Type Here to Get Search Results !

குப்தப் பேரரசு (Guptha Perarasu history tamil medium atchimurai notes)

  குப்தப் பேரரசு 

gutha perarasu


This blog has full Tamil medium history notes for Guptha perarasu. It was taken from previous year question papers and new samacher school books. Table of contents(toc)

ஆட்சிமுறை மற்றும் நிர்வாகம் 

  • பேரரசு (அரசர்) தேசம் அல்லது புக்தி (உபாரிகா/ ஆளுனர்) விஷயம் (விஷயபதி)   கிராமம்( கிராமிகா) 
  • கிராம நிர்வாகம் தலைமை கிராமிகா 
  • நகர நிர்வாகம் சிரேஷ்டிகள் 
  • கிராமிகா 8 பேர் கொண்ட குழு (அஷ்ட குல அதிகாரனா) 
  • இவற்றின் தலைவர் மகாதாரா 
  • தாமோதர்பூர் செப்பேடு 3 மகாராஜா பட்டம் பெற்ற உபாரிகா இருந்ததாகக் கூறுகிறது 
  • அடிமை முறை இருந்தது 
  • உடன்கட்டை பழக்கம் இருந்தது 
  • ஹரிசேனர் -குமாரமாத்தியா (மன்னருக்கு அடுத்தநிலை) அமர்த்தியா பதவிக்கு இணையான பதவி 
  • ஹரிசேனர் சிறப்புப்பெயர் -சந்தி விக்ரஹிதா ,மகாதண்டநாயகர் 
  • மகாசந்தி விக்ரஹா -அமைதி மற்றும் போருக்கான அமைச்சர் (உயர்நிலை அமைச்சர்) 
  • மகா தண்டநாயகர்/தண்டநாயகர்-- நீதித்துறை மற்றும் ராணுவ அமைச்சர் 
  • அலகாபாத் கல்வெட்டு அக்னி குப்தா மற்றும் 3  மகா தண்டநாயகர் பற்றி கூறுகிறது 
  • மகா அஸ்வபதி --குதிரைப்படைத் தலைவர் 
  • நிர்வாக அலகுகள் (மாவட்டத்திற்கு கீழ் ) ---விதி ,பூமி ,பதகா, பீடா 
  • கிராம அதிகாரி--கிராமிகர், கிராமஅக்சயா,மகாதாரா
  •  கிராம தலைவர்-- கிராம பெரியவர், குடும்பத்தலைவர்
  •  மகா பிரதிஷா அரண்மனைக் காவலர் தலைவர் 
  • சமையலறை தலைவர்  கத்யதபகிதா
  • ஆயுக்தா உயர்மட்ட பதவி 
  • துடகா ஒற்றர் அமைப்பு
  • இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்ச மண்டலி என்ற குழு நிறுவனத்தை குறிப்பிடுகிறது 
  • உயர் அதிகாரிகள் --அமர்த்தியா, சச்சிவா
  • அரசு ஆவணம் பராமரிப்பு அக்.ஷாபதல நிக்ருதா
  • அரசு கல்வெட்டுகள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்தது 
  • வரி பெயர் -இரண்ய வஹ்தி (கட்டாய உழைப்பு)

நீர்ப்பாசனம் 

  • நாரதர் ஸ்மிருதி நூலில் வெள்ள கால பந்தியா அணைகரையும் பாசனத்திற்கு தேக்க கரா அணைகரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது  என கூறுகிறது 
  • அமர சிம்மர் - ஜல நிர்மா (வடிகால் அமைப்பு)
  • குஜராத் - கிர்ணர் மலை அடிவாரத்தில் சுதர்சனா ஏரி புகழ் பெற்றது
  • விவசாயி அடிமையாக நடத்தப்பட்டனர் 
  • நிலவரி முக்கிய வருவாயாக இருந்தது 

ராணுவம் 

  • பாலாதி கிருத்யா --காலாட்படை தலைவர் 
  • மகாபாலாதி கிருத்யா-- குதிரைப்படைத் தலைவர் 
  • ராணுவ கிடங்கு அலுவலகம் ரண பந்தகர் அதிகாரனா 
  • அதிகாரி அலுவலகம் தண்டபாஷிகா

வணிகம் வர்த்தகம் 

  • வணிகர்கள் 
    • சிரேஷ்டி (உள்நாட்டு வணிகம்) 
    • சார்த்த வாகா (பல்வேறு நாடுகளுக்கு வணிகம் செய்பவர்கள்) 
  • அதிக வட்டி வசூலிக்கப்பட்டத
  • வணிக பொருட்கள் --மிளகு, சந்தனம், யானை தந்தம் , குதிரை,  தங்கம், செம்பு,  இரும்பு  மைக்கா
  •  வணிக நகரங்கள் --பாடலிபுத்திரம், உஜ்ஜயினி, மதுரா, வாரணாசி, 
  • மேற்கு கடற்கரை துறைமுகம் மேலைக் கடற்கரை 
    • கல்யாண், கால்போர்ட் 
    • வணிக சந்தை-மங்களூர், மலபார், சலோப்பானா, நயோபடானா , பக்தோ படானா.
  • கிழக்கு கடற்கரை துறைமுகம் கீழைத் துறைமுகம் 
    • வங்காளம் , தாமிரலிப்தி (பாகியான் சீனப்பயணி குறிப்புகள்) 
  • நாரத ஸ்மிருதி வணிகம் செயல்பாடு அமைப்பு பற்றி கூறுகிறது 
  • பிரகஸ்பதி ஸ்மிருதி தீர்ப்புகள் பற்றி கூறுகிறது 
  • மண்ட்சோர் கல்வெட்டு-வங்கி அமைப்பு , வணிக குழு பற்றி கூறுகிறது 

நாணயங்கள் 

  • தங்கம் வெள்ளி செப்பு நாணயங்களை வெளியிட்டனர் 
  • தங்க நாணயம் அதிகம் 
  • நாணயங்கள் அமைப்பு முறை முதலில் வெளியிட்டவர் 
  • சமுத்திரகுப்தர் எட்டுவகை நாணயத்தை சமுத்திரகுப்தர் வெளியிட்டார் 

கட்டிடக்கலை 

  • கட்டுமான கோயில்களை முதலில் அறிமுகப்படுத்தினார் 
  • பாறை குடைவரைக் கோயில்கள்-- அஜந்தா, எல்லோரா( மகாராஷ்ட்ரா) பாக் கோயில்( மத்திய பிரதேசம்) உதயகிரி (ஒரிசா) 
  • நாகரி, திராவிட பாணி கலைகள் வளர்ச்சி பெற்றன 
  • ஸ்தூபிகள் -சமத் (உத்தரப் பிரதேசம்)  ரத்தினகிரி (ஒடிசா) பீர்பூர்கான் பாக் பதாமி (குவாலியர்) 
  • இந்த ஓவியங்கள் அஜந்தா மத்திய தேசிய ஓவியப் பள்ளியின் சிறந்த ஓவியம் (ஜாதகக் கதைகள்)
  • இலங்கை சிகிரியா ஓவியம் அஜந்தாவின் தாக்கத்தை கொண்டுள்ளது 
  • சுடுமண் (பிரஸ்கோ வகை காணப்படுகிறது)
  •  மண்பாண்டங்கள் முத்திரையில் செய்யப்பட்டது 
  • சிகப்பு நிற காண்டங்கள் 
  • சிறு களிமண் உருவங்கள் 
  • கிடைத்த இடங்கள் -- பஷார், அச்சிசத்திரா, ஹஸ்தினபூர் மற்றும்  ராய்ப்பூர்

சிற்பங்கள் 

  • கல் சிற்பம்
    • சார்நாத் --(புத்தரின் நின்றநிலை சிலை )
    • உதயகிரி --வராக அவதார சிலை 
  • உலோக சிற்பம் 
    • நாளந்தா- பீகார் 18 அடி உயரமுள்ள (புத்தரின் செப்பு சிலை) 
    • சுல்தான்காஞ்ச் --ஏழரை அடி புத்தரின் சிலை (1 டன் எடை கொண்டது)பார்மிங்ஹாம் அருங்காட்சியகம் 

சமஸ்கிருத இலக்கியம் 

  • பிராகிருதம் பேசும் மொழி 
  • சமஸ்கிருத ஆட்சி மொழி, கல்வெட்டு மொழி 
  • பிரம்மி வடிவிலிருந்து தேவநாகரி வரிவடிவம் வளர்ச்சி பெற்றது 

சமஸ்கிருத இலக்கணம் 

  • பாணினி --அஷ்டத்யாயி
  • பதஞ்சலி--மகாபாஷ்யம் 
  • அமரசிம்மன் --அமரகோசம் 
  • சந்திர கோவியர் --சந்திர வியாகரணம் (வங்கப் பகுதியின் சிறந்த பௌத்த அறிஞர்) 
  • ராமாயணம் மகாபாரதம் 18 புராணங்கள் தொகுக்கப்பட்டது 

சுரங்கம் உலோகவியல் 

  • செழிப்பு பெற்ற தொழில் சுரங்கத்தொழில் என அமரசிம்மன், காளிதாசர், வராகமிகிரர் கூறுகின்றனர் 
  • பீகார் (இரும்பு),  ராஜஸ்தான் (செம்பு). மெஹ்ருளி இரும்பு தூண் கல்வெட்டு 
  • பயன்படுத்திய உலோகம்-- இரும்பு ,தங்கம், தாமிரம், தகரம், ஈயம் பித்தளை, செம்பு, மைக்கா, மாங்கனிஸ், மணிவெங்கலம், சிகப்பு சுண்ணாம்பு

மதம் 

  • பௌத்த இலக்கியம் -பாலி மொழியில் இருந்தன பின் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது 
  • எழுத்தாளர் --ஆரிய தேவர், ஆரிய சங்கர்
  • வசுபந்து --தர்க்கவியல் (முழுமையான முதல் பௌத்த நூல்) --சீடர் திக்நாகர் 

சமண இலக்கியம் 

  • பாலி மொழியிலும் இருந்தன -பின் பிராகிருதம்- அதற்குப்பின் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது 
  • விமலா எழுதிய சமண ராமாயணம்
  • சித்த சேன திவாகரா தர்க்க சாஸ்திரம் (சமண நூலின் அடித்தளம்) 

பிராகிருதம் பல வடிவங்கள் 

  • அரசவைக்கு வெளியில் இருந்தது 
  • மதுரா-சூரசேனி வடிவம் 
  • அவுத் பண்டல்கண்--அர்தமாகதி 
  • நவீன பீகார் -மாதி வடிவம் 

நாளந்தா பல்கலைக்கழகம் 

  • முதலாம் குமார குப்தர் காலத்தில் உருவானது மகாவிஹரா என பெயர் பெற்றது 
  • பழுது பார்த்தவர் தர்மபாலர் 
  • நாளந்தா சமஸ்கிருத சொல்லுக்கு அறிவை அளிப்பவர் என பொருள் 
  • ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டில் சிறப்பு பெற்றது 
  • கிபி 1200 வரை இருந்தது (முகமது பின் பக்தியார் கில்ஜி இதனை இடித்தார்)
  • ஹர்ஷரின் பேரரசு காலத்தில் சிறப்பு பெற்றது 
  • பாட்னா 45 கிலோமீட்டர் தொலைவில் பீகாரில் ஷெரிப் நகரில் உள்ளது 
  • எட்டு மகா பாடசாலைகள் இருந்தன 
  • மூன்று நூலகங்கள் இருந்தன 
  • யுவான் சுவாங் நளந்தா பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார் 
  • சீனா, கொரியா,மத்திய ஆசியா, திபெத் மக்கள் கல்வி கற்றனர்

கணிதம் வானியல் மருத்துவம் 

  • பூஜ்ஜியம் கண்டுபிடிப்பு தசம எண் முறை மரபு வழி சொத்து 
  • ஆரியபட்டர் வராகமிகிரர் பிரம்மகுப்தர்-- கணித வானியல் அறிஞர்கள்  (those are great mathematician in Gupta period)
  • ஆரியபட்டர் நூல் --சூரிய சித்தாந்தம் (கிரகணம் பற்றி கூறுகிறது), ஆரிய பட்டியம் (கணிதம், கோணவியல், அல்ஜிப்ரா)
  • தன்வந்திரி -ஆயுர்வேத மருத்துவ நிபுணர் 
  • சரகர் மருத்துவ அறிவியல் அறிஞர் 
  • சுசுருதர்-- அறுவை சிகிச்சை செய்த முதல் இந்தியர் 
  • வராகமிகிரர் --பிருஹத் சம்ஹிதா.(இந்நூல் மருத்துவம், புவியியல், தாவரம், இயற்கை மற்றும்  வரலாறு பற்றியது) பஞ்ச சித்தாந்திகா (ஐந்து வான இயல்) பிருஹத் ஜாதிகா மற்ற படைப்புகள் 
  • பிரம்மகுப்தர் கணிதம் வானவியல் நூல்கள் சித்தார்த்தா கண்டகாத்யகா நூல் 
  • இக்காலத்தில் வாலாபியில் சமண  சமய மாநாடு கூட்டப்பட்டது என வாக்பதர் எழுதியுள்ளார் 
  • சுவேதாம்பரர்ல்களின் சமண விதி இயற்றப்பட்டது

  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.