இயல் 6
8ம் வகுப்பு
வையம் புகழ் வணிகம்
- பெருநீரால்
வாரி சிறக்க! இருநிலத்து
இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார
…..
நாரை பிரியும் விளைவயல்
யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே!- தகடூர் யாத்திரை
சொல்லும் பொருளும்
- வாரி
- வருவாய்
- எஞ்சாமை - குறைவின்றி
- முட்டாது
- தட்டுப்பாடின்றி
- ஒட்டாது
– வாட்டம் இன்றி
- வைகுக
- தங்குக
- ஓதை
-
ஓசை
- வெரீஇ
- அஞ்சி
- யாணர் - புதுவருவாய்
பொதுவான குறிப்புகள்
- ஆசிரியர்
பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
- தகடூர்
- இன்று தர்மபுரி.
இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை.
- இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
மழைச்சோறு
- சிற்றூர்
மக்கள் வீடு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்கி ஊர்ப்
பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர். இத்தகைய கொடிய
பஞ்சத்தை கண்டு தெய்வம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்நிகழ்வு மழைச்சோற்று நொன்பு என்பர்.
- கொங்கு
நாட்டு மழைச்சோற்று வழிபாடு - கட்டுரை -
பதிப்பாசிரியர் அ.கௌரன்
கொங்குநாட்டு வணிகம்
- வண்புகழ்
மூவர் தண்பொழில் வரைப்பு என்று
தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது
சேரர்
- முடியுடைய மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள் என்று கூறுவர்.
- போந்தை
வேம்பே ஆரென
வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்
எனச் சேரரை முன் வைக்கிறது - தொல்காப்பியம் - சேரர்களின்
நாடு =குடநாடு.
- தலைநகர்
-வஞ்சி. இந்நகர்
மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில்
இருந்தது. இதனைக் கருவூர் என்றும்
அழைப்பர்.
- துறைமுகப்
பட்டினங்கள் =தொண்டி, முசிறி,
காந்தளூர்.
- சேரர்களின்
கொடி =விற்கொடி.
- சேரர்களின்
பூ= பனம்பூ.
சேர நாட்டின் எல்லைகள்
- இன்றைய
கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்கள்
- சேலம்,
கோவைப் பகுதிகளுக்குக் கொங்கு நாடு என்று பெயர்.
கொங்கு மண்டலம்
- கார்மேகக்
கவிஞர் - கொங்கு மண்டலச் சதகம் நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை எல்லைகளைக் கொண்டது கொங்குமண்டலம்
எனக் கூறப்படுகிறது.
- இன்றைய
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,
ஈரோடு, நாமக்கல்,
- திண்டுக்கல்
ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர்
மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது கொங்குமண்டலம் என்பர்.
- கொங்குநாட்டுப்
பகுதியைக் காவிரி, பவானி, நொய்யல்,
(ஆன்பொருநை) அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.
வணிகம்
- சேரர்கள்
வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
- செங்குட்டுவனின்
கடற்போர் வெற்றியால் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.
- கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச்
சேரமன்னர்கள் அடக்கினர்.
- முசிறி
சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது.
- முசிறியில்
- ஏற்றுமதி-மிளகு, முத்து, யானைத்
தந்தங்கள், பட்டு, மணி.
- இறக்குமதி-பொன்,
மென்மைமிக்க புடவைகள், சித்திர
வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு,
கோதுமை.
சான்று
- மீனோடு
நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
.........கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து – புறம்
உள்நாட்டு வணிகம்,
- நெல்லே விலையைக் கணக்கிட
அடிப்படையாக இருந்தது என்பர்.
- உப்பும்
நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன,
- நெல்லும்
உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் – (அகம்)
கொங்கு மண்டலப் பகுதிகளில் இன்றைய வணிகம்
நீலகிரி
- கிழக்குத்
தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே
நீலகிரி ஆகும்
- தோட்டப்
பயிர்கள் காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு,
கேரட், முட்டைகோசு தைலமரம் (யூகலிப்டஸ்).
- தொழிற்சாலைகள்:தேயிலைத் தொழிற்சாலைகள். புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை,
துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம்
(யூகலிப்டஸ்) எண்ணெய்த் தொழிற்சாலை
கோயம்புத்தூர்
- கோவன்புத்தூர் என்னும் பெயரே
கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது
- பயிர்கள்
:நெல், வாழை,
கரும்பு, காய்கறிகள், பூக்கள் பயிரிடப்படுகின்றன.
- தொழிற்சாலைகள்:பஞ்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் ஆலைகள்,
திண்டுக்கல்
- பயிர்கள்:
நெல், சோளம், தினை
வகைகள், வாழைப்பழம், காய்கறிகள்
போன்றவை.
- மலர்
உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
- எனவே
தமிழ்நாட்டின் ஹாலந்து என்றும்
சிறப்பிக்கப்படுகிறது.
- அரிசி,
தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த
மாவட்டம்.
- சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள்
புகழ்பெற்றவை.
ஈரோடு
- பரப்பளவில்
ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
- பயிர்கள்:
நெல், நிலக்கடலை, மஞ்சள்,
கரும்பு, பருத்தி, எள்.
- தமிழகத்திலேயே
மஞ்சள் சந்தை ஈரோட்டில் தான்
நடைபெறுகின்றது.
- தொழிற்சாலைகள்:
துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள்,
சர்க்கரை ஆலைகள்
- பிற
தொழில்:. நூல் நூற்பு, துணிகளுக்குச்
சாயம் ஏற்றுதல், அச்சிடுதல், தோல்
பதனிடுதல்.
திருப்பூர்
- இன்று
திருப்பூர் மிகச்சிறந்த பின்னலாடை நகரமாக விளங்குகின்றது
- பயிர்கள்:
நெல், கரும்பு, பருத்தி,
வாழை
- தமிழ்
நாட்டிற்குப் பெரும் வருவாய் தரும் நகரம்.
- இந்தியாவின்
முதல் ஆயத்த
ஆடைப் பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா இங்குள்ளது
- தேசிய
அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள்
நாமக்கல்
- மலைகள்:
பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன்
மலையின் ஒரு பகுதி.
- பயிர்கள்
: நெல், கரும்பு,
சோளம், நிலக்கடலை, பருத்தி,
மலைப்பகுதிகளில் விளையும் திராட்சை, ஆரஞ்சு,
காப்பி, பாக்கு, ஏலம்
போன்றவையும் பயிரிடப்படுகின்றன.
- முட்டைக்கோழி
வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும்
தென்னிந்தியாவிலேயே முதன்மை இடம் வகிக்கின்றன.
- தொழிற்சாலைகள்
:சிமெண்ட் காகிதத் தொழிற்சாலைகள்
- பிற
தொழில்கள்: கைத்தறி நெசவு, வெண்கல
பொருள்கள் செய்தல்.
சேலம்
- மாங்கனி நகரம் என்று சிறப்புப் பெயர்
கொண்டது
- பயிர்கள்:
நெல் பருப்பு வகைகள் பருத்தி கரும்பு மாம்பழம் காப்பி பாக்கு
- இந்தியாவிலேயே ஜவ்வரிசி
அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
- கைத்தறி நெசவு அதிகம் உள்ள
மாவட்டம்
- தொழிற்சாலை
ரசாயன பொருள் அலுமினியம் சந்தன எண்ணெய் வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள்.
- பிற
தொழில்: முலாம் பூசுதல்,
கைத்தறி நெசவு
- ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு இங்கு
உள்ளது.
கரூர்
- வஞ்சி மாநகரம் என்று பெயரும்
உண்டு.
- கிரேக்க
அறிஞர் தாலமி கருவூரை
தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
- பயிர்கள்:நெல், சோளம், கேழ்வரகு, கம்பு மற்றும் கரும்பு.
- தொழிற்சாலைகள்
:கல்குவாரி தொழிற்சாலைகள்
- பிற தொழில்கள்: கைத்தறி நெசவு தோல்
பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப
வேலைகள்.
- பேருந்து கட்டுமானத் தொழிலின்
சிகரம் கரூர்
ஊர்களும் சிறப்பு பெயர்களும்
- தூத்துக்குடி
-முத்து நகரம்
- சிவகாசி
- குட்டி ஜப்பான்
- மதுரை
- தூங்கா நகரம்
- திருவண்ணாமலை
- தீப நகரம்.
காலம் உடன் வரும்
- கன்னிவாடி
சீரங்கராயன் சிவகுமார்
- பிறந்த
ஊர் திருப்பூர் கன்னிவாடி
- 150க்கும் மேற்பட்ட
சிறுகதைகள் எழுதியுள்ளார்
- சிறந்த
சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருதுப் பெற்றவர்
- கன்னிவாடி,
குணச்சித்திரங்கள், உப்புக்கடலை
குடிக்கும் பூனை முதலியன இவர் நூல்கள்.
புணர்ச்சி
- நிலைமொழி
ஈறும் வருமொழி முதலும் இணைவதே புணர்ச்சி.
- முதலில் உள்ள சொல் நிலைமொழி அதனுடன் சேரும் சொல் வருமொழி என்பர்.
- நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் உயிரீற்றுப் புணர்ச்சி சிலை + அழகு = சிலையழகு.(லை = ல்+ ஐ)
- நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் மெய்யீற்றுப் புணர்ச்சி. மண் + அழகு =மண்ணழகு
- வருமொழியின் முதலெழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் உயிர்முதல் புணர்ச்சி. பொன் + உண்டு= பொன்னுண்டு
- வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் மெய்முதல் புணர்ச்சி. பொன் +சிலை பொற்சிலை (சி=ச்+இ).
இயல்பு புணர்ச்சி விகாரப் புணர்ச்சியும்
- நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமுமின்றி இணைவது இயல்பு புணர்ச்சி. தாய் +மொழி =தாய்மொழி. உடல் +ஓம்பல்= உடலோம்பல்
- இரு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலும் மாற்றங்கள் நிகழுமாயின் விகாரப் புணர்ச்சி எனப்படும்
- விகாரப் புணர்ச்சி - தோன்றல்,
திரிதல், கெடுதல் என மூன்று வகைப்படும்
- நிலைமொழியும் வருமொழியும் இணைந்து புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது தோன்றல் விகாரம்- தமிழ் +தாய் = தமிழ்த்தாய்
- நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம்- வில் +கொடி =விற்கொடி.
- நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம்-மனம்+ மகிழ்ச்சி =மனமகிழ்ச்சி
- இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு நாடகம் +கலை = நாடகக்கலை.
- இதில்
மகர மெய் கெட்டு, க் தோன்றும்.
கலைச்சொல் அறிவோம்.
- நூல்
- Thread
- தையல்
- Stitch
- தறி
- Loom
- ஆலை
- Factory
- பால்
பண்ணை - Dairy farm
- சாயம்
ஏற்றுதல் - Dyeing
- தோல்
பதனிடுதல் - Tanning
- ஆயத்த
ஆடை - Readymade Dress