Type Here to Get Search Results !

இயல் 7 8ம் வகுப்பு பாருக்குள்ளே நல்ல நாடு eyal-7-8th-tamizh-parukkulle-nalla-nadu

 இயல் 7
8ம் வகுப்பு
பாருக்குள்ளே நல்ல நாடு

table of contents(toc)

படைவேழம்

  • எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
    எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை
    அதுகொல் என அலறா இரிந்தனர்
    அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே -செயங்கொண்டார்

சொல்லும் பொருளும்

  • மறலி -காலன் 
  • கரி -யானை 
  • தூறு -புதர் 
  • அருவர்- தமிழர் 
  • உடன்றன  -சினந்து எழுந்தன 
  • வழிவர் -  நழுவி ஓடுவர் 
  • பிலம்- மலைக்குகை  
  • மண்டுதல் -நெருங்குதல் 
  • இறைஞ்சினார் - வணங்கினர் 
  • முழை- மலைக்குகை

செயங்கொண்டார்

  • தீபங்குடி ஊரைச் சேர்ந்தவர்
  • முதற் குலோத்துங்க சோழனின் அவைப் புலவர்
  • பரணிக்கோர் சயங்கொண்டான் பலபட்டடை சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.
  • கலிங்கத்துப்பரணி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
  • தமிழில் முதலில் எழுந்த பரணி இதுவே. இது முதலாம் குலோத்துங்கசோழன், அவனுடைய படை தளபதி கருணாகரத் தொண்டைமான் உடைய  கலிங்கப் போர் வெற்றியைப் பேசுகிறது
  • தென்தமிழ் தெய்வ பரணி என்று ஒட்டக்கூத்தர்  புகழ்ந்துள்ளார் 
  • கலிங்கத்துப்பரணி  கலித்தாழிசையால் பாடப்பட்டது.
  • 599 தாழிசைகள் கொண்டது 
  • போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி.

 விடுதலைத் திருநாள்

  • முன்னூறு வருடமாய்
    முற்றுகை யிட்ட
    அந்நிய இருட்டின் - மீரா
  • மீ. இராசேந்திரன் என்னும் இயற்பெயர் உடைய மீரா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அன்னம் விடு தூது என்னும் இதழ் நடத்தியவர். 
  • படைப்புகள்: ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் , கோடையும் வசந்தமும் நூல் கவிதை நூல்.

பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

  • இந்திய அரசு  மிகச் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வழங்கியது.
  • கேரளாவைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு  குடிபெயர்ந்தனர். 
  • 17.1.1917 இலங்கை கண்டியில் பிறந்தார் 
  • பெற்றோர் கோபாலன் -சத்யபாமா. இவர் ஐந்தாவது குழந்தை 
  • தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு குடிபெயர்ந்தனர்.
  • தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தினார்.
  • மதுரை நகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் 
  • தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவினார்.
  • எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு (2017-18) சென்னை மதுரை பேருந்து நிலையம் எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டது
  • இந்திய அரசு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயரிட்டுள்ளது.

அறிவுசால் ஔவையார்

  • சிறியிலை  நெல்லித் தீங்கனி குறியாது
    ஆதல் நின்னத்து அடக்கிச்
    சாதல் நீங்க எமக்கீந் தனையே. - ஔவையார்,

  • இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் 
    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
    கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
    பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
    கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
    உண்டாயின் பதம் கொடுத்து
    இல்லாயின் உடன் உண்ணும்
    இல்லோர் ஒக்கல் தலைவன்
    அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே -ஒளவையார்

வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்

வல்லினம் மிகும் இடங்கள்

  • அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபு பின் எ.கா அந்தப்பக்கம், இந்தப்பக்கம்.
  • எந்த என்னும் வினாத்திரிபு பின். (எ.கா.) எந்தத்திசை? எந்தச்சட்டை?
  • இரண்டாம் வேற்றுமை உருபு' ' வெளிப்படையாக வரும்போது. (எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி.
  • நான்காம் வேற்றுமை உருபாகிய 'கு' வெளிப்படையாக வரும்போது. (எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.
  • இகரத்தில் முடியும் வினையெச்சங்களின் பின். (எ.கா.) எழுதிப் பார்த்தாள். ஓடிக் களைத்தான்.
  • உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் மிகும். (எ.கா.) பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார்.
  • எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும். (எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல்.
  • உவமைத்தொகையில் வல்லினம் மிகும். (எ.கா.) மலர்ப்பாதம், தாய்த்தமிழ்.
  • உருவகத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.
  • எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து -இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.  (எ.கா.) எட்டுப்புத்தகம், பத்துக்காசு.
  • அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து. (எ.கா.) அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?
  • திசைப்பெயர்களை அடுத்து. (எ.கா.) கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு, தெற்குப்பக்கம்.
  • மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் + பாறை = வட்டப்பாறை

வல்லினம் மிகா இடங்கள்

  • எழுவாய்ச் சொற்களை அடுத்து. (எ.கா.)  தம்பி படித்தான், யானை பிளிறியது. 
  • அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) அது சென்றது. இது பெரியது, எது கிடைத்தது?
  • பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து. (எ.கா.) எழுதிய பாடல், எழுதாத பாடல்.
  • இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (2 ம் வேற்றுமைத்தொகை). (எ.கா.) இலை பறித்தேன், காய் தின்றேன்.
  • உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது. (எ.கா.) தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்.
  • வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு
  • அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி- என முடியும் பிறசொற்களைஅ டுத்து வல்லினம் மிகாது.  (எ. கா .) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார். 
  • உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) தாய்தந்தை, வெற்றிலை பாக்கு

கலைச்சொல் அறிவோம்.


  • குதிரையேற்றம்     - questrian            
  • ஆதரவு         - Support
  • கதாநாயகன் - The Hero            
  • வரி                 - Tax
  • முதலமைச்சர்     - Chief Minister        
  • வெற்றி                - Victory
  • தலைமைப்பண்பு- Leadership        
  • சட்ட மன்ற உறுப்பினர் - Member of  Legislative Assembly.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.