Type Here to Get Search Results !

இயல் 5 தமிழ் பத்தாம் வகுப்பு மணற்கேணி eyal-5-10th-tamil-tnpsc-notes-manarkeni

 

இயல்

தமிழ் பத்தாம் வகுப்பு

மணற்கேணி
Table of contents(toc)

கேட்கிறதா என் குரல்

·     ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்கிறார் மணவை முஸ்தபா.

·     மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.

·     ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்: உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்கிறார் மு. கு. ஜகந்நாத ராஜா.

·     டேனிஷ் கிறிஸ்துவ நிறுவனத்தால் 1723 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் மொழிபெயர்த்துச் உருவாக்கம் பெற்ற தமிழ் நூல் ஞான பாட்டுகளின் பொஷத்தகம் (hymnologiadamulica).

·     சங்ககாலம் மொழிபெயர்ப்பு பற்றி மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும் எனச் சின்னமனூர்ச் செப்பேடு கூறுகிறது.

·     ராமாயணம், மகாபாரதம் பற்றிய தொன்ம  செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக உள்ளன. 

·     பெருங்கதை சீவகசிந்தாமணி கம்பராமாயணம் வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்கள் வடமொழி கதைகள் தழுவிப் படைத்தவை

·     இந்திய அரசு சாகித்திய அகாடமி தேசிய புத்தக நிறுவனம் (NBT) தென்னிந்திய புத்தக நிறுவனம் மூலம் மொழிபெயர்ப்பு செய்கிறது

·     மொகு சாஸ்ட்டு - எனும் ஜப்பானிய சொல்லின் பொருள்= விடை தர அவகாசம் வேண்டும்

பாரதியின் மொழிபெயர்ப்பு 

·     காட்சி, பொருட்காட்சி- exhibition 

·     இருப்புப்பாதை - east Indian railways

·     புரட்சி - revolution 

·     தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலைநிறுத்தம் - strike

·     ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன சேக்ஸ்பியர் அந்நாட்டின் படைப்பாளிபோலக் கொண்டாடப்பட்டார்

·     கீதாஞ்சலியை இரவீந்தரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிப் பின் அவரே ஆங்கிலத்திற்கு  மொழிபெயர்த்தார் இதற்கு நோபல் பரிசும் பெற்றார்

·     ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றல் பயன்படுத்துகிறது என்பதை கொண்டு அதன் தொழில் வளர்ச்சி மதிப்பிடுவார்கள்

·     ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை கொண்டு  நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள் 

·     ராகுல் சாங்கிருத்தியாயன் 1942 ஹஜிராபாக் மத்திய சிறையில் இருந்தபோது வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார் 

·     1949 ஆம் ஆண்டு இந்நூல் கணமுத்தையா என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது 

·     வால்காவிலிருந்து கங்கை வரை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்

    • 1949 கணமுத்தையா 
    • 2016 டாக்டர் என். ஸ்ரீதர் 
    • 2016 முத்து மீனாட்சி 
    • 2018 யூமா வாசுகி

·     Rail sleeper தண்டவாளத்தின் குறுக்கே கட்டைகள்

·     Camel வடம் கயிறு மற்றும் ஒட்டகம் என இரு பொருள் உண்டு

·     Transcribe படியெடுத்தல் transfer மாறுதல். Transform உருமாற்றுதல் transact செயல்படுத்துதல் 

·     தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வரிசை

1.       ஆங்கிலம் 

2.      மலையாளம் 

3.      தெலுங்கு 

4.      இந்தி 

5.      கன்னடம் 

6.      வடமொழி 

7.      ரஷ்ய மொழி 

8.      வங்க மொழி 

9.      மராத்தி மொழி

·     கருத்துப் பகிர்வு தருவதால் மொழிபெயர்ப்பைப் பயன்கலை எனவும் கூறுவர்

·     காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்
கண்டுள்ள- கலைமொல்லம் தமிழன் எண்ணி
பேசி மகிழ் நிலை வேண்டும்"      - குலோத்துங்கன்

·     சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் எனப் பாரதி கூறுகிறார்

·     தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் எனப் பாரதியார் குறிப்பிடுகிறார்

·     பிரான்சின் தேசிய நூல்கூடத்தில் ஏறக்குறைய 1000 பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன

·     பண்டைய காலத்தில் முதன் முதலாக ஐரோப்பியர் யாத்த  இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் கிடைக்கின்றன

·     இன்றும் அச்சிடப் பெறாத நூல்கள் பல பிரான்ஸ் நூலகத்தில் உள்ளது அவை 

    • மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்
    • சரளி புத்தகம் 
    • புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்
    • தனிநாயகம் அடிகள்

நீதி வெண்பா

·     அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி 
மருளை அகற்றி மதிக்கும் தெருளை 
அருந்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் 
பொருத்துவதும் கல்வியென்றே போற்று     - கா. ப. செய்குதம்பி பாவலர்

சதாவதானம் 

·     சதம்- நூறு

·     நூறு  செயல்களை நினைவில் கொண்டு பதில் அளித்த சதாவதானம்

·     சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் செய்குதம்பி பாவலர் (1874- 1950)

·     கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர் செய்குதம்பி பாவலர்

·     இவர் 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறமை பெற்றார் 

·     சீறாப் புராணத்துக்கு உரை எழுதியுள்ளார்  

·     இவர் 1907 மார்ச் 10ஆம் நாள் சென்னை விக்டோரியா அரங்கில் நூறு செயல்களை ஒரே இடத்தில் செய்து காட்டி சதாவதானி என்று பட்டம் பெற்றார் 

·     இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடி மணிமண்டபமும் பள்ளியும் உள்ளது 

·     இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன

திருவிளையாடற் புராணம் 

பரஞ்சோதி முனிவர்

·     திரு ஆலவாய் காண்டம் (3 காண்டம்)

·     இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 

பொதுவான குறிப்புகள்

·     பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குசேல பாண்டியன் 

·     கபிலரின் நண்பரான இடைக்காடர்

·     இடைக்காடரை  குசேல பாண்டியன் அவமானப்படுத்தி இதன் பொருட்டு அவர் கடம்பவன இறைவனிடம் முறையிட்டார்

·     கடம்பவன இறைவன் கோயிலை விட்டு நீங்கி, வடதிருஆலவாய் சென்று தங்கினார்

சொல்லும் பொருளும்

·     கேள்வியினான்        - நூல் வல்லான் 

·     கேண்மையினான்   - நட்பினன்

·     தார்                               -மாலை 

·     முடி                               -தலை 

·     முனிவு                         -சினம் 

·     அகத்து உவமை        -மன மகிழ்ச்சி 

·     தமர்                              -உறவினர் 

·     நீபவனம்                     -கடம்பவனம் 

·     மீனவன்                      -பாண்டியன் 

·     கவரி                             -சாமரை (கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச்  சின்னம்) 

·     நுவன்ற                       -சொல்லிய  

·     என்னா                        -அசைச்சொல்

இலக்கணக்குறிப்பு 

·     கேள்வியினான்        -வினையாலணையும் பெயர் 

·     காடனும் கபிலனும்             -எண்ணும்மை

·     சொல்லேர் உழவனுக்கு கவரி வீசிய வில்லேர் உழவன்.  

    • கவரி வீசிய மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
    • புலவன் மோசிகீரனார் 
    • பாடிய பாடல் மாசற விசித்த வார்புறு வள்பின் புறநானூறு 

 பரஞ்சோதி முனிவர்

·     பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் விரிவும் சிறப்பும் கொண்டது 

·     மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்று மூன்று காண்டங்களும்  64 படலங்களும் உடையது.

·     பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் பிறந்தவர் 

·     பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் 

·     இவரின் நூல்கள் வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி.

புது நம்பிக்கை கமலாலயன்

·     ஒடுக்கப்பட்ட கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கருப்பின பெண்மணியின் மேரி மெக்லியோட் பெத்யூன் 

·     அவரின் வாழ்க்கையை தழுவி உனக்குப் படிக்கத் தெரியுமாஎன்ற தலைப்பில் கமலாலயன் என் நூலை உருவாக்கியுள்ளார் 

·     கமலாலயன் இயற்பெயர் வே. குணசேகரன் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்

·     கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை-ஐங்குறுநூறு  -தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை 

வினா, விடை வகைகள், பொருள்கோள்

வினா வகை 

  1. அறிவினா 
  2. அறியா வினா 
  3. கொளல் வினா
  4. கொடை வினா 
  5. ஐய வினா 
  6. ஏவல் வினா என ஆறு வகைப்படும்

அறிவினா -பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது. ஆசிரியர்  மாணவரிடம் கேட்பது.

அறியா வினா -தான் அறியும் பொருட்டு வினவுவது மாணவர் ஆசிரியரிடம் கேட்பது 

ஐய வினா-ஐயம் நீக்கித் தெளிவுபெற கேட்பது 

கொளல் வினா -ஒரு பொருளை வாங்கும் பொருட்டு வினவுவது

கொடை வினா  -ஒரு பொருளைக் கொடுக்கும் பொருட்டு விடுவது 

ஏவல் வினா -ஒரு செயலைச் செய்யும் பொருட்டு வினவுவது

·     அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தருமென ஆறும் இழுக்கார்   -நன்னூல் 

விடை வகை

·     சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் 
உற்றது உரைத்தல் உறுவது கூறல் 
இனமொழி எனும் எண் இறையுள் இறுதி 
நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின்  நேர்ப    -நன்னூல்

எட்டு வகை

  1. சுட்டு விடை
  2. மறை விடை
  3. நேர் விடை
  4. ஏவல் விடை
  5. வினா எதிர் வினாதல் விடை
  6. உற்றது உரைத்தல் விடை
  7. உறுவது கூறல் விடை 
  8. இனமொழி விடை

·     முதல் மூன்று வகை நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் 

·     அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்

சுட்டு விடை-சுட்டி கூறும் விடை =அது அங்குள்ளது.

மறை விடை-மறுத்துக் கூறும்  விடை=அங்கே  போகமாட்டேன். 

நேர் விடை- உடன்பட்டு கூறும் விடை =அங்கே  போவேன்.

ஏவல் விடை- மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை. 

வினா எதிர் வினாதல் விடை- வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது = நீயே போ

உற்றது உரைத்தல் விடை -வினாவிற்கு விடையாக முன் நேர்ந்ததை கூறுதல் 

உறுவது கூறல் விடை - வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல் 

இனமொழி விடை -வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறுதல் உனக்குக் கதை தெரியுமா என்பதற்கு கட்டுரை எழுதத் தெரியும் எனக் கூறுவது

பொருள்கோள்

  • செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு  சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு  'பொருள்கோள்

பொருள்கோள் எட்டு வகைபடும்

·     ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல் நிறை பொருள்கோள், விற்பூட்டுப் பொருள்கோள்   தாப்பிசைப் பொருள்கோள் அளைமறிபாப்பு பொருள்கோள்  கொண்டு கூட்டு பொருள்கோள் அடிமறி மாற்றுப் பொருள்கோள் ஆகியன

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

·     சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் 
மெல்லவே கரு இருந்து ஈன்று மேலலார் 
செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல் 
கல்வி சேர் மாந்தரின் இறைச்சி காய்ந்தவே  -சீவக சிந்தாமணி

·     தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப் போல நேராகப் பொருந்துமாறு அமைந்ததால் இது ஆற்றுநீர்ப் பொருள்கோள் என அழைக்கப்படுகிறது

·     மற்றைய நோக்காது அடிதோறும் வான்பொருள் 
அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே     -நன்னூல்

நிரல் நிறை பொருள்கோள்

·     செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல் நிறையாக வரிசையாக அமைந்து வருவது நிரல்நிறை பொருள்கோள் ஆகும்

·     இது முறை நிரல்நிறை பொருள்கோள் மற்றும் எதிர் நிரல்நிறை பொருள்கோள் என இருவகைப்படும்

முறை நிரல்நிறை பொருள்கோள்

·     செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி அதை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப் படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறை பொருள்கோள் ஆகும்

·     அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது

எதிர் நிரல்நிறை பொருள்கோள்

·     செய்யுளில் எழுவாய்களை வரிசை படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறை‌ பொருள்கோள்

·     விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்

கொண்டுகூட்டுப் பொருள்கோள்

·     செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டி பொருள் கொள்வது கொண்டு கூட்டு பொருள்கோள்

·     ஆலத்து மேல குவளை குளத்துள 
வாலின் நெடிய குரங்கு  -மயிலைநாதர் உரை

·     யாப்படி பலவினுங் கோப்புடைய மொழிகளை 
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே   -நன்னூல்

 திறன் அறிவோம்

·     மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்துச் சின்னமனூர் செப்பேடு உணர்த்தும் செய்தி சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு

·     அருந்துணை என்பதை பிரித்தால் அருமை + துணை

·     இங்கு நகரப்பேருந்து நிற்குமா என்று வழிப்போக்கர் கேட்டது, அதோ அங்கே நிற்கும் என மற்றொருவர் கூறியது-- அறியா வினா, சுட்டுவிடை

·     அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை யகற்றி மதிக்கும் தெருளை கல்வி இடைக்காடனார் இன் பாடலைத் திகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் மன்னன் இறைவன்

·     கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று வெற்றிவேற்கை கூறுகிறது

கலைச்சொல் அறிவோம் 

  • emblem            -சின்னம்    
  • thesis               -ஆய்வேடு 
  • intellectual       -அறிவாளர் 
  • symbolism       -குறியீட்டியல்
  • Lute music       -யாழிசை

நூல்களும் ஆசிரியர்களும்

·     சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று -தமிழில் வல்லிக்கண்ணன் 

·     குட்டி இளவரசன்  -தமிழில் வெ ஸ்ரீராம்

·     ஆசிரியரின் டைரி- தமிழில் எம்பி அகிலா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.