குப்தப் பேரரசு
guptha perarasu |
This blog has full Tamil medium history notes for Guptha perarasu. It was taken from previous year question papers and new samacher school book
குப்தப் பேரரசு
- காலம் : கிபி 300- 700
- ஆட்சி பகுதி :மகதம், அலகாபாத் மற்றும் அவுத்
- தலைநகர் :பாடலிபுத்திரம்
- இந்தியாவின் பொற்காலம் குப்தர் காலம் என R.S. வர்மா கூறுகிறார்
- செவ்வியல் கலைகளின் காலம், பண்பாட்டு மலர்ச்சியின் காலம் சமஸ்கிருத வளர்ச்சி காலம்
- இந்துக்கள் அரசர்களாக இருந்தனர்
சான்றுகள்
இலக்கியச் சான்றுகள்
- ஸ்மிருதிகள்-- நாரதர், விஷ்ணு, பிரகஸ்பதி, காத்யாயனா மற்றும் வாயு பாடல்கள்
- விசாகதத்தர் --தேவி சந்திரகுப்தம், முத்ரா ராட்சசம்,
- காளிதாசர் --சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம், குமார சம்பவம், சூத்ரகர்{மிருகசகடிதம்)
- காமந்தகார்--நீதிசாரம் (தர்மசாஸ்திரம்)
- ஹர்ஷர் --ரத்னாவளி, நாக நந்தா, பிரியதர்ஷினி
- பாணர் -ஹர்ஷ சரிதம்
- யுவான்சுவாங் (சீன பயணி) --சி யு கி.
- பாகியான் --பயணக்குறிப்புகள்
- புத்த சமண இலக்கியங்கள்
நாணயச் சான்றுகள்
- சமுத்திரகுப்தர் வெளியிட்ட நாணயத்தில் வீணையுடன் அமர்ந்திருக்கும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது
- இரண்டாம் சந்திரகுப்தர் வெள்ளி நாணயங்கள் முதலில் வெளியிட்டார்
- முதலாம் குமார குப்தர் பல நாணயங்களை வெளியிட்டார்
- தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களை வெளியிட்டனர்
கல்வெட்டுச் சான்றுகள்
- மெஹருளி இரும்பு தூண் கல்வெட்டு --டெல்லி முதலாம் சந்திரகுப்தர் பற்றிக் கூறுகிறது
- அலகாபாத் தூண் கல்வெட்டு (பிரயாக் கல்வெட்டு) சமுத்திர குப்தர் காலத்தில் நிறுவினார்
- பொறித்தவர் அமைச்சர் ஹரிசேனர்
- பிரசஸ்தி என்பது மெய்க்கீர்த்தி அல்லது புகழுரை கல்வெட்டு எனப்படும்
- 33 வரிகள் கொண்டது
- சமஸ்கிருதத்தின் நாகரி வரிவடிவில் பொறிக்கப்பட்டுள்ளது
- உதயகிரி குகை கல்வெட்டு, மதுரா கல்வெட்டு மற்றும் செஞ்சி பாறை கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தவை
- பிடாரி ஒற்றை தூண் கல்வெட்டு ஸ்கந்த குப்தர் பற்றிக் கூறுகிறது
- குப்த ஆண்டு குப்த ஆண்டு 165 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ள புத்த குப்தரின் ஈரன் கல்வெட்டு (காளி நதி மற்றும் நர்மதை நதி இடைப்பட்ட நிலத்தை ஆட்சி செய்த லோக பாலா என்று மகாராஜா சுரஷ்மிசந்திரா பற்றிக் கூறுகிறது
- கத்வா பாறை கல்வெட்டு
செப்புப்பட்டயம்
- மதுபான் செப்புப்பட்டயம்
- சோனாபட் செப்புபட்டயம்
- நளந்தா களிமண் முத்திரை பொறிப்பு
- பஹார்பூர் செப்பேடு
குப்த அரசர்கள்
- ஸ்ரீ குப்தர்
- கடோத்கஜர்
- முதலாம் சந்திரகுப்தர்
- சமுத்திரகுப்தர்
- இரண்டாம் சந்திரகுப்தர்
- குமார குப்தர்(12th BOOK கடைசி பேரரசர்)
- புரு குப்தர்
- புத்த குப்தர்
- பாலாதித்யர்(10th BOOK கடைசி பேரரசர்)
- விஷ்ணு குப்தர் (கடைசி அங்கீகரிக்கப்பட்ட அரசர்)
ஸ்ரீ குப்தர்
- வங்காளம், பீகார் படையெடுத்துக் கைப்பற்றினார்
- குப்தா நாணயத்தின் இவரின் உருவம் பொறிக்கப்பட்டது
- குப்த மரபைத் தோற்றுவித்தவர்
கடோத்கஜர்
- ஸ்ரீ குப்தர் மகன்
- ஸ்ரீ குப்தர் மற்றும் கடோத்கஜர் இருவரும் மகாராஜா என அழைக்கப்பட்டனர்
முதலாம் சந்திரகுப்தர்
- காலம் :கிபி 319 -335
- கடோத்கஜர் மகன்
- கிபி 320 குப்த யுகம் என்ற கால கணக்கிடும் முறையைத் தொடங்கி வைத்தார்
- மெஹ்ருளி இரும்பு தூண் கல்வெட்டுப் போர் வெற்றி பெற்று கூறுகிறது
- லிச்சாவி- கங்கை சமவெளியில் தாராய் பகுதி அரச குடும்பத்தின் குமார தேவியை மணம் செய்து கொண்டார்
- லிச்சாவி பழமையான கணசங்கம்
- கங்கை நேபாளம் இடைப்பட்ட பகுதி
- தங்க நாணயத்தில் முதலாம் சந்திரகுப்தர் மற்றும் குமார தேவியின் படம் பொறிக்கப்பட்டது
- “லிச்சாவையா” என்ற வார்த்தை நாணயங்களில் பொறிக்கப்பட்டது
- சிறப்புப் பெயர் :மகாராஜாதி ராஜா, அதிராஜா (அரசர்களுக்கு அரசன்)
சமுத்திரகுப்தர்
- காலம் : கிபி 335 375
- குப்த மரபிலேயே மிகச் சிறந்த அரசராக விளங்கினார்
- அசோகர் தூண் கல்வெட்டு இவர்பற்றிக் கூறுகிறது
- சிறப்புப் பெயர்: கவிராஜா (பாடல்கள் இயற்றும் திறமையால்), 100 போர்க்களங்களின் கதாநாயகர், இந்திய நெப்போலியன், புருஷா (அனைவருக்கும் மேலானவர்)
- அலகாபாத் கல்வெட்டு (பிரயாக் கல்வெட்டு) பிரயாக் பகுதியைக் கைப்பற்றியதாகப் பொறிக்கப்பட்டுள்ளது பொறித்தவர் அமைச்சர் ஹர்ஷவர்த்தன்
படையெடுப்பு
- கங்கை சமவெளி வட இந்திய படையெடுப்பு
- ராஜஸ்தான் பகுதியின் 9 அரசர்களைத் தோற்கடித்தார்
- நாகர்கள் உடன் அதிக போர்(அச்சுதர் மற்றும் நாக பாணன்
- தென்னிந்திய படையெடுப்பு (தட்சின பாதா)
- 12 அரசர்களை வென்றார்
- காஞ்சிபுரம் விஷ்ணு கோபர்(பல்லவ அரசர்) வென்றாரென அலகாபாத் கல்தூண் கல்வெட்டு கூறுகிறது
- இலங்கை அரசு, சாகர் அரசு, தெய்வபுத்திர சாகனுசாகி (குஷாண பட்டம்) ஆகியோரை கப்பம் கட்ட வைத்தார்
- ராஜஸ்தான் பழங்குடியினர், காட்டு ராஜாக்கள், கிழக்கு வங்காளம், அசாம் மற்றும் நேபாளம் போன்ற பகுதிகளை வென்றார்
- V.A. ஸ்மித்- பிரெஞ்சு அரசனுக்கு நிகராக இருந்ததால் இந்திய நெப்போலியன் என்று அழைத்தார்
- வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்
- ஆதரிக்கப் பட்டவர்கள்: ஹரிசேனர் மற்றும் வசுபந்து (பௌத்த அறிஞர்)
- இலங்கை அரசன் மேகவர்மன் (மானவர்மன்) இவருக்குக் கடிதம்மூலம் புத்தகயா கட்ட அனுமதி கேட்டு எழுதியுள்ளார்
- அனைத்து சமயங்களையும் ஆதரித்தார்
- எட்டுவகை நாணயம் வெளியிட்டார்
- வீணையுடன் அமர்ந்துள்ள உருவம் இவரின் நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்தது
- அஸ்வமேதயாகம் செய்தார்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2