Type Here to Get Search Results !

இயல் 8 ஆறாம் வகுப்பு எல்லாரும் இன்புற

 எல்லாரும் இன்புற-இயல் 8

ellorum-enpura-tamil-eyal-8
ellorum-enpura-tamil-eyal-8
table of contents(toc)
பராபரக்  கண்ணி

⚔  தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
     செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
     அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
     இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
     எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
     அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே -தாயுமானவர்

 சொல்லும் பொருளும்

  • தண்டருள்     - குளிர்ந்த கருணை 
  • பராபரமே        - மேலான பொருளே 
  • செம்மையருக்கு - சான்றோருக்கு 
  • எல்லாரும்     - எல்லா மக்களும் 
  • ஏவல்             - தொண்டு 
  • அல்லாமல்    - அதைத்தவிர 
  • கூர்                 - மிகுதி 
  • எய்தும்         - கிடைக்கும் 
  • பணி             - தொண்டு

நூல் வெளி

  • தாயுமானவர். திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். 
  • இப்பாடல் தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.இந்நூலைத் "தமிழ் மொழியின் உபநிடதம்" எனப் போற்றுவர். 
  • கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

நீங்கள் நல்லவர்

⚔  வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது
     நேற்றுடன் ஒத்துப்  போகாது

நூல் வெளி

  • கலீல் கிப்ரான் - லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
  •  கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர். 
  • இப்பாடல் கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

பசிப்பிணி போக்கிய பாவை

  • "தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்"   என்றார் பாரதியார். 
  • மணிமேகலை - பூம்புகார் தீவைச் சேர்த்தவள். 
  • மணிபல்லவ தீவிற்கு மணிமேகலையை - மணிமேகலா தெய்வம் அழைத்துச் சென்றது. 
  • தீவதிலகை-புத்த பீடிகையைக் காவல் செய்பவள்.
  • கோமுகி - பொய்கை -  (கோ- பசு) (முகி- முகம்) பசுவின் முகம்போல இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
  • வைகாசித் திங்கள் -முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.
  • அமுதசுரபியில் உணவு இட்டவள் - ஆதிரை.

பாதம்

  • எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். 
  • நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன
  • உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் ற்றும் தாவரங்களின் உரையாடல் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

பெயர்ச்சொல்

  • ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
  1. பொருட்பெயர் 
  2. இடப்பெயர் 
  3. காலப்பெயர் 
  4. சினைப்பெயர் 
  5. பண்புப்பெயர் 
  6. தொழிற்பெயர்

பொருட்பெயர்

  • பொருளைக் குறிக்கும் பெயர். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.  (எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

இடப்பெயர்

  • ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர்.  (எ. கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

காலப்பெயர்

  • காலத்தைக் குறிக்கும் பெயர். (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

சினைப்பெயர்

  • பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர். (எ.கா.) கண், கை, இலை, கிளை.

பண்புப்பெயர்

  • பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர். (எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

தொழிற்பெயர்

  • தொழிலைக் குறிக்கும் பெயர். (எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

  • இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

இடுகுறிப்பெயர்

  • சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று 
  • இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

இடுகுறிப் பொதுப்பெயர்

  • ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) மரம், காடு.

இடுகுறிச் சிறப்புப்பெயர்

  • ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும். (எ.கா.) மா, கருவேலங்காடு.

காரணப்பெயர்

  • சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.  (எ.கா.) நாற்காலி, கரும்பலகை 
  • காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.

காரணப் பொதுப்பெயர்

  • காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) பறவை, அணி

காரணச் சிறப்புப்பெயர்

  • குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி,


⚔  அன்பினில் இன்பம் காண்போம்;
     அறத்தினில் நேர்மை காண்போம்;
     துன்புறும் உயிர்கள் கண்டால்;
     துரிசறு கனிவு காண்போம்;
     வன்புகழ் கொடையிற் காண்போம்;
     வலிமையைப் போரில் காண்போம்;
     தன்பிறப் புரிமை யாகத்
     தமிழ்மொழி போற்றக் காண்போம். - அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்

கலைச்சொல் அறிவோம்

•    அறக்கட்டளை         - Trust
•    தன்னார்வலர்         - Volunteer
•    இளம் செஞ்சிலுவைச்  சங்கம்- Junior Red Cross
•    சாரண சாரணியர்         - Scouts & Guides
•    சமூகப் பணியாளர்         - Social Worker


This blog has full Tamil medium history notes for ellorum enpura eyal 8-6th tamil notes. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.