Type Here to Get Search Results !

ஹரப்பா /மொகஞ்சதாரோ Mohenjo Daro civilization - mohanjatharo samaveli nagarigam( part 2)

ஹரப்பா /மொகஞ்சதாரோ

This blog has full Tamil medium history notes for Mohenjo Daro civilization.It was taken from previous year question papers and new samacher school books.

indus valley civilization-mohanjatharo samaveli nagarigam
table of contents(toc)

ஹரப்பா /மொகஞ்சதாரோ

சார்லஸ் மேசன்

  • ஹரப்பா முதன்முதலில் 1826 இல் வருகை 
  • 1842 பலுசிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் 
  • ஹரப்பாவை -இவர் புராதான நகரம் என அழைத்தார்
  • பாழடைந்த செங்கோட்டை உயரமான சுவர்களுடன் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

 சர் ஜான் மார்ஷல்

  • இந்திய தொல்பொருளியல் தலைமை இயக்குனர்
  • 1924 ஹரப்பா -மொகஞ்சதாரோ இடையேயான பொதுவான கூறுகள் கண்டறிந்தார்
  • 1902 கர்சன் பிரபு இவரை இயக்குனராக நியமித்தார்
  • 1913-1933 -20 வருடங்கள் தங்கி தட்சசீலம் அருங்காட்சியகம் 1918ல் அமைத்தார்
  • காலம் 3250- 2750 ஹரப்பா காலம் எனக் குறிப்பிட்டார்
  • 1921-ஹரப்பா கண்டுபிடிப்பு
  • ஹரப்பா மொகஞ்சதாரோவை விட பழமையானது

சர் ஜான் மார்ஷல், மாதவ் ஷாப்வாட்கண், ராய் பகதூர், தயாராம் சாகினி} 1912-1921

R.D பானர்ஜி

  • இந்திய தொல்பொருள் ஆய்வு மேதை
  • 1922 மொகஞ்சதரோ கண்டுபிடிப்பு

பிளீட்-

  • 1912 பல ஹரப்பா முத்திரை கண்டுபிடிப்பு

ராசு பாதிரியார் -

  • சிந்து சமவெளியின் மொழி தமிழுடன் ஒத்து இருந்ததாக கூறினார்

அலெக்சாண்டர்ரோ (1889 -1905 )

  • புதைபொருள் ஆராய்ச்சி
  • ஆதிச்சநல்லூர் இது இந்தியாவின் ஆய்வுக்களம் (தொன்மை மிக்கது)

Dr.ஜாகர்

  • ஜெர்மானியர் 1876
  •  ஆதிச்சநல்லூர் புதைபொருள் ஆராய்ச்சி 

அலெக்சாண்டர் பர்ன்ஸ்

  • 1831 அம்பி (ஹரப்பா பண்பாடு )பகுதிக்கு வருகை புரிந்தார்

மார்டிமர் வீலர் (ஆர் இ எம் வீலர்)

  • 1944 -48 -->ஆராய்ச்சியின் பொற்காலம்
  • மொகஞ்சதாரோ -தானியக்களஞ்சியம் கண்டுபிடிப்பு
  • 1940 - பாண்டிச்சேரி அரிக்கமேடு பகுதியில் ரோமப் பேரரசு ஹரப்பா வணிகத் தொடர்பு கண்டுபிடிப்பு

அலெக்சாண்டர் கன்னிங்காம்

  • முதல் நில அளவையாளர்
  • ஏ எஸ் ஐ ( ASI)1861 அமைப்பை நிறுவினார் -டெல்லி
  • 1853,1856 ,1875 ஹரப்பா வந்தார்
  • 1872 ,1875 பிராமி எழுத்து பொறித்த முதல் முத்திரை வெளியிடப்பட்டது

மெஹர்கர்

  • சிந்து சமவெளியின் முன்னோடி
  • பாகிஸ்தான், பலுசிஸ்தான்- போலன் நதிக்கரையில் உள்ளது
  • வேளாண்மை கால்நடை தொழில் மிக முன்பே செய்தனர்
  • கிமு 7000 க்கு முற்பட்டது
  • சிந்து சமவெளியின் வளர்ச்சி இதன் வீழ்ச்சிக்கு காரணம்

நகர அமைப்பு

  • மேல் நகர அமைப்பு -மேற்கு பகுதியில் அமைந்து இருந்தது -நிர்வாகிகள் , தானியக்களஞ்சியம் மற்றும் பெருங்குளம் இங்கு காணப்படுகிது
  • கீழ் நகர அமைப்பு- கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது- மக்கள் வசித்தனர் , இது பரப்பளவில் பெரியது

தெருக்கள் மற்றும் வீடுகள்

  • சட்டக வடிவம் --வீடு . தெரு
  • சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகள் கொண்டதாகவும் இருந்தது
  • கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் செங்கோண வடிவம் போன்று வெட்டிக்கொள்ளும் தெருக்கள்
  • வீடுகள் சேற்று மண் மற்றும் சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட உயரமான வீடுகள்
  • அரண்மனைகள் வழிபாட்டுத்தலங்கள் காணப்பட்டதற்கான சான்று இல்லை
  • வீடுகளின் கூரை சமதளமாக இருந்தது
  • மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு காணப்பட்டது
  • ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் காணப்பட்டது
  • வீடுகளில் ஜன்னல்கள் இல்லை

பெருங்குளம்

  • அகன்று செவ்வக வடிவில் இருந்தது
  • நான்கு புறமும் நடைபாதை இருந்தது
  • படிகள் வடக்கு தெற்கு பகுதியில் இருந்தன
  • இயற்கை தார் ,சுண்ணாம்பு , ஜிப்சம் கொண்டு சுவர் பூசப்பட்டு இருந்தது
  • உலகின் மிகப்பெரிய குளம் மொகஞ்சதாரோ
    • 8 அடி ஆழம்x39 அடி நீளம் x21 அடி அகலம்
  • வடக்கு மற்றும் தெற்கு புறத்தில் இருந்து உள்ளே செல்ல படிகள் மூன்று புறமும் அறைகள் இருந்தன

தானியக் களஞ்சியம்

  • ஹரப்பாவில் 6 தானிய களஞ்சியம்
  • பெரியது மொகஞ்சதாரோ 150 அடி நீளம் 50 அடி அகலம்
  • ஹரியானா- ராகிகர்கி- முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலத்தை சேர்ந்தது
  • நெல் ,கோதுமை, பார்லி ,பருப்பு மற்றும் எள் நில வெடிப்பில் காணப்பட்டது

மாபெரும் கட்டிடம்

  • மொகஞ்சதாரோ 20 தூண்கள் 4 வரிசைகள் கொண்ட கட்டிடம் காணப்பட்டது
  • இது பொது கட்டிடம் அல்லது கூட்ட அரங்கு என அழைக்கப்பட்டது


  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.