Type Here to Get Search Results !

இயல் 7 தமிழ் பத்தாம் வகுப்பு விதை நெல் eyal-7-10th-tnamil-tnpsc-notes-vithai-nel

 

இயல்

தமிழ் பத்தாம் வகுப்பு

விதை நெல்

Table of contents(toc)

  • மேற்கத்தியர் மேற்கொண்ட கடல் வழி குதிரை வணிகம் பற்றிய சுவரோவியம் 17ம் நூற்றாண்டு, திருப்புடைமருதூர்

சிற்றகல் ஒளி

மா. பொ. சிவஞானம்

·      1906ஆம் ஆண்டு காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற போராட்டத்தைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்

·      1906ஆம் ஆண்டு வ. உ .சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்

·      ஜூன் 26 1906 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு வட்டம் சால்வன் குப்பம் என்ற பகுதியில் மா.பொ.சி பிறந்தார் 

·      தந்தை தாய் பொன்னுசாமி - சிவகாமி

·      பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்

·      சரபையர் என்ற முதியவர் இட்டபெயர் சிவஞானி

·      இதுவே பின்னாளில் சிறு திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது

·      மூன்றாம் வகுப்பு வரை பயின்றார் சிவஞானம்

·      சிறுவயதில் அம்மானைப் பாடல்கள், அல்லி அரசாணி மாலை, சித்தர் பாடல்களை விரும்பி மனனம் செய்தேன்

·      ஒருவர் அறிவு பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன 

    • ஒன்று கல்வி 
    • மற்றொன்று கேள்வி 

·      மா .பொ. சி கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் ஆவார்.

பேராயக்கட்சி ( காங்கிரஸ் கட்சி)

·      மா பொ சி - 1931ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் காலத்தில் காங்கிரசில் இணைந்தார்

·      இவருக்கு 30.09.1932ல் 'தமிழா ! துள்ளி எழு' என்ற தலைப்பில் துண்டறிக்கை விநியோகித்ததற்காக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

·      ஆகஸ்டு 8ம் நாள் 1942  முக்கிய நாள் ஆகும் 'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானம் பேராயக் கட்சியால் பம்பாயில் நிறைவேற்றப்பட்டது. 

·      இதன் காரணமாக மா.பொ.சி -யை ஆகஸ்டு 13ம் நாள் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். உடன் காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம் இருந்தனர் 

·      அங்கிருந்து அமராவதி சிறைக்கு மாற்றினர். அச்சிறையின் மேற்கூரை துத்தநாகத் தகடுகளால் வேயப்பட்டிருந்தது

·      அது கோடையில் 120 பாகை அளவில் வெயில்காயும்.

·      வடக்கு எல்லை மீட்சிக்கான  1947-8 - 15 - சென்னையில் விடுதலை விழாக் கொண்டாட்டம்.

·      முதல் முயற்சியாக ஆசிரியர் மங்கலங்கிழார் (55) என்ற தமிழ் அறிஞரின் அழைப்பினால் வடக்கெல்லை சென்றார் மா.பொ.சி ( இதுவே பின்னாளில் வடக்கெல்லை போராட்டத்தின் முதல் தொடக்கம்) 

·      தமிழரசுக் கழகம் சென்னையிலும் திருத்தணியிலும் தமிழர் மாநாடு நடத்தி, சித்தூர்,புத்தூர், திருத்தணி ஆகிய வடக்கெல்லையை மீட்க போராட்டம் நடத்தியது

·      இப்போராட்டத்தின் போது மா,பொ. சி, மங்கலங்கிழார், விநாயகம், ஈ.எஸ்.தியாகராஜன், ரஷீத் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

·      ராஜமுந்திரி சிறை- திருவாலங்காட்டு கோவிந்தராஜன் , பழனி சிறை- மாணிக்கம் இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர்

·      சர்தார் கே.எம்.பணிக்கர் தலைமையில் மொழிவாரி ஆணையம், சித்தூர் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது.

·      மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றம் ஆவது எங்களுக்கு வேண்டும்என்று முழங்கினார்

·      இதன் விளைவாக படாஸ்கர் ஆணையம் அமைக்கப்பட்டு திருத்தணி வரை உள்ள தமிழ்  நிலம் மீட்கப்பட்டது.

·      தமிழ் இனத்தை ஒற்றுமைப்படுத்த ஓர் இலக்கியம் உண்டெனில் அது சிலப்பதிகாரம் என்று சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானம் கூறுவார்.

·      சென்னை ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்படுவது எதிர்த்து அன்றைய முதலமைச்சர் இராஜாஜி பதவி விலகினார்

·      சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்கான அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய தலைவர் நீதிபதி வாஞ்சு

·      மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டம் கூட்டி சென்னையை பற்றி தீர்மானம் முன்மொழியப்பட்டது. "தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் " என்றார்

·      நடுவன் அரசு 25.03.1953 சென்னை தமிழகத்துடன் இருக்கும் என்று நேரு உறுதியளித்தார்.

தெற்கெல்லை போராட்டம்

·      அக்டோபர் 25 1946 நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியான வடிவீஸ்வரம் வடிவை வாலிபர் சங்கத்தில் அவர் உரையாற்றினார்

·      ஆண்டு 1953-54 ஆண்டுகளில்  தெற்கெல்லை பகுதிகளை கேரள திருவிதாங்கூர் ஆட்சியில் இருந்து மீட்க போராடினோம்.

·      தெற்கெல்லை போராட்டத்தில் முக்கியமானவர்கள் பி.எஸ். மணி, ம.சங்கரலிங்கம் , நாஞ்சில் மணிவர்மன் ,பி.ஜே. பொன்னையா, நதானியல், தாணுலிங்கம், காந்திராமன்,

·      தெற்கில்லை போராட்டத்தால் திருவிதாங்கூர் அரசின் துப்பாக்கிச் சூட்டில் தமிழரசுக் கழகத் தோழர் தேவசகாயம், செல்லையா இறந்தனர்

மார்சல் ஏ நேசமணி  

·      வழக்கறிஞர், போராட்ட வீரர்,நாகர்கோவில் நகர மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகள் இவர் வகித்துள்ளார் 

·      குமரிமாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் இதனால் மார்சல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 

·      நவம்பர்- 1 -1956 கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது 

·      இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபம் அமைத்தது.

·      தேவிகுளம், பீர்மேடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நாகர்கோவில், கோவையின் மேற்குப் பகுதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், உதகமண்டலம், கேரளாவுடன் இணைய வேண்டும் என்று பசல் அலி ஆணையத்திடம்  கேரளத்தவர் விண்ணப்பித்தனர். 

·      1955 அக்டோபர் 10 பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் கேரளத்தோடும் திருவிதாங்கூர்-கொச்சி ராஜ்யத்தில் இருந்த கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை தமிழ்நாட்டுடன் இணைய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

·      ஆனால் தேவிகுளம், பீர்மேடு கேரளாவிற்கு சென்றது.

·      புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கு எல்லை வடவேங்கடம் முதல் தென்குமரி- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

கடல் கடந்த தமிழ் வணிகம்

·      ஆஸ்திரியா நாட்டுத் தலைநகர் வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட கையெழுத்து சுவடி ஒன்று உள்ளது

·      இது சேர நாட்டு முசிறி துறைமுகத்தில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்கர்  வணிகருக்கும் இடையிலான ஒப்பந்தம்.  இதன் காலம் கிபி 2 ம் நூற்றாண்டின் இடைப்பகுதி

பொதுவான குறிப்புகள்

·      எனது போராட்டம்- மா.பொ. சிவஞானத்தின் வரலாற்று நூல் ஆகும்

·      சிலம்பு செல்வர் எனப் போற்றப்படுபவர் மா. பொ. சி (1906-1995)

·      விடுதலை போராட்ட வீரர், 1952 முதல் 1954 வரை சட்ட மேலவை உறுப்பினர் 1972 முதல் 1970 வரை சட்ட மேலவை தலைவராக இருந்துள்ளார் மா. பொ. சி. தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர்

·      வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்

·      தமிழக அரசு திருத்தணியில் சென்னை தியாகராயநகரில் இவருக்குச் சிலை அமைந்துள்ளது

ஏர் புதிதா?

கு.ப.ராஜகோபாலன்

·      வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரை திங்களில் நடத்தப்படும்  "பொன் ஏர் பூட்டுதல் "தமிழர் பண்பாட்டின் மகுடம்

·      கு.ப.ரா. படைப்புகள் என்ற நூலிலிருந்து ஏர் புதிதா?

·      கும்பகோணத்தில் - 1902 பிறந்தார் கு.ப.ராஜகோபாலன்

·      சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடகாசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்

·      தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் - என்ற இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்

·      இவர் மறைவுக்குப் பின் இவரின் படைப்புகளுள்  அகலிகை, ஆத்ம சிந்தனை நூல்கள் தொகுக்கப்பட்டன


மெய்க்கீர்த்தி

இரண்டாம் ராஜராஜ சோழன்

·      சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து  பாடல்களின் இறுதியில் உள்ள பதிகங்கள் இதற்கு  முன்னோடி.  அரசரின் பெருமை பற்றிப் பல்லவர்கள் கல்வெட்டு, பாண்டியர்கள் செப்பேடு, இது சோழர் காலத்தில் மெய்கீர்த்தியெனப் பெயர் பெற்றது

·      இராஜராஜன் காலத்து தமிழ் கல்வெட்டு தஞ்சை பெரிய கோவில் 11ம் நூற்றாண்டு

·      கோப்பரகேசரி திரிபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டம் பெற்றவர் இரண்டாம் ராஜராஜ சோழன்

·      இரண்டாம் ராஜராஜ சோழனின் மெய்க் கீர்த்திகள் - 2 அதில் ஒன்று 91  வரிகள் கொண்டது 

·      முதலாம் ராஜராஜன் காலம்தொட்டு மெய்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன 

·      மெய்கீர்த்திகளே முதல் பகுதியில் இடம் பெறும். இவை புலவர்களால் எழுதப்பட்டு  கல் தச்சர்களால் பொறிக்க பட்டது. 

சிலப்பதிகாரம் 

இளங்கோவடிகள்

·      வண்ணமும் சுண்ணமும் தண் நறுஞ் சாந்தும்
பூவும் புகையும் மேவிய விரையும் 
……சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு
மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கம்

·      இளங்கோவடிகள் புகார் நகர் மருவூர்பாக்கம் பற்றி இவ்வாறு கூறுகிறார்

சொல்லும் பொருளும்

·      சுண்ணம்           = நறுமண பொடி

·      காருகர்               =நெய்பவர் (சாலியர்)

·      தூசு                     =பட்டு

·      துகிர்                    =பவளம்

·      வெறுக்கை        =செல்வம்

·      நொடை             =விலை 

·      பாசவர்                =வெற்றிலை விற்பவர் 

·      ஓசுநர்                 =எண்ணெய் விற்பவர்

·      மண்ணுள் வினைஞர் =ஓவியர்

·      மண்ணீட்டாளர் =சிற்பி

·      கிழி                      =துணி

இலக்கணக்குறிப்பு 

·      வண்ணமும் சுண்ணமும்    =எண்ணும்மை 

·      பயில்தொழில்                         = வினைத்தொகை

·      மயங்கிய                                   =பெயரெச்சம்

ஐம்பெரும் காப்பியம் முறை வைப்பு

·      சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் 
கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா 
வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் 
திளையாத குண்டலகே சிக்கும்         -திருத்தணிகையுலா 

பெருங்குணத்துக் காதலாள்  நடந்த பெருவழி

·      காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து கண்ணகி கோவலனுடன் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் என்ற இடத்தை அடைந்தனர்

·      மதுரைக்கு செல்லத் தென்னவன் சிறுமலை வலப்பக்கம் ஒரு வழியும் தென்னவன் சிறுமலை இடப்பக்கம் திருமால் குன்றம்(அழகர் மலை) வழியாக இரண்டாம் வழியும் இரண்டுக்கும் இடைப்பட்ட காடுகள் வழியாக மூன்றாம் வழியும் உள்ளது 

·      இவைகளில் கண்ணகி இடைப்பட்ட மூன்றாம் வழி வழியாக மதுரையை அடைந்தார் மதுரையில் கணவனை இழந்த கண்ணகி மதுரையிலிருந்து வைகை தென்கரை வழியே நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கை கானல் என்னும் இடத்தை அடைந்தாள்

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் 

·      உரைநடை பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை. உரைநடை போக்கில் அமைந்திருக்கும் பாட்டு

·      ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று

·      முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று சிறப்பிக்கப்படுகிறது 

·      புகார் காண்டம், மதுரைக் காண்டம். வஞ்சிக் காண்டம், என மூன்று காண்டங்களையும் 30 காதை உடையது 

·      கோவலன், கண்ணகி ,மாதவி வாழ்க்கையை பாடுவது 

·      மணிமேகலை காப்பியத்தின் கதை தொடர்பு கொண்டது இவை இரண்டும் இரட்டை காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது 

·      சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் சேர மரபைச் சேர்ந்தவர் .

·      மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலை சாத்தனார் கோவலன் கண்ணகி கதை கூறி "அடிகள் நீரே அருளுக " என்றதால் இளங்கோவடிகளும்" நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று காப்பியத்தைப் பாடினார். 

 

மங்கையராய் பிறப்பதற்கே

எம்எஸ் சுப்புலட்சுமி

·      இசைப் பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் எம் எஸ் சுப்புலட்சுமி 

·      முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி.

·      சென்னை 17ம்  வயதில் மியூசிக் அகாடமியில் மேதைகள் பலர் முன் கச்சேரி செய்து பாராட்டு பெற்றார். மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

·      காற்றினிலே கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் பாடல்கள் முக்கிய வரவேற்பு பெற்றன.

·      டெல்லியில் காந்தியடிகளை சந்தித்து ரகுபதி ராகவ ராஜா ராம் என்ற பாடலைப் பாடினார்.  அவர்  மீரா எழுதிய பாடல் ஒன்றை பாட சொன்னார். அதைக் கற்றுக்கொண்டு சென்னை வானொலியில் 1947 காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று பாடி ஒலிபரப்பபட்டது.அப்பாடல்ஹரி தும் ஹரோ எனும் மீரா பஜன்   

·      இவருக்கு 1954 -தாமரையணி விருது (பாராட்டிய பார்வை இழந்த பெண் ஹெலன் கெல்லர்)

·      இவர் 1963 இங்கிலாந்திலும் 1966 ஐ.நா அவையிலும் பாடினார்.

·      இவர் குரலில் 1966ல் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதி கோவிலில் ஒலிக்கத் தொடங்கியது

·      எம்எஸ் சுப்புலட்சுமி 1974 - மகசேசே விருது (நோபல் பரிசுக்கு இணையான ) இவ்விருது பெற்ற முதல் இசைக்கலைஞர்

·      தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்

·      இந்திய மாமணி (பாரத ரத்னா) விருதுப் பெற்றவர்

பாலசரஸ்வதி 

·      இந்திய அரசின் தாமரை செவ்வணி விருதுப் பெற்றவர்

·      காஞ்சிபுரத்தில் - 7 வயதில்  பரதநாட்டியம் முதல் அரங்கேற்றம்

·      15 வயதில் சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் நடன அரங்கேற்றம்

·      நடன நாட்டிய கச்சேரியைப் பார்த்த பண்டிட் ரவி சங்கர் பாராட்டினார்

·      கல்கத்தா மற்றும்  காசி இல் நடந்த அனைத்து இந்திய இசை மாநாடு மற்றும் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சி ஆகியவற்றில் ஜனகனமன விற்காக நாட்டியம் ஆடினார்.

·      டோக்கியோவில் உள்ள 'கிழக்கு மேற்கு சந்திப்பு' நிகழ்வில் இந்தியாவின் சார்பாக நடனம் ஆடினார்.

ராஜம் கிருஷ்ணன்

·      வேருக்கு நீர் எனும் புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்

·      பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி -பாரதியின் வாழ்க்கை வரலாற்று புதினம்

·      தூத்துக்குடி உப்பள தொழிலாளர்கள் வாழ்க்கை -கரிப்பு மணிகள் புதினம்

·      நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்க்கை - குறிஞ்சித்தேன் புதினம்

·      மீனவர் வாழ்க்கை - அலைவாய்க் கரையில்

·      அமைப்பு சாரா வேளாண் தொழிலாளர்கள்  மீது சுரண்டல்கள் பற்றியது -சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர் 

·      குழந்தை தொழிலாளர்கள் - கூட்டுக் குஞ்சுகள் புதினம்

·      பெண் குழந்தை(சிசுக்கொலை)  மண்ணகத்துப் பூந்துளிகள் புதினம்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

·      மதுரையின் முதல் பட்டதாரி பெண் 

·      இந்திய அரசின்  தாமரைத்திரு விருது 

·      சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது

·      காந்தியின் சர்வோதய இயக்கத்தின் களப்பணி ஆற்றினார் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார்

·      விடுதலைக்குப் பின் கணவருடன் இணைந்து 'பூதானஇயக்கத்தில் பணிபுரிந்தார்.

·      உழுபவருக்கே நிலம் உரிமை இயக்கம் (LAND FOR THE TILLER'S FREEDOM -LAFTI) தொடங்கினார்

·      காந்தியடிகளுடனும் வினோபாபாவேயுடனும் இணைந்து பணியாற்றியவர் கிருஷ்ணம்மாள்

மதுரை சின்னப்பிள்ளை

·      கண்மாய் மீன் பிடிக்கும் குத்தகையை கொடுத்தவர் மதுரை மாவட்ட கலெக்டர் 

·      பெண்களைக் குழு மூலம் வாழ்க்கையில் முன்னேறச் செய்தவர் மதுரை சின்னப்பிள்ளை.

·      மதுரை சின்னப்பிள்ளை அமைத்த மகளிர் குழுவின் பெயர் 'களஞ்சியம்' 

·      வாஜ்பாய் அவர்களின் கையால் பெண் ஆற்றல் விருதுஸ்திரீ சக்தி புரஸ்கார் 

·      தமிழக அரசின் ஒளவை விருது 

·      தூர்தர்ஷனின் பொதிகை வருது

·      அண்மையில் தாமரை விருது (பத்மஸ்ரீ) பெற்றார்


புறப்பொருள் இலக்கணம்

·      வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்    - பழம் பாடல்

 

·      புறத்திணைகள் வெட்சி முதலாக 12வகைப்படும்

வெட்சி திணை  

·      ஆநிரை கவர்தல்

·      வெட்சிப்பூ இட்லிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது

கரந்தை திணை 

·      கவர்ந்து செல்லப்பட்ட  ஆநிரைகளை மீட்க செல்பவர்

·      நறுமணம் மிக்க இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிகப்பு ஆகிய நிறங்களில் இருக்கும் இதனைக் கொட்டை கரந்தை என்றும் அழைப்பர்

வஞ்சித்  திணை 

·      பகைவர் நாட்டைக் கைப்பற்ற கருதி வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்லுவர்

·      வெள்ளிய பஞ்சு போன்ற  நுண் மயிர் அடர்ந்துள்ள  வஞ்சி பூ

காஞ்சித்திணை 

·      தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றுவரோடு எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை

·      நீல நிற அழகான மணமுள்ள காஞ்சி என்பது குறுமரம்

நொச்சித் திணை 

·      மதில் காத்தல்

·      மருத நிலத்திற்குரிய நொச்சி நீல நிற பூக்கள் கொண்டது மணிநொச்சி கருநொச்சி மலைநொச்சி வெண்ணொச்சி என்பன இவை வகைகள். 

உழிஞைத் திணை 

·      மதில் வளைத்தல்

·      பகை அரசரின் கோட்டையை முற்றுகை இடுதல்

·      மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள் முடக்கத்தான் (முடக்கொற்றான்) எனக் கூறப்படுகிறது வேலியில்படரும் ஒருவகை கொடி.

தும்பைத் திணை  

·      பகை வேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட வீரர்களுடன் போர் செய்வது. 

·      தூய வெண்ணிற மலர் கொண்ட சிறு செடி தும்பை

வாகைத்திணை 

·      போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடிக் கொள்வது வாகைப்பூ

·      மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்தான பூ வாகை

பாடாண் திணை

·      பாடுவதற்கு தகுதியுடைய  ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை ஆகியவற்றை போற்றி பாடுவது பாடாண் திணை. பாடு+ஆண்+திணை =பாடாண் திணை.

பொதுவியல் திணை

·      வெட்சி முதல் பாடாண் ஈறாகப் புறப்பொருட்களில் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது பொதுவியல் திணை

கைக்கிளை 

·      ஒருதலைக் காமம் 

பெருந்திணை 

·      பொருந்தாக் காமம்

 

·      பேரரசனது மெய்  புகழை எடுத்துக்கூறுவது மெய் கீர்த்தி

·      முதல் ராஜராஜனுடைய எட்டாம் நூற்றாண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது 

·      இதன்கண் வமிச பரம்பரியம் விரிந்து ஓதப்படுவதில்லை

·      அதன் பிறகு வந்த மெய்க்கீர்த்திகளில் வமிச பரம்பரையை மிகவும் விரிந்து கூறியுள்ளன

·      ஏர் பிடிக்கும் கைகளுக்கு 
வாழ்த்து கூறுவோம் வறுமை 
ஏகும் வரை செய்பவர்க்கே  
வாழ்த்து கூறுவோம்  என்றும் 
ஊர் செழிக்க தொழில்செய்யும் உழைப்பாளிகள் வாழ்வு 
உயரும் வகை   செய்பவர்க்கே 
வாழ்த்து கூறுவோம்    - கவி கா.மு ஷெரீப்

 

ஊர் பெயர்களின் மரூஉவை எழுதுக

·      புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், உதகமண்டலம், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை

·      எ.கா: தஞ்சாவூர்-தஞ்சை

·      வீறு கொண்டு முன்னேறும் காலாட்படை குதிரைப்படை யானைப்படை பற்றிய சுவரோவியம் 17ம் நூற்றாண்டு, திருப்புடைமருதூர்- திருநெல்வேலி

 கலைச்சொற்கள் அறிவோம்

·      Consulate  -துணை தூதரகம் 

·      Patent      -காப்புரிமம் 

·      Document - ஆவணம் 

·      Guild         -வணிகக்குழு 

·      Territory   -நிலப்பகுதி

·      Irrigation   -பாசனம்.

நூலும் ஆசிரியரும்

·      என் கதை- நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் 

·      வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்.

·      நாற்காலிக்காரர் -நா முத்துசாமி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.