இன்னுயிர் காப்போம்- இயல் 9
ஆசியஜோதி
⚔ நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன்
நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;
துன்று கருணை நிறைந்த வள்ளல்
….
ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை
ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா;
பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும்ஐயா! - கவிமணி தேசிக விநாயகனார்
பொதுவான குறிப்புகள்
- தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
- முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
- ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
- இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.
மனிதநேயம்
- மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
வள்ளலார்
- வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”- வள்ளலார்
- பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்
அன்னை தெரசா
- மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார்.
- அதனால் அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது
- வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - அன்னை தெரசா
கைலாஷ் சத்யார்த்தி
- அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி.
- குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கி குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார்.
- 30 ஆண்டுகளில் 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார். உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்.குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.
- உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது.- கைலாஷ் சத்யார்த்தி
முடிவில் ஒரு தொடக்கம்
- இதயத்தையே கொடையாகத் தந்த வள்ளல்கள் தாம் அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர்.
- இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன்.
அணி இலக்கணம்
- அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.
- கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.
- மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.
இயல்பு நவிற்சி அணி
- ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
- இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
⚔ தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி - கவிமணி தேசிக விநாயகனார்
உயர்வு நவிற்சி அணி
- ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
⚔ குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே கருக்குமென்று
ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா -தாலாட்டு
கலைச்சொல் அறிவோம்
- மனிதநேயம் - Humanity
- கருணை - Mercy
- நோபல் பரிசு - Nobel Prize
- சரக்குந்து - Lorry
- உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation
This blog has full Tamil medium history notes for ennur kappom eyal 9-6th tamil notes. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams