். 
  • (எ.கா.) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

 அறிந்து கொள்வோம்

  • குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் 
  • நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’ (எ.கா.) ஐகான், ஔகான் 
  • குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’ (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம் 
  • ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' (எ.கா.) அஃகேனம்

குற்றியலுகரத்தின் வகைகள்

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

  • தனிநெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும். 
  • (எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

  • ஆ ய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். (எ.கா.) எஃகு, அஃது

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

  • தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.(எ.கா.) அரசு (ர = ர் + அ) கயிறு (யி = ய் + இ) ஒன்பது (ப = ப் + அ) வரலாறு (லா = ல் + ஆ).

வன்தொடர்க் குற்றியலுகரம்

  • வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று.

மென்தொடர்க் குற்றியலுகரம்

  • மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று.

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

  • இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். (எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.

அறிந்து கொள்வோம்-குற்றியலுகரம்

  • வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை. 
  • மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

குற்றியலிகரம்

  • தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம்’ எனப்படும். குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம். 
  • குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்.

இடம் - 1

  • குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். 
  • (எ.கா.) கொக்கு (க் + உ)+யாது     = கொக்கியாது (க் + இ) 
  • தோப்பு (ப் + உ)+ யாது     = தோப்பியாது (ப் + இ) 
  • நாடு (ட் + உ)+ யாது         = நாடியாது  (ட் + இ)  
  • எனப்படுவது (த் + உ)+யாது     = எனப்படுவதியாது (த் + இ)

இடம் - 2

  • ‘மியா’ என்பது ஓர் அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது). இதில் ‘மி’ யில் (மி = ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும்
  • (எ.கா.) கேள் + மியா = கேண்மியா  
  • செல் + மியா = சென்மியா 
  • குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

கலைச்சொல் அறிவோம்.

  • ஊடகம்         – Media 
  • பருவ இதழ்         - Magazine 
  • மொழியியல்         - Linguistics  
  • பொம்மலாட்டம்     - Puppetry 
  • ஒலியியல்         - Phonology 
  • எழுத்திலக்கணம்     - Orthography 
  • இதழியல்         - Journalism 
  • உரையாடல்         - Dialogue


This blog has full Tamil medium history notes for amutha mozhi eyal-1-7th tamil notes. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.