குப்தப் பேரரசு
This blog has full Tamil medium history notes for Guptha perarasu. It was taken from previous year question papers and new samacher school books. Important point also given
இரண்டாம் சந்திரகுப்தர்
- காலம் : கிபி 375-415
- தலைநகர் :பாடலிபுத்திரம்
- உஜ்ஜயினி :வாணிப நகரம்
- இராம குப்தர் உடன் (கி.பி 370-375) வாரிசு உரிமைப் போரில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்
- சாகச் சத்ரப்பு மரபின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் இராசசிம்மன் இப்போரில் கொல்லப்பட்டார்
- நாகர்கள் உடன் திருமண உறவு செய்து கொண்டார்
- குபேர நாகா இளவரசியை திருமணம் செய்தார்
- இரண்டாம் சந்திரகுப்தர் மகள் பிரபாவதி -வாகாடக (தக்காணம்) இளவரசர் இரண்டாம் ருத்ர சேனருக்கு மணம் செய்து கொடுத்தார்
- மேற்கு இந்தியாவிலிருந்த சாகச் சத்ரப்புகளை போரிட்டு பெற்ற வெற்றியே இரண்டாம் சந்திரகுப்தரின் போர் சாதனைகளில் முக்கியமானது.
- இவரின் ஆட்சிகாலத்தில் சீனப்பயணி பாஹியான் இந்தியா வருகை
- இந்தியாவில் அவர் தங்கியிருந்த 9 ஆண்டுகளில் குப்த பேரரசில் மட்டும் 6 ஆண்டுகள் கழித்தார்
பட்டப் பெயர்கள்
- விக்ரமன், தேவ விக்கிரமன், விக்ரமாதித்தன் மற்றும் சிம்ம விக்ரமன் ஆகியவை
- சஹாரி(சாகர்கள் அழித்தவர்) -சாகர்களை வென்றதால் இப்பெயர் பெற்றார்
- தேவ குப்தன், தேவராஜன், தேவஹு -வழிபாட்டின் காரணமாக
நவரத்தினங்கள்(Names List of Gupta Empire in navratnas)
- காளிதாசர்-சமஸ்கிருத புலவர்
- ஹரிசேனர் -சமஸ்கிருத புலவர்
- அமரசிம்மன்- அகராதியியல் ஆசிரியர் (அமரகோசம்)
- தன்வந்திரி -மருத்துவ மேதை
- காகபானகர் -ஜோதிட மேதை
- சன்கு -கட்டிடக்கலை நிபுணர்
- வராகமிகிரர் -வானியல் அறிஞர்
- வராச்சி -சமஸ்கிருத புலவர், இலக்கண ஆசிரியர்
- விட்டல பட்டர் -மாய வித்தகர்
முதலாம் குமார குப்தர்
- காலம் : கி.பி 415-455
- இரண்டாம் சந்திரகுப்தரின் மகன்
- சக்ராதித்யர் என அழைக்கப்பட்டார்
- நளந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது இவரது ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது
- கார்த்திகேய வழிபாட்டை முதலில் கொண்டு வந்தவர்
- நாணயங்களை வெளியிட்டார்
- இவர் குதிரை வேள்வியும் மேற்கொண்டார்
- இவர் ஆட்சி கால முடிவில் வலிமையும் செல்வமும் மிகுந்த புஷ்யமித்ரர்கள் என்றழைக்கப்பட்ட பழங்குடியினரால் குப்த படை முறியடிக்கப்பட்டது
ஸ்கந்த குப்தர்
- பிடாரி தூண் கல்வெட்டு இவர்பற்றிக் கூறுகிறது
- ஹீணர்கள் படையெடுப்பு நடைபெற்றது
- மறைவு கிபி 467
- புரு குப்தர் புத்த குப்தர் இவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள்
பாலாதித்தர்
- முதலாம் நரசிம்ம குப்தர் என்ற பெயரில் ஆட்சி பொறுப்பேற்றார்
- மிகிரி குலத்தை வென்றார் பின்னர் மிகிர குலம் இவரைத் தோற்கடித்தனர்
விஷ்ணு குப்தர்
- காலம் : கிபி 540 -560 வரை
- அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்
முக்கிய குறிப்புகள்(important notes)
- வேளாண்மைப் பயிர்கள் --நெல், கோதுமை, பார்லி, பயறு, எண்ணெய் வித்துக்கள், தானியங்கள்
- நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது
- காளிதாசர் நூல்களில் மிளகு, ஏலம் பற்றிக் கூறுகிறது
- வராகமிகிரர் பழ மர வளர்ப்பு பற்றிக் கூறுகிறார்
- பஹார்பூர் செப்பேடு அரசு நிலம் எனக் குறிப்பிடுகிறது (அரசர் மட்டுமே நிலத்துக்கு உரிமையாளர்)
- உஸ்தபாலா நிலங்களைப் பரிமாற்றம் செய்வதற்கான அதிகாரி
- கிராம கணக்காளர் --கிராமங்களை நிர்வகிப்பவர்
நிலங்களின் வகை
- ஷேத்திரா-- பயிரிடக்கூடிய நிலம்
- கிலா -தரிசு நிலம்
- அப்ரஷதா -வனம்/காடுகள்
- வாஸ்தி- குடியிருப்பு நிலம்
- கபடசஹாரா மேய்ச்சல் நிலம்
நில கொடைகள்
- அக்ரஹாரமானியம் பிராமணர்களுக்குத் தரப்பட்ட நிலம்
- தேவ கிரகாமானியம் கோவில்களுக்குத் தரப்பட்ட நிலம் (பிராமணர் வணிகரிடம் தரப்படும்)
- சமயசார்பற்ற மானியம் --நிலப்பிரபுக்களுக்கு தரப்படும் நிலம்
நிலக்குத்தகை முறை
- நிவி தர்மா அறக்கட்டளை நிலம் மானியம்
- நிவி தர்மா அக்சயனா நிரந்தர அறக்கட்டளை வருவாய் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்
- சுப்ரதா வர்மா அறக்கட்டளை வருவாய் முழுதும் பெற்று பயன்படுத்தலாம் நிர்வாக உரிமை இல்லை
- பூமிசித்ராயனா தரிசு நிலங்களில் சாகுபடி நிலமாக மாற்ற வேண்டும்
வரிகள்
- பாகா- அதன் தன்மை விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்காகும்
- போகா -அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள், விறகு, பூக்கள் போன்றவை.
- கரா -கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி (இது வருடாந்திர நிலவரியின் ஒரு பகுதியல்ல)
- பலி -ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரியாக இருந்து பின்னர் கட்டாய வரியாக மாற்றப்பட்டது. இது ஒரு ஒடுக்குமுறை
- உதியங்கா --காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வரியாகவும் இருக்கலாம். எனினும், இது ஒரு கூடுதல் வரிதான்.
- உபரிகரா -இதுவும் ஒரு கூடுதல் வரிதான். இது எதற்காக வருவிக்கப்பட்டது என்பது குறித்து அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர்.
- ஹிரண்யா -தங்க நாணயங்கள்மீது விதிக்கப்படும் வரி என்பது நேரடிப் பொருள், நடைமுறையில் இது சில குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை, அரசின் பங்காகப் பொருளாகவே அளிப்பதாகும்.
- வாத-பூதா- -காற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்
- ஹலிவகரா --கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு: உழவரும் கட்ட வேண்டிய கலப்பை வரி
- சுல்கா -வர்த்தகர்கள் நகரத்திற்கோ துறைமுகத்திற்கோ கொண்டுவரும் வணிகச் சரக்குகளில் -அரசருக்கான பங்கு இதைச் சுங்கநுழைவு வரிகளுக்கு ஒப்பிடலாம்
- கிளிப்நா; உபகிளிப்தா --நிலப்பதிவின் போது விதிக்கப்படும் விற்பனை வரி
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2