Type Here to Get Search Results !

இயல் 4 -தமிழ்-கண்ணெனத் தகும்

கண்ணெனத் தகும்-இயல் 4

kannena thagum- eyal-8
kannena thagum- eyal-8
Table of contents (toc)

மூதுரை 

       ⚔  மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
            மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத் 
            தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் 
            சென்ற இடமெல்லாம் சிறப்பு.   - ஒளவையார்

சொல்லும் பொருளும்

  • மாசற              -  குறை இல்லாமல் 
  • சீர்தூக்கின்      -ஒப்பிட்டு ஆராய்ந்து 
  • தேசம்               -நாடு

ஒளவையார் 

  • கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, நல்வழி ஆகிய நூல்களை எழுதியுள்ளார் 
  • மூதுரை என்ற சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்று பொருள் 
  • சிறந்த அறிவுரைகளைக் கொண்டதால்  மூதுரை என்று பெயர்  
  • மூதுரை  31  பாடல்கள் கொண்டது

துன்பம் வெல்லும் கல்வி

       ⚔  ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ 
            ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே.....
            பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
            வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்  -பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

சொல்லும் பொருளும்

  • தூற்றும் படி    - இகழும்படி
  • மூத்தோர்          - பெரியோர்
  • மேதைகள்      – அறிஞர்கள்
  • மாற்றார்           - மற்றவர்
  • நெறி                - வழி
  • வற்றாமல்        - குறையாமல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் 

  • மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்.
  • திரை இசை பாடல்கள் உழைப்பாளிகளின் உயர்வைப் பாடியவர்.

 கல்விக்கண் திறந்தவர்

  • காமராஜர் -கல்விக்கண் திறந்தவர் எனப் பெரியாரால் பாராட்டப்பட்டார்

 காமராசரின் சிறப்புப் பெயர்கள் 

  • பெருந்தலைவர் 
  • கர்மவீரர் 
  • ஏழை பங்காளர் 
  • கறுப்பு காந்தி 
  • தலைவர்களை உருவாக்குபவர்
  • படிக்காத மேதை
காமராசருக்கு அரசு செய்த சிறப்புகள்
  •  மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
  • இந்திய அரசு 1976 இல்,  பாரத ரத்னா விருது வழங்கியது
  • காமராசரின்   சென்னை  மற்றும் விருதுநகர்  இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு  நினைவு இல்லமாக மாற்றப்பட்டது
  • மெரினா கடற்கரையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது 
  • சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
  • கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் (2 .10 .2000) கட்டப்பட்டது.

 நூலகம் நோக்கி

  • ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய  நூலகம் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள  அண்ணா நூற்றாண்டு நூலகம்
  • ஆசியாவிலேயே பெரிய நூலகம் சீனாவில் உள்ளது
  • இந்திய நூலக அறிவியலின் தந்தை -முனைவர் இரா.அரங்கநாதன்
  • சிறந்த  நூலகர்களுக்கு டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
 அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தின் தளங்களும் அதன் பிரிவுகளும்
  1. தரைத்தளம்                -சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள் 
  2. முதல் தளம்                 - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள் 
  3. இரண்டாம் தளம்       - தமிழ் நூல்கள்
  4. மூன்றாம் தளம்          -கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  5. நான்காம் தளம்          - பொருளியல், சட்டம்,  கல்வி, வணிகவியல்
  6. ஐந்தாம்  தளம்            -கணிதம், அறிவியல், மருத்துவம்
  7. ஆறாம் தளம்              -பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  8. ஏழாம் தளம்                -வரலாறு, சுற்றுலா 
  9. எட்டாம் தளம்              -நூலக நிர்வாகப் பிரிவு

 இன எழுத்துக்கள்

  • ஆறு வல்லின மெய் எழுத்துக்களுக்கும் ஆறு மெல்லின மெய் எழுத்துக்களும்  இன எழுத்துக்கள் ஆகும் .எ.கா- திங்கள், மஞ்சள், சந்தனம், மண்டபம், தென்றல்
  • இடையின எழுத்துகள் ஆறும் ஓர் இனமாகும்=ய்-ர், ல்-வ், ழ்-ள் 
  • உயிர் எழுத்துக்களின் இன எழுத்துக்கள்  அ-ஆ, இ -ஈ, உ-ஊ, எ -ஏ, ஐ-இ, ஒ-ஓ, ஒள-உ.
  • உயிர் எழுத்துக்கள்  (அளபெடையில் மட்டுமே நெடில் தொடர்ந்து அதன் இனமாகிய குறிலுடன் வரும்) இணைந்து வராது எ.கா ஓஒதல், தூஉம், தழீஇ
  • ஆய்த எழுத்துக்கு மட்டுமே  இன எழுத்து இல்லை.

       ⚔  யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
            சாந்துணையும் கல்லாதா வாறு-குறள்

       ⚔  ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் 
            நாற்றிசையும் இல்லாத நாடில்லை அந்நாடு 
            வேற்று நாடு ஆகவே ஆமா வாயினால் 
            ஆற்றுணா வேண்டுவது இல்    -பழமொழி நானூறு

கலைச்சொல் அறிவோம்

  • கல்வி                   - education
  • நூலகம்                - library
  • மின் படிக்கட்டு     - escalator
  • மின்னஞ்சல்        - email
  • மின் நூலகம்       - e library
  • குறுந்தகடு           - compact disc CD
  • மின் இதழ்              - e magazine
  • மின்தூக்கி              - lift
  • மின் நூல்               - e-book
  • தொடக்கப்பள்ளி    - primary school
  • மேல்நிலைப்பள்ளி - higher secondary school

This blog has full Tamil kannena thagum eyal 4 notes for 6th tamil notes. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.