Type Here to Get Search Results !

மௌரிய பேரரசின் ஆட்சிமுறை (mouriya perarasu history tamil medium full notes)

மௌரியபேரரசு

Mouriya perarasu history tamil notes
mouriya perarasu

This blog has full Tamil medium history notes for mouriya perarasu. It was taken from previous year question papers and new samacher school books. 
 table of contents(toc)
 

மௌரிய அரசும் ஆட்சி அமைப்பும் 

  • இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு அதிக பகுதியை ஆட்சி செய்தனர் 
  • முக்கிய வருவாய் --வரி ஆகும் 
  • மெகஸ்தனிஸ் இடமிருந்து தகவல் பெற்று ஒரு மையப்படுத்தப்பட்ட அரசுபற்றிக் கிரேக்க வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் 
  • அர்த்த சாஸ்திரம் கூறுவது 
    • தலைமை அமைச்சர், புரோகிதர், ராணுவ தளபதி ----இவர்களின் ஊதியம் 48,000 பணம் 
    • போர் வீரர் ஊதியம் 500 பணம் 

மாகாண நிர்வாகம் 

  • நாடு அதன் தலைவர் அரசர் --அமைச்சரவை, மதகுருக்கள், மகாமாத்திரியர்கள் (செயலாளர்கள்)
  • தலைநகர் பாடலிபுத்திரம் 
  • 4-மாகாணங்கள் ---தலைவர் அரச பிரதிநிதி
    1.  சுவர்ண கிரி (கர்னூல்) ஆந்திரா 
    2. உஜ்ஜயினி (அவந்தி, மாளவம்) 
    3. வடமேற்கு -தட்சசீலம் 
    4. தென்கிழக்கு ஒடிசா (தோசாலி)
  • வரி வசூலிப்பவர் -சமஹர்த்தா

மாவட்டம் மற்றும் கிராம நிர்வாகம் 

  • மாவட்ட நிர்வாகம் --ஸ்தானிகர்
  •  கோபா-- ஐந்து அல்லது பத்து கிராமங்களின் பொறுப்பாளர் 
  • நகர நிர்வாகம் --நகரகா 
  • கிராமங்கள் தன்னாட்சி பெற்று இருந்தன 
  • நிர்வாகம் --குழுக்களால் நியமிக்கப்பட்ட --கிராமணி

நீதி நிர்வாகம் 

இருவகை நீதிமன்றம் 

  1. தர்மஸ்தியா
  2. கந்தகோசந்தனா

தர்மஸ்தியா

  1. திருமணம் வாரிசுரிமை குடிமை உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மதச் சடங்குகள் அறிந்த 3 நீதிபதிகள் 3. அமாத்தியாக்கள் (செயலாளர்கள்)

கந்த கோசந்தனா

  • காந்தகோசந்தனா என்பதன் பொருள் முள் எடுத்தல் 
  • சமூக விரோத பிரச்சனைகள்
  • 3 நீதிபதிகள் 
  • 3 செயலாளர்கள் 


  • ஒற்றர்களைக் கொண்டது 
  • தண்டனைகள் மிகக் கடுமையானது 

அசோகரின் அரசு 

  • யுக்தர்கள்-- கீழ்நிலை அதிகாரிகள் 
  • இராஜிக்கர்கள் --கிராம நிர்வாகம் 
  •  பிரதேசிகர்கள் --மாவட்டத் தலைவர் 

அசோகரின் கட்டளைகள் 

  1. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுப்பயணம் செய்து தகவல் சேகரித்தனர் 
  2. தமக்குத் தேவையான தகவல்களும் ஆலோசனைகளும் தரப்பட வேண்டுமென அசோகர் கூறினார் 
  3. அனைத்து மதங்களுக்கும் அமைதி நிலவ வேண்டும் 
  4. மருத்துவ வசதி தருவது அரசின் பணி

பொருளாதாரம் சமூகம் 

  • வேளாண்மை பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பு 
  • “தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்”,  “கம்பளி வளரும் செடி”என மெகஸ்தனிஸ் தனது குறிப்பில் கூறுகிறார் 
  • நெசவு அடுத்த முக்கிய தொழில் 
  • காசி, வாரணாசி, வங்கம், காமரூபம் (அசாம்) மற்றும் மதுரை நெசவுக்கு சிறப்பு பெற்ற இடங்கள் என அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது 
  • பட்டுப் பொதுவாகச் சீனப் பட்டு என்று அழைக்கப்பட்டது 
  • இரும்பு பிரித்தெடுக்கும் முறை அறிந்திருந்தனர் இத்தொழில்நுட்பம்  கிமு 500 பெரிய முன்னேற்றம் அடைந்தது 
  • கைவினைத் தொழில் நுட்பம் --பமுகா (பிரமுகா=தலைவர்) & ஜெட்டா (ஜேஷ்டா= மூத்தவர்) 
  • தொழில்கள் நிர்வாகம் -சேனி (ஸ்ரேனி) வணிக குழு 
  • ஸ்ரேனிகளுக்கு இடைப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு -மகாசேத்தி காண்பார்

வணிகம் 

  • விதிஷா, உஜ்ஜயினி வழியாக வணிகம் நடைபெற்றது 
  • புத்த ஜாதகக் கதைகள்வணிகம்பற்றியய தகவல் கூறுகின்றன 
  • பர்மா, மாலத்தீவு  மற்றும் இலங்கை உடன் கடல் வாணிபம் செய்தனர் 
  • வணிக கூட்டத் தலைவர் --மகா சர்த்தவாகா 
  • பொருள் எடுத்துச்சொல்ல நுழைவு வரி வசூலிக்கப்பட்டது 
  • அவுரி, தந்தம், ஆமை ஓடு, வாசனை திரவியம்  மற்றும் அபூர்வ மரக்கட்டை எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது  
  • வெள்ளி நாணயம் அதிகம் பயன்படுத்தப்பட்டது 

பாடலிபுத்திரம் 

  • மாபெரும் நகர் 
  • பெரிய செல்வம் மிக்க நகரம் 
  • கங்கை நதி மற்றும் சோன்  நதிகள் சங்கமமாகும் இடத்தில் இருந்தது 
  • இணைகரம் வடிவம் கொண்டது 
  • 14 கிலோ மீட்டர் நீளம் 2 ½ கிலோமீட்டர் அகலம் கொண்டது
  •  64 வாசல்கள் கொண்டிருந்தது 
  • 570 கண்காணிப்பு கோபுரங்கள் காணப்பட்டது 
  • 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது

கலை பண்பாடு

  •  சமஸ்கிருத மொழி இலக்கிய இலக்கணம் வளர்ச்சி பெற்றது காரணம் பாணினி படைப்புகள் மற்றும் அவற்றுக்கு உரை எழுதியவரும் நந்தர்களின் சமகாலத்தவருமான  காத்யாயனரால் வளர்ச்சி பெற்றது 
  • புத்த சமய நூல்கள் பொதுவாகப் பாலி மொழியில் இருந்தன 
  • இசைக்கருவிகள், இசை நடனம் மற்றும் நாடகம் போன்ற கலைகள்பற்றி அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது


  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.