இயல் 8
தமிழ் 10 வகுப்பு
பெருவழி
· மன்னன்
மக்களுக்குக் கொடை அளிப்பது பற்றிய சுவரோவியம் 17ஆம் நூற்றாண்டு சிதம்பரம்
சங்க இலக்கியத்தில் அறம்
· சமயக்
கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் - சங்ககாலம்
· சங்ககாலத்திற்குப்
பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர்.
· அறநெறிகால
அறங்கள் சமயம் சார்ந்தது
· சங்க கால
இலக்கியங்கள் இயல்பானவை 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு ' என்று திறனாய்வாளர் ஆர்னால்டு கூறுகிறார்.
· இம்மைச் செய்தது
மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்" - புறம். -ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் கூறுகிறார்
· அறநெறி முதற்றே
அரசின் கொற்றம் அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர் சங்க காலத்தில் உள்ள மன்னர் ஆட்சி செய்யும் முறை பற்றிக் கூறும் பாடல்
· குற்றங்களை
அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் -ஊன்பொதி பசுங்குடையார்.
· நன்றும் தீதும்
ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை- என மதுரைக் காஞ்சி கூறுகிறது.
· செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.
· அறம் கூறும்
அவையம் பற்றி அறம் அறக் கண்ட நெறி மான் அவையம் என்கிறது புறநானூறு
· உறையூரில் இருந்த அற அவையம் தனி சிறப்பு பெற்றது என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
· மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இது துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது
எனக் கூறுகிறது.
· நம்மைவிட வலிமை
குறைந்தரோடு போர் செய்யக் கூடாது என்பதனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.
“எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
எதிர்சென்று எறிதலும் செல்லான்” -புறம்
· செல்வத்தின்
பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” - புறம்.
என்கிறார் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
· எழுவரின் கொடைப்
பெருமையைச் சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் உள்ளது
· ஆற்றுப்படை
இலக்கியங்கள் கொடை இலக்கியங்கள்.
· பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடை பதிவாக உள்ளது
· புறநானூற்றில் கொடை பதிவும் குறிப்பிடத்தக்கது
· வள்ளல்கள்
இல்லோர் ஒக்கல் தலைவன் பசிப்பிணி மருத்துவன் எனப் புகழப்படுகின்றனர்.
· வழங்குவதற்கு
பொருள் உள்ளதா என்பதை பாராமல் கொடுப்பவன் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என நக்கீரர் கூறுகிறார்.
· வள்ளலின் பொருள்
இரவலரின் பொருள், வள்ளலின் வறுமை
இரவலனின் வறுமையெனப் பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார்
· உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என ஒளவையார் கூறுகிறார். இரவலர் வராவிட்டாலும் அவர்களைத்தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்
· பேகன் மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர்
· தன்னைத் நாடி வந்த
பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, நாட்டை
இழந்ததற்கு மேல் துன்பம் தரும் எனக் கருதுபவன் குமணன் எனப் பெருந்தலை சாத்தனார் கூறுகிறார்
· எல்லாவற்றையும்
கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை - கபிலர் பாராட்டுகிறார்.
· ஈயாமை இழிவு
இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேல் எனக் கலித்தொகை கூறுகிறது
· தான் பெற்றதை
பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது (புலவரின் வள்ளல் தன்மை).
· உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்கிறார் ஈழத்து பூதன் தேவனார்.
· பிறர் நோயும்
தம் நோய் போல் போற்றி
அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் -கலித்தொகை
·
பிறர் துன்பத்தைத் தம் துன்பம் கருதி உதவுதல் பற்றி நல்லாந்துவனார் குறிப்பிடுகிறார்.
· உண்மையான
செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்கிறார் நல்வேட்டனார்
· சான்றோர்
செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’ என -நற்றிணையில் பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்.
· செல்வம் என்பது
சிந்தையின் நிறைவு என்கிறது தமிழ் சங்க இலக்கியம்
· நிறைவடைகிறவனே
செல்வன் என்கிறது சீன நாட்டு தாவோயியம்.
· வாய்மையை பேசும்
நாவே உண்மையான நா என்ற கருத்தை "பொய்யா செந்நா" , "பொய்படுறியா வயங்கு செந்நா "என இலக்கியங்கள் கூறுகிறது
· பிழையா நன்மொழி என்று வாய்மையும் பொய்மொழி கொடுஞ் சொல் எனப் பொய்யையும் குறிப்பிடுகிறது நற்றிணை
குறிப்புகள்
· போதிதர்மர் கிபி ஆறாம் நூற்றாண்டு காஞ்சி நகரின் சிற்றரசன்
· இவர் புத்த மதத்தைப் பரப்பச் சீனா சென்றார்.
· இவர் பரப்பிய
கொள்கையிலிருந்து உருவானதே ஜென் தத்துவம்
· இது ஜப்பான்
முதலிய நாடுகளில் செழித்து வளர்ந்தது.
ஞானம்
தி. சொ. வேணுகோபாலன்
· தி. சொ .
வேணுகோபாலன் இன் கவிதை தொகுப்புகள் மீட்சி விண்ணப்பம், கோடை வயல்
· இவர்
திருவையாற்றில் பிறந்தவர்
· மணிபால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்
· எழுத்து காலம் புது கவிஞர்களில் ஒருவர்.
காலக்கணிதம்
கண்ணதாசன்
· கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
· பிறப்பு
சிவகங்கை சிறுகூடல்பட்டி சிற்றூர்.
· பெற்றோர் சாத்தப்பன் - விசாலாட்சி
· கலங்காதிரு மனமே பாடல் –மூலம் 1949 ல் திரை உலகில்
அறிமுகம்
· சிறந்த
கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்
· சேரமான் காதலி என்றும் புதினத்திற்காகச் சாகித்திய அகாடமி விருதுப் பெற்றவர்
· தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
ராமானுஜர்
· பூரணர் -
திருமந்திர உபதேசம் அளித்தது = இராமானுசர், கூரேசர், முதலியாண்டான்.(திருக்கோட்டியூர்)
· நாளுக்கு
ஒருமுறை - செண்பகம்
· ஆண்டுக்கு
ஒருமுறை - பிரம்மகமலம்
· 12 ஆண்டுக்கு ஒரு முறை -குறிஞ்சி
· தலைமுறைக்கு ஒரு
முறை -மூங்கில் அதேபோல் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர் ஞானிகள்.
முன்தோன்றிய மூத்தக்குடி
· கூர்வேல் குவைஇய
மொய்ம்பின்
தேர்வண் பாரி தண் பறம்பு நாடே -புறநானூறு
·
சிவகங்கையின் பிரான்மலை பரம்புமலை பற்றிக் கூறுகிறது
பாவகை
· எழுத்து அசை, சீர், தளை, அடி, தொடை- என ஆறு உறுப்புக்கள் கொண்டது யாப்பு.
· வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா. வஞ்சிப்பா
· ஓசை - செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என 4 வகைப்படும்
செப்பலோசை
· வெண்பாவிற்கு
உரியது.
· அறம் கூறும் குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன
அகவலோசை
· அகவல் ஓசை
ஆசிரியர்பாவுக்கு உரியது.
· இலக்கண கட்டுக்கோப்பு குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா எனும்
ஆசிரியர் பா
· சங்க
இலக்கியங்களும் சிலப்பதிகாரம் மணிமேகலை பெருங்கதை ஆகிய காவியங்களும் அகவற்பாவில்
அமைந்தவை
துள்ளலோசை
· செய்யுளின்
இடையிடையே உயர்ந்து வருவது துள்ளலோசை
· இது கலிப்பாவுக்கு உரியது
தூங்கலோசை
· வஞ்சிப்பாவுக்கு உரியது
பா வகைகள்
· குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என ஐந்து வெண்பாக்கள் உள்ளன
· நேரிசை
ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில
ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என நான்கு வகை ஆசிரியர் பாக்கள் உள்ளன
பொது இலக்கணம் |
வெண்பா |
ஆசிரியப்பா
அகவற்பா |
ஓசை |
செப்பலோசை
பெற்று வரும் |
அகவலோசை
பெற்று வரும் |
சீர் |
ஈற்றடி
முச்சீர் ஆகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும் |
ஈரசைச்சீர்
மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும் |
தளை |
இயற்சீர்
வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே
பயின்று வரும் |
ஆசிரியத்தளை மிகுதியாகவும்,
வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும்
வரும் |
அடி |
2 அடி முதல் 12 அடி வரை அமையும் (கலிவெண்பா பதிமூன்று அடிக்குமேல் வரும்) |
3 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும் |
முடிப்பு |
ஈற்றுச்சீர் -
நாள், மலர், காசு, பிறப்பு என்னும்
வாய்பாட்டில் முடியும் |
ஏகாரத்தில்
முடித்தல் சிறப்பு |
குறள் வெண்பா
· வெண்பாவின் பொது
இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாக வரும்
· முதலடியில் நான்கு சீராகவும் அளவடி
· இரண்டாம் அடி மூன்று சீராகவும் சிந்தடி வரும்
யாப்போசை தரும் பாவோசை
· செப்பலோசை இருவர் உரையாடுவது போன்ற ஓசை
· அகவலோசை ஒருவர் பேசுதல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
· துள்ளலோசை கன்று துள்ளினாற்போலச் சீர்தோறும் துள்ளி வரும் ஓசைஅதாவது
தாழ்ந்து உயர்ந்து வருவது
· தூங்கலோசை சீல் தோறும் துள்ளாது தூங்கிவரும் ஓசை தாழ்ந்தே வருவது -யாப்பதிகாரம் புலவர் குழந்தை
உலகத்தோ டொட்ட
வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா
தார்
· உல/கத்/தோ = நிரை நேர் நேர் = புளிமாங்காய்
· டொட்/ட =
நேர் நேர் = தேமா
· வொழு/கல் = நிரை நேர் =
புளிமா
· பல/கற்/றும் =நிரை நேர் நேர் =புளிமாங்காய்
· கல் / லார் =நேர் நேர் =
தேமா
· அறி/விலா =நிரை நிரை =
கருவிளம்
· தார் = நேர் = நாள்
·
மரம் தேடிய களைப்பு
மின்கம்பியில்
இளைப்பாறும் குருவி -நாணற்காடன்
·
விற்பனையில்
காற்று பொட்டலம்
சிக்கனமாய் மூச்சு விடவும் -புதுவைத் தமிழ்நெஞ்சன்
·
கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே……
…. ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்த அருளே -வள்ளலார்
கலைச்சொற்கள் அறிவோம்
· Belief -நம்பிக்கை
· Renaissance -மறுமலர்ச்சி
· Philosopher -மெய்யியலாளர்
· Revivalism -மீட்டுருவாக்கம்
நூல்களும் ஆசிரியர்களும்
·
அறமும் அரசியலும் - மு வரதராசன்
·
அபி கதைகள் - அபி
·
எண்ணங்கள் -எம் எஸ் உதயமூர்த்தி