Type Here to Get Search Results !

இயல் 7-ஆறாம் வகுப்பு -புதுமைகள் செய்யும் தேசமிது

 புதுமைகள் செய்யும் தேசமிது-இயல் 7

புதுமைகள் செய்யும் தேசமிது

table of contents(toc)

பாரதம் அன்றைய நாற்றங்கால்

  புதுமைகள் செய்த தேசமிது
    பூமியின் கிழக்கு வாசலிது!
    ……….
    அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
    அறத்தின் ஊன்று கோலாக.- தாராபாரதி

பொதுவான குறிப்புகள்

  • தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். 
  • கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.  
  • படைப்புகள் :புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் மற்றும் தாராபாரதியின் கவிதைகள்.

தமிழ்நாட்டில் காந்தி

  • 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். 
  •  அப்போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது.  
  • பெரிய போராட்டத்தைப் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடைபெற்றது. 
  • 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார் 
  • புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். 
  • அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.
  •  காந்தியடிகள் ஒருமுறை காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார்.  கானாடுகாத்தான் என்னும் ஊரில் அன்பர்  ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீடு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. வீட்டில் எங்குப் பார்த்தாலும்  வெளிநாட்டு அலங்காரப் பொருள்கள் நிறைந்து இருந்தன. 
  • காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
  • ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். 
  • திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும். 
  • சென்னையில் 1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. 
  • மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்டுக் காந்தியடிகள் மகிழ்ந்தார்.  
  • இந்தப் பெரியவரின் அடி நிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.

வேலு நாச்சியார்

  • இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலு நாச்சியார் 
  • ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.
  • சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.
  • சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். 
  • காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார்.  
  • வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். 
  • திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார். 
  • ஆலோசனைக் கூட்டத்தின் நடுவே வீரமங்கை வேலுநாச்சியார் அமர்ந்திருந்தார். 
  • அவரைச் சுற்றி அமைச்சர் தாண்டவராயர், தளபதிகளாகிய பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர் 
  • வேலுநாச்சியாருக்கு மைசூரிலிருந்து ஐதர்அலி  5000 குதிரைப் படை வீரர்கள் அனுப்பி உதவி செய்தார் 
  • காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது. 
  • ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர். 
  • விசயதசமித் திருநாள் அன்று கோட்டை கதவுகள் திறக்கப்படும். 
  • அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம் என்றார் வேலுநாச்சியார். 
  • வேலுநாச்சியாரை  காட்டிக் கொடுக்குமாறு உடையாள் என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள். அவர் மறுத்ததால் கொன்றுவிட்டார்கள். 
  • வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர்அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது 
  • வேலுநாச்சியாரின் காலம் 1730-1796. 
  • வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780. 
  • ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்.

நால்வகை சொற்கள்

  • தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். 
  • ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.(எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்

சொல் வகை

  • பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

பெயர்ச்சொல்

  • ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
  • (எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை.

வினைச்சொல்

  • வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். 
  • (எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.

இடைச்சொல்

  • பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். தனித்து இயங்காது.(எ.கா.) உம் – தந்தையும் தாயும், மற்று – மற்றொருவர், ஐ - திருக்குறளை.

உரிச்சொல்

  • பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும் 
  • (எ.கா.) மா – மாநகரம், சால - சாலச்சிறந்தது 

 அறிந்து கொள்வோம்-வ.உ.சி

  • இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். 
  • வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். 
  • அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். 
  • ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
  • 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள்,” சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். 
  • வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். 

தெரிந்து கொள்வோம்-ஓர், ஒரு, அஃது, அது

  • ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. 
  • உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். 
  • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.(எ.கா.) ஓர் ஊர், ஓர் ஏரி, ஒரு நகரம், ஒரு கடல் 
  • இவை போலவே, உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். 
  • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். 
  • (எ.கா.) அஃது இங்கே உள்ளது, அது நன்றாக உள்ளது

கலைச்சொல் அறிவோம்

  • நாட்டுப்பற்று         -      Patriotism   
  • இலக்கியம்             -      Literature 
  • கலைக்கூடம்         -      Art Gallery      
  • மெய்யுணர்வு         -      Knowledge of Reality


This blog has full Tamil medium history notes for pothumaikal cheyum thesamithu eyal-7-6th tamil notes. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.