Type Here to Get Search Results !

வேதகாலம் VEDHA KALAM

வேதகாலம்

This blog has full Tamil medium history notes for VEDHA KALAM.It was taken from previous year question papers and new samacher school books.

VEDHA KALAM
table of contents(toc)

வேதகாலம் 

  • ஆரியரின் வருகையால் வேத காலம் தொடங்கியது 
  • மொழி--  இந்தோ-ஆரியம் 
  • கால்நடை மேய்ப்பவர்கள் 
  • இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் 
  • அழித்து எரித்துச் சாகுபடி செய்யும் முறை 
  • கருங்கடல் வடக்கே -பாக்ட்ரியா  மார்ஜினா தொல்லியல் வளாகம் - ஆரியர் தாயகம்

  • காலப்பகுதி  --கிமு :1500-600 (இரும்பு காலம் )

  • ரிக்வேத கால ஆரியர்கள்- நாடோடிகள் 
  • வாழிடம் "சப்த சிந்து"--ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி 
  • கிமு 1000 ல் ஆரியர் கிழக்குநோக்கி கங்கைச் சமவெளிக்குப் பெயர்ந்தனர் 

வேதகால இலக்கியம் 

  1. சுருதிகள்
  2. ஸ்மிருதிகள்

 சுருதிகள்

  • நான்கு வேதங்கள் 
  • பிராமணங்கள் 
  • ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்கள் சுருதிகள் ஆகும் 
  •  சுருதி என்பது கேட்டல் 
  •  இவைகள் எழுதப்படாதது,ஆனால் நிலையானது 
  • ரிக் வேதம் 

  • 10 காண்டங்கள் கொண்டது
  • 7 முதலில் எழுதப்பட்டது
  • 1, 8, 9 & 10 பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பர்
  • முண்டா மற்றும் திராவிட மொழிச் சொற்கள் 300  சொற்கள் காணப்பட்டது

ஸ்மிருதிகள் 

  • ஸ்மிருதிகள் இறுதியான எழுதப்பட்ட பிரதி 
  • ஆகமங்கள் ,தாந்திரீகங்கள் ,புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் ஸ்மிருதிகள்  ஆகும் 
  •  இவைகள் நிலையற்றது,ஆனால் எழுதப்பட்டது 

காலம், பரப்பு மற்றும் சான்று  

  • பரப்பு -வட இந்தியா
  •  காலம் -இரும்புக் காலம்  (கிமு 1500 - 600 வரை) 
  • சான்று-- வேதகால இலக்கியம் 

வேதகாலம் 

  • தொடக்க வேதகாலம் (கிமு1500 முதல் 1000 வரை)
  •  பின் வேத காலம்  (கிமு1000 முதல் 600 வரை )

அரசியல் சமூகம் 

  • ரத்த உறவு கொண்டது 
  • குலம் அரசியலின் அடிப்படை 
  • தலைவர் -- குலபதி 
  • ராஷ்டிரம்---> ஜனா ---->விஸ் ---->கிராமம்   
  • ஜனா தலைவர்--ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலன்)
  • விஸ் தலைவர்--விசயாபதி
  • கிராமம் தலைவர்- கிராமணி 
  • விதாதா, சபா ,சமிதி மற்றும் கணா அமைப்புகள் அரசரைக் கட்டுப்படுத்தும் 
  • விதாதா --இனக்குழுவின் பொதுக்குழு மற்றும் பழமையானதாகும் 
  • சபா --மூத்தோர் மன்றம் 
  • சமிதி-- மக்களின் பொதுக்குழு 
  • அரசருக்கு உதவியவர் --புரோகிதர் 
  • ராணுவ உதவி செய்தவர் --சேனானி (படைத்தளபதி)

பின் வேத காலத்தில்

  •  பல ஜனங்கள் இணைந்து ஜனபதங்கள் உருவாகின
  •  சபா ,சமிதி முக்கியத்துவம் இழந்தன 
  • விதாதா --கலைக்கப்பட்டது 
  • பாலி --மக்கள் மனமுவந்து அரசருக்கு அளிக்கும் நன்கொடை (1/6 ) பின்னாளில் இது வரியானது  
  • குரு ,பாஞ்சால அரசுகள் வளர்ந்தன 
  • அயோத்தி ,இந்திரபிரஸ்தம் மற்றும் மதுரா உருவாயின 

சமூக அமைப்பு 

  • தந்தை வழி சமூகம் 
  • ஆரியரல்லாத மக்கள் தசயுங்கள்  தாசர்கள்    
  • மூன்று பெரும் பிரிவுகள் காணப்பட்டன
    • பொதுமக்கள்---விஸ் 
    • போர்வீரர்கள்--சத்ரியர்கள் 
    • மதகுருமார்கள்--பிராமணர் 
  • இதுவே பின்னாளில் 4 ஆனது 
    • பிராமணர் 
    • சத்திரியர்
    • நில உடைமையாளர்--- வைசியர் 
    • வேலைத் திறன் கொண்ட-- சூத்திரன் 

பெண்களின் நிலை 

ரிக்வேத காலத்தில்

  • சுதந்திரம் காணப்பட்டது 
  • உடன்கட்டை இல்லை 
  • கைம்பெண் மறுமணம் உண்டு 
  • சொத்துரிமை இல்லை 
  • விதாதா, சபாகளில்  பங்கேற்றனர் 
  • பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை 

பின் வேத காலத்தில் 

  • பலதாரமணம் காணப்பட்டது 
  • கைம்பெண் மணம் இல்லை 
  • கல்வி மறுக்கப்பட்டது

பொருளாதார வாழ்க்கை

  •  கால்நடை மேய்ச்சல் வேளாண்மை முக்கியத் தொழில் 
  • பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டங்கள் இக்காலத்தைச் சேர்ந்தது 
  • வளர்த்தவை--குதிரைகள்,பசுக்கள் ,ஆடுகள் ,செம்மறி ,ஆடுகள் , காளைகள் மற்றும் நாய்கள் பழக்கப் படுத்தினர் 
  • யவா(பார்லி)--- முதன்மை பயிர் 
  • பின் வேதகாலத்தில்--வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் பயன்படுத்தினர் 
  • பண்டமாற்று முறை காணப்பட்டது 
  • தங்க நாணயம் ---நிஷ்கா, சத்மனா
  •  வெள்ளி நாணயம் -- கிருஷ்ணாலா 

மதம்

  •  ரிக்வேத காலத்தில் 
  • நிலம் ஆகாயம் கடவுள் வழிபாடு காணப்பட்டது
  •  பிருத்வி (நிலம்) , அக்னி (நெருப்பு) , வாயு (காற்று) ,வருணன் (மழை) இந்திரன் (இடி)  ,அதிதி (நித்திய கடவுள்)  மற்றும் உஷா (விடியற்காலை தோற்றம்) 
  • குழந்தை( பிரஜா) பசுக்கள் (கால்நடைகள்)  செல்வம் (தனா) ஆகியவற்றுக்காகக் கடவுளை வணங்கினர் 
  • சிலை வழிபாடு இல்லை 
  • பின்னாளில் 
  • இந்திரன் ,அக்னி போன்றவை முக்கியம் இழந்தன 
  • பிரஜபதி, விஷ்ணு மற்றும்  ருத்ரன் ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. 

நான்கு ஆசிரமங்கள் வயது அடிப்படையில் 

  • பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்) 
  • கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை) 
  • வனப் பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்) 
  • சன்னியாசம் (துறவறம்)

  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.