Type Here to Get Search Results !

இயல் 6 தமிழ்-10 வகுப்பு நிலா முற்றம் eyal-6-10th-tamizh-tnpsc-notes-nilaa-muttram

 

இயல் 6

தமிழ்-10 வகுப்பு

நிலா முற்றம்


Table of contents(toc)

·     
இசைக் கலைஞர் பற்றிய சுவரோவியம்  இடம்பெற்ற காலம் மற்றும் இடம் = 17 நூற்றாண்டு திருப்புடைமருதூர்

நிகழ்கலை

கரகாட்டம் 

·      கும்பாட்டம் எனவும் அழைக்கப்படுகிறது

·      நையாண்டி மேளம் இசை மற்றும் நாகசுவரம், தவில், பம்பை போன்றவை நிகழ்த்தலின்போது இசைக்கப்படும்

·      கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனைப் பேர் தான் என்ற வரையறை இல்லை.

·      நீரற வறியா   கரகத்து”  எனக் கரகாட்டம் பற்றிப் புறநானூறு கூறுகிறது

·      மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் குடக்கூத்து ஒன்று எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது இதுவே கரகாட்டத்தின் அடிப்படை- எனக் கருதப்படுகிறது

·      மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது

மயிலாட்டம் 

·      மயில் வடிவில் உள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு ஆடுவது.

·      நையாண்டி மேளம் இசைக்கச் சலங்கை ஒலிக்க ஆடப்படும்.

·      இது கரகாட்டத்தின் துணை ஆட்டமாகும்.

காவடியாட்டம் 

·      கா என்பதற்கு பாரம் தாங்கும் கோல் எனப் பொருள்

·      காவடியின் வடிவத்திற்கு ஏற்ப மச்சக் காவடி, சர்ப்பக் காவடி, தேர்க்காவடி, பூக்காவடி, பறவைக் காவடி- என அழைக்கப்படுகிறது

·      இலங்கை, மலேசியா போன்ற இடங்களில் உள்ள புலம்பெயர் தமிழர்களாலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது

ஒயிலாட்டம்

·      ஒரே நிற துணி  முண்டாசு கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம் 

·      ஒயிலாட்டம் தோலால் கட்டப்பட்ட தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தபடுகின்றன

·      பெரும்பாலும் ஆண்களே ஆடுகின்றனர் 

தேவராட்டம், சேவையாட்டம்

·      தேவராட்டம் = வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள்

·      இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் 

·      உறுமி எனும் தேவதுந்துபி இதன் இசைக்கருவி

·      இதில் பெரும்பாலும் 8 முதல் 13 கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு 

·      இது குறிப்பாகச் சடங்கு சார்பாக ஆடப்படுகிறது

·      தேவராட்டம் போன்ற கலையே சேவையாட்டம்

·      ஆட்டக் கலைஞர்கள் சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்துவார்கள். 

·      இதனை இசைச் சார்பு கலையாகவும் வழிபாட்டு கலையாகவும் நிகழ்த்தப்படுகிறது

பொய்க்கால் குதிரையாட்டம் 

·      போலச் செய்தல் போன்ற பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்தும் கலை

·      இது புரவியாட்டம், புரவி நாட்டியம் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது 

·      இது மராத்தியர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது

·      நையாண்டி மேளமும் நாகசுரமும் இதன் இசைக்கருவிகள்

·      இதற்குப் பாடல் இசைப்பதில்லை

·      ராஜஸ்தானில்கச்சிகொடி, கேரளத்தில்குதிரைக்களி என அழைக்கப்படுகிறது.

தப்பாட்டம் 

·      தப்பு என்ற தோற்கருவி இசை கொண்டு ஆடுகின்ற கலை

·      இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என அழைக்கப்படுகிறது.

·      தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள தோல் கருவி.

·      தகக தகதகக தந்ததத்த தந்தகக
என்று தாளம் 
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக    -எனத் திருப்புகழ் - அருணகிரிநாதர்.

·      இதனைப் பறை என்றும் அழைப்பர். ஒன்றை சொல்வதற்கு என்றே (பறைதல்) இசைக்கப்படும் தாளக் கருவி பறை

·      தொல்காப்பியர் குறிப்பிடும் கருப்பொருள்களில் பறை ஒன்று 

·      பறையாடல் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன

தெருக்கூத்து 

·      நாட்டுப்புற மக்களால் நடத்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து

·      தற்போது கோவில் சார்ந்த கலையாகக் மட்டுமே உள்ளது 

·      ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்குவர்

·      திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகும் தெருக்கூத்து

·      அர்ஜுனன் தபசு மழை  வேண்டி நடத்தப்படுகிறது

·      தெருக்கூத்து தமிழ்கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர் ந. முத்துசாமி

·      நாடகக் கலையை மீட்டெடுப்பது  நமது குறிக்கோள் என்றவர் ந.முத்துசாமி

·      கூத்துப்பட்டறை ந.முத்துசாமி கலை ஞாயிறு என அழைக்கப்படுகிறார்

·      தமிழக அரசின் கலைமாமணி விருது இந்திய அரசின் தாமரைதிரு (பத்மஸ்ரீ) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

தோற்பாவைக் கூத்து

·      தோலால் ஆன பாவையை கொண்டு நிகழ்த்தும் கலை ஆதலால் தோற்பாவை என பெயர் பெற்றது.

·      இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு, உரையாடல், இசை ஆகியவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகிறது.

·      பாவைக் குறித்த செய்திகள் சங்க காலம் முதல் 18ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது.

·      திருக்குறளில் மரப்பாவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

·      திருவாசகம், பட்டினத்தார் பாடலில் தோற்பாவைக்கூத்து பற்றிக் காணமுடிகிறது.

·      தோற்பாவைக் கூத்து = கையுறை பாவைக் கூத்து, பொம்மலாட்டம் என மாற்றம் பெற்றுள்ளது.

·      மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 'இராச சோழன் தெரு' என இன்றும் உள்ளது என இடம்பெற்றது ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்.

பூத்தொடுத்தல்

கவிஞர் உமா மகேஸ்வரி

·      இவர் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர் 

·      தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ளார். 

·      படைப்புகள்: நட்சத்திரங்களின் நடுவே, வெறும்பொழுது, கற்பாவை இவரின் கவிதை தொகுதிகள்.

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

·      சேய் உடன் மகிழ்ந்து குலாவும் தாய் சுவரோவியம் இடம் பெற்ற காலம் மற்றும் இடம்- 17ம் நூற்றாண்டு, சிதம்பரம்.

·      செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாட
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி‌ திகழரை வடமாட ……
……
ளத்திரு மேனியு மாடிட  ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிகுக னாடுக செங்கீரை" - குமரகுருபரர் 

சொல்லும் பொருளும் 

·      பண்டி                 -வயிறு

·      அசும்பிய           -ஒளிவீசுகிற

·      முச்சி                   -தலையுச்சி கொண்டை 

இலக்கணக்குறிப்பு 

·      குண்டலமும் குழைகாதும்     - எண்ணும்மை 

·      ஆடுக                                          -வியங்கோள் வினைமுற்று

·      பதித்து                                         -வினையெச்சம்

செங்கீரைப் பருவம் 

·      செங்கீரை செடி காற்றில் ஆடுவது போலக் குழந்தை தலை 5-6 மாதங்களில் மென்மையாக அசையும்

அணிகலன்கள் 

·      சிலம்பு, கிண்கிணி      =காலில் அணிவது அரைஞான் = இடையில் அணிவது 

·      சுட்டி                                =நெற்றியில் அணிவது 

·      குண்டலம், குழை       =காதில் அணிவது 

·      சூழி                                = தலையில் அணிவது

பொதுவான குறிப்புகள்

·      பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று 

·      இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ  பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரைக் குழந்தையாக எண்ணி பாடுவது பிள்ளைத்தமிழ், பருவத்திற்கு பத்து பாடல்கள் என நூறு பாடல்கள் இதில் இடம் பெறும் 

·      இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும் 

·      குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

·      இவர் வடமொழி, தமிழ், இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். 

·      படைப்புகள்: கந்தர் கலிவெண்பா, , மதுரை கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறிவிளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்.

·      ஆண்பாற் பிள்ளைத்தமிழ் கடைசி 3 பருவங்கள் =சிற்றில், சிறுபறை, சிறுதேர் 

·      பெண்பாற் பிள்ளைத்தமிழ் கடைசி 3 பருவங்கள் =கழங்கு, அம்மானை, ஊசல் 

·      இருபாலருக்கும் பொதுவான பருவங்கள்= காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

கம்பராமாயணம்

·      கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்  எனப் பாரதி குறிப்பிடுகிறார்

·      கம்பர் ராமாயணத்திற்கு இட்ட பெயர் இராமாவதாரம் 

·      இது ஆறு காண்டங்களை உடையது 

·      கல்வியில் பெரியவர் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்- கம்பனைப் போற்றும் முதுமொழிகள் ஆகும் 

·      சோழநாட்டு திருவழுந்தூரில் பிறந்தவர் 

·      திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரித்தார் 

·      விருத்தம் எனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் எனப் புகழப்படுபவர் 

·      நூல்கள் : சரஸ்வதி அந்தாதிசடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலையெழுபது 

பாய்ச்சல்

சா கந்தசாமி

·      தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற நூலை எழுதியவர் சா கந்தசாமி

·      இவர் மயிலாடுதுறையில் நாகப்பட்டினத்தில் பிறந்தவர் 

·      சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றவர்-

·      விசாரணை கமிஷன் என்ற புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார் 

·      சுடுமண் சிலைகள் என்று குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றார் 

·      புதினங்கள்: தொலைந்து போனவர்கள், சூரியவம்சம், சாந்தகுமாரி. சில

முன்தோன்றிய மூத்தகுடி 

·      ஓங்கு இரும்பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்-சிலப்பதிகாரம் ஊர்காண் காதை 

·      ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி

அகப்பொருள் இலக்கணம்

·      பொருள் என்பது ஒழுங்கு முறை.

·      குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்திணைகள் ஆகும்.

·      இவற்றிற்கான முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என உள்ளன

·      நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

·      குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் 

·      முல்லை காடும் காடு சார்ந்த இடமும் 

·      மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் 

·      நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் 

·      பாலை சுரமும் சுரம் சார்ந்த இடம்

·      பொழுது பெரும்பொழுது சிறுபொழுது என இருவகைப்படும் 

·      ஓராண்டின் ஆறு கூறுகள் பெரும்பொழுது எனப்படும்

பெரும்பொழுது 

·      கார்காலம்                      -ஆவணி புரட்டாசி 

·      குளிர்காலம்                  -ஐப்பசி கார்த்திகை

·      முன்பனிக்காலம்          -மார்கழி தை 

·      பின்பனிக் காலம்         -மாசி பங்குனி 

·      இளவேனிற்காலம்        -சித்திரை வைகாசி 

·      முதுவேனிற்காலம்       -ஆனி ஆடி

 

·      ஒரு நாளில் ஆறு கூறுகள் சிறுபொழுது

·      காலை 6 மணி முதல் 10 மணிவரை

·      நண்பகல் 10 முதல் 2 வரை

·      எற்பாடு 2 மணி முதல் 6 மணிவரை

·      மாலை 6 மணி முதல் 10 மணிவரை 

·      யாமம் 10 முதல் 2 வரை 

·      வைகறை 2 மணி முதல் 6 மணிவரை

·      எல் என்றால் ஞாயிறு.பாடு என்றால் மறையும் நேரம் .எல்+ பாடு =ஏற்பாடு

 

திணை

பெரும்பொழுது

சிறுபொழுது

குறிஞ்சி

குளிர்காலம் , ன்பனிக்காலம் 

யாமம்

முல்லை 

கார்காலம்

‌மாலை

மருதம் 

ஆறு பெரும்பொழுதுகள்

வைகறை

நெய்தல்

ஆறு பெரும்பொழுதுகள்

எற்பாடு

பாலை

இளவேனில், முதுவேனில் பின்பனி

நண்பகல்

 

கருப்பொருள்

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

பாலை

தெய்வம்

முருகன்

திருமால்

இந்திரன்

வருணன்

கொற்றவை

மக்கள்

வெற்பன், குறவன், குறத்தி

தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்

ஊரன்,

உழவர், உழத்தியர்

சேர்ப்பன், பரதன், பரத்தியர்

எயினர், எயிற்றியர்

உணவு

மலை நெல், தேன், திணை

வரகு, சாமை

செந்நெல், வெண்ணெல்

மீன், உப்புக்குப் பெற்ற பொருள்

சூறையாடலால் வரும் பொருள்

விலங்கு

புலி, கரடி, சிங்கம்

முயல், மான், புலி

எருமை, நீர்நாய்

முதலை, சுறா

வலியிழந்த யானை

பூ

குறிஞ்சி, காந்தள்

முல்லை, தோன்றி

செங்கழுநீர், தாமரை

தாழை, நெய்தல்

குரவம், பாதிரி

மரம்

அகிழ், வேங்கை

கொன்றை, காயா

காஞ்சி மருதம்

புன்னை, ஞாழல்

இலுப்பை. பாலை

பறவை

கிளி, மயில்

காட்டு கோழி. மயில்

நாரை. நீர் கோழி, அன்னம்

கடற்காகம்

புறா ,பருந்து

ஊர்

சிறுகுடி

பாடி, சேரி

பேரூர்,மூதூர்

பட்டினம், பாக்கம்

குறும்பு

நீர்

அருவி நீர், சுனை நீர்

காட்டாறு

மனை கிணறு, பொய்கை

மணற்கேணி,

உலர் கழி

வற்றிய சுனை. கிணறு

பறை

தொண்டகம்

ஏறுகோட்பறை

மணமுழா, நெல்லரிகிணை

மீன் கோட்பறை

துடி

யாழ்

குறிஞ்சியாழ்

முல்லையாழ்

மருதயாழ்

விளரி யாழ்.

பாலை யாழ்

பண்

குறிஞ்சிப் பண்

முல்லைப்பண் 

மருதப் பண்

செவ்வழிப் பண்

பஞ்சுரப் பண்

தொழில்

தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்

ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்

நெல்லரிதல், களை பறித்தல்.

மீன்பிடித்தல், உப்பு விளைத்தல்

வழிப்பறி, நிரை கவர்தல்

 

·      சிறு நண்டு மணல் மீது
படமொன்று கீறும்
சில வேளை அதை வந்து 
அலை கொண்டு போகும்….
...நிலையான கரை நீரில் 
அலை போய் உலைந்தாடும்    -மகாகவி (இலங்கை)

தொடர்களை அறிவோம் 

·      ஒரு தனித் சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாயோ இருந்து ஒரு பயனிலை கொண்டு அமையும்

·        மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார் 

·        மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்

·      தொடர்சொற்றொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும்

·        நிலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார், வெற்றி பெற்றார், பரிசைத் தட்டிச் சென்றார்.

·      கலவை சொற்றொடரியல் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மை தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத்தொடர்களும் கலந்து வரும்

·        மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான் 

·        பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான் =முதன்மைத் தொடர் 

·        மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் =துணை தொடர்

கலைச்சொற்கள் அறிவோம் 

·      Aesthetics-அழகியல், முருகியல்

·      Artifacts-கலைப்படைப்புகள்

·      Terminology-கலைச்சொல் 

·      myth-தொன்மம்

நூல்களும் ஆசிரியர்களும்

·      தேன்மழை -சுரதா

·      திருக்குறள் நீதி இலக்கியம்- க.த.திருநாவுக்கரசு

·      நாட்டார் கலைகள் -அ.கா.பெருமாள்

திருக்குறள்

·      பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்ல தில்லை பொருள் 

        -அணி:சொற்பொருள் பின்வருநிலையணி

·      குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் 
றுண்டாகச் செய்வான் வினை 

        -அணி: உவமை அணி

·      இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் 
இன்மையே இன்னா தது       

        -அணி: சொற்பொருள் பின் வருநிலையணி

·      மக்களே போல்வர் கயவர் அவரன்ன 
ஒப்பாரி யாம் கண்ட தில்       

        -அணி: உவமையணி

·      தேவர் அனையர் கயவர் அவருந்தாம் 
மேவன செய்தொழுக லான்   

        -அணி: வஞ்சப்புகழ்ச்சி அணி

·      சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் 
கொல்லப் பயன்படும் கீழ்        

        -அணி : உவமை அணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.