Type Here to Get Search Results !

இயல் 9 தமிழ் -10 வகுப்பு அன்பின் மொழி eyal-9-10th-tamil-tnpsc-notes-anbin-mozhi

 

இயல்

தமிழ் -10 வகுப்பு

அன்பின் மொழி

Table of contents(toc)

ஜெயகாந்தம்

·      காலம் =24.04.1934 -08.04.2015,    நினைவு இதழ்

விருதுகள்

·      குடியரசுத் தலைவர் விருது (உன்னைப் போல் ஒருவன் -திரைப்படம்)

·      சாகித்திய அகாதமி விருது (சில நேரங்களில் சில மனிதர்கள் -புதினம்)

·      சோவியத்து நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்) 

·      ஞானபீட விருது, தாமரைத்திரு விருது (பத்மஸ்ரீ) 

ஜெயகாந்தன் நூல்கள்

·      சிறுகதைத் தொகுப்பு -குருபீடம், யுகசந்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன்  வருவாரா, புதிய வார்ப்புகள்.

·      குறும் புதினங்கள் -பிரளயம், கைவிலங்கு, ரிஷி மூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான்?, கருணையினால் அல்ல, சினிமாவுக்குப் போன சித்தாளு

·      திரைப்படமான சில படைப்புகள்  -சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்ஊருக்கு நூறு பேர். உன்னைப் போல் ஒருவன். யாருக்காக அழுதான்

·      மொழிபெயர்ப்புகள்  -வாழ்விக்க வந்த காந்தி (பிரெஞ்ச் மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம், ஒரு கதாசிரியரின் கதை (முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு).

·        சிறுகதை மன்னன் - ஜெயகாந்தன்.

சித்தாளு 

 நாகூர் ரூமி

·      முகம்மது ரஃபி எனும் இயற்பெயர் கொண்டவர் - நாகூர் ரூமி 

·      தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் 

·      கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர், கப்பலுக்குப் போன மச்சான் நாவல்

·      மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன 

·      நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் - கவிதைத் தொகுதிகள் 

தேம்பாவணி 

வீரமாமுனிவர் 

·      கிறிஸ்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு (யோவான்)

·      இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர் 

·      இவர் கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி 

·      வீரமாமுனிவர் இவரைக் கருணையன் எனக் குறிப்பிடுகிறார் 

·      கருணையன் தாயார் எலிசபெத் அம்மையார்

சொல்லும் பொருளும் 

·      சேக்கை         - படுக்கை

·      யாக்கை        - உடல்

·      பிணித்து      - கட்டி

·      வாய்ந்த         - பயனுள்ள 

·      இளங்கூழ்     - இளம்பயிர்

·      தயங்கி           - அசைந்து.

·      காய்ந்தேன்    - வருந்தினேன்

·      கொம்பு          - கிளை 

·      புழை              - துளை

·      கான்               - காடு 

·      தேம்ப              - வாட 

·      அசும்பு           - நிலம் 

·      உய்முறை      - வாழும் வழி 

·      ஓர்ந்து            - நினைத்து

·      கடிந்து           - விலக்கி

·      உவமணி       - மண மலர்

·      படலை           - மாலை

·      துணர்            - மலர்கள்

இலக்கணக்குறிப்பு 

·      காக்கேன்று    -காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

·      கணீர்             -கண்ணீர் என்பதன் இடைக்குறை

·      காய் மணி, உய்முறை, செய்முறை- வினைத்தொகைகள் 

·      மெய் முறை  -வேற்றுமைத்தொகை

·      கைமுறை     -மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

·      அறியேன்      -தன்மை ஒருமை வினைமுற்று ஒலித்து -வினையெச்சம்.

ஆசிரியர் குறிப்புகள்

·      வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப்பை சந்தித்துப் பேச இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக் கொண்டார்.  

·      இவருக்குச் சந்தாசாகிப்இஸ்மத் சன்னியாசிஎனப் பட்டம் வழங்கினார். இதற்குத்தூய துறவிஎனப் பாரசீகத்தில் பொருள்.

பொதுவான குறிப்புகள்

·      தேம்பா +அணி =வாடாத மாலை 

·      தேன் +பா +அணி= தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு 

·      கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை சூசையப்பர் என்னும் வளனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல் 

·      இது 3 காண்டங்கள் 36 படலங்கள் 3615 பாடல்கள் கொண்டது 

·      காலம் 17ஆம் நூற்றாண்டு 

·      வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி 

·      தமிழின் முதல் அகராதி - சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்) பரமார்த்த குரு கதைகள்-படைப்புகள்

ஒருவன் இருக்கிறான் 

கு அழகிரிசாமி

·      கு.அழகிரிசாமி சிறுகதைகள் -ஒரு தலைப்பு -ஒருவன் இருக்கிறான்

·      அரசுப் பணியை விட்டு எழுத்துப் பணியை மேற்கொண்டவர்  கு. அழகிரிசாமி 

·      கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் கு அழகிரிசாமி

முன் தோன்றிய மூத்தகுடி.

·      ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து 
அரசு பட அமர் உழக்கி”-மதுரைக்காஞ்சி 

திருவாரூர் மாவட்டத்தின்  ஆலங்கானம் பற்றிக் கூறுகிறது

அணி இலக்கணம்

·      செய்யுளுக்கு அழகு செய்து சுவையைப் உண்டாக்குவன அணிகள்.

தற்குறிப்பேற்ற அணி 

·      இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை  ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி

·      போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 

வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

தீவக அணி 

·      தீவகம் எனும் சொல்லுக்கு விளக்கு என்று பொருள் ஓர் அறையில் ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல் 

·      செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது

·      இது முதல் நிலைத் தீவகம் இடை நிலைத் தீவகம் கடைநிலை தீவகம் என மூன்று வகைப்படும்

·      சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர் 
எந்து தடந்தோள் இழிகுருதி -பாய்ந்து 
திசைஅனைத்தும், வீர சிலைபொழிந்த அம்பும்
மிசை அனைத்தும் புள்குலமும் வீழ்ந்து.

·     சேந்தன -சிவந்தன 

·     தெவ்- பகைமை 

·     சிலை- வில் 

·     மிசை -மேலே 

·     புள்- பறவை

அணிப் பொருத்தம் 

·      வேந்தன் கண் சேந்தன

·      தெவ்வேந்தர் சேந்தன

·      குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன

·      அம்பும் சேந்தன

·      புள்குலம் வீழ்ந்து மிசை அனைத்தும் சேந்தன

·      இவ்வாறு முதலில் நிற்கும் சேந்தன (சிவந்தன) எனும் சொல் பாடலில் வருகின்ற  கண்கள் தோள்கள், திசைகள்பறவைகள் ஆகியவையோடு பொருந்தி பொருள் தருவதால் இது தீவக அணி ஆயிற்று

நிரல்நிறை அணி 

·      நிரல் =வரிசை நிறை =நிறுத்துதல்

·      சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைந்து பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்

·      அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது

தன்மையணி 

·      எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரியசொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும்.

·      இதனைதன்மை நவிற்சி அணி என்றும் அழைப்பர் 

·      நான்கு வகைப்படும்பொருள் தன்மை அணி, குணத் தன்மை அணி, சாதித் தன்மை அணி, தொழில் தன்மை அணி

·      மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் 
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் -வையைக் கோன் 
கண்டளவே தோற்றான் , அக்காரிகைதன் -சொற்செவியில் 
உண்டளவே தோற்றான் உயிர்-  -சிலம்பு -வழக்குறை காதை வெண்பா.

·      எவ்வகைப் பொருளு மெய்வகை  விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மையாகும் -தண்டியலங்காரம்

மொழி பெயர்ப்பு

·      Education is what remains after one has forgotten what one has learned in school Albert Einstein - (ஒருவர் பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்துவிட்ட பிறகு கல்வி என்பது எஞ்சியிருக்கும்)

·      Tomorrow is Often the Busiest day of the week - (நாளைப் பெரும்பாலும் வாரத்தின் பரபரப்பான நாள்) Spanish proverb

·      It is during our darkest moments that we must focus to see the light -Aristotle- (நமது இருண்ட தருணங்களில் தான் ஒளியைக் காண நாம் கவனம் செலுத்த வேண்டும்) 

·      Success is not final, failure is not Fatal, it is the courage to continue that counts -Winston Churchill- வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி என்பது மரணமல்ல, தொடரும் தைரியம் தான் முக்கியம்  

சேரர்களின் பட்டப்பெயர்கள்

·      கொல்லி மலையமான், வெற்பன்,

·      கொல்லிமலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் மலைப்பகுதிகளில் வென்றவன் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர்

கலைச்சொற்கள் அறிவோம்

·      Humanism                    - மனிதநேயம் 

·      Cultural Boundaries      - பண்பாட்டு எல்லை

·      Cabinet                        - அமைச்சரவை 

·      Cultural values - பண்பாட்டு விழுமியங்கள்

நூல்களும் ஆசிரியர்களும்

·      யானை சவாரி         பாவண்ணன் 

·      கல்மரம்                     திலகவதி

·      அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – ந.முருகேசபாண்டியன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.