Type Here to Get Search Results !

பத்தாம் வகுப்பு -தமிழ் இயல் -நான்கு நான்காம் தமிழ் eyal-4-10th-tamil-tnpsc-notes-nangam-tamil

 

பத்தாம் வகுப்பு -தமிழ்

இயல் -நான்கு

நான்காம் மிழ்


Table of contents(toc)

செயற்கை நுண்ணறிவு

·      எந்த ஆண்டு ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டின் பிறப்பும்…... காரணமாகின ?  1980, மின்னணு புரட்சி

·      இயல்பான மொழி நடை உருவாக்குதல் எனும் மென்பொருள் வேர்ட்ஸ்ஸ்மித் (எழுத்தாளி)

·      வாட்சன்

o  2016 - ஐ.பி. எம் (IBM) உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கணினி ரோபோ 

o  இது நிமிடத்திற்கு 2 கோடி தரவுகளை ஆராய்ந்து நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது

·      செயற்கை நுண்ணறிவு என்பது மென்பொருள் அல்லது கணினி செயல்திட்ட வரைவு computer program)

மொழிபெயர்ப்பு

·      மின்னணு புரட்சி                -digital revolution 

·      மென்பொருள்       -software

·      கணினி செயல் திட்ட வரைவு -computer program 

·      உலாவி -  Browser

·      தரவு அறிவியலாளர்- data scientists

·      மின்னணு கல்வி அறிவு -digital literary 

·      மின்னணு சந்தைபடுத்துதல் -digital marketing 

·      இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இலா ELA- electronic live assistant 

·      ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனை பெப்பர் இது உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ

நூல் வெளி 

·      சீன நாட்டில் காண்டன் நகரில் 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது

·      இங்குச் சிவன் கோவில் (சோழர் கால சிற்ப முறை) ஒன்று சீனப் பேரரசர் குப்லாய் கான் காலத்தில் கட்டப்பட்டது 

பெருமாள் திருமொழி குலசேகர ஆழ்வார்

·      வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்  பால் 
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் 
மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா நீ 
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே

சொல்லும் பொருளும் 

·      சுடினும் -சுட்டாலும் 

·      மாளாத- தீராத 

·      மாயம் -விளையாட்டு

பொதுவான குறிப்புகள்

·      வித்துவக் கோடு எனும் ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது

·      பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது

·      பெருமாள் திருமொழி 105 பாடல்கள் கொண்டது

·      பெருமாள் திருமொழி பாடியவர் குலசேகர ஆழ்வார்

·      இவரின் காலம் 8 நூற்றாண்டு

பரிபாடல் கீரந்தையார்

·      விசும்பின் ஊழி ஊழ் ஊழ் செல்ல …
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் வழியும்

·      செந்நீர் சுடரிய ஊழியும் பனியோடு.....
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்    
---இப்பாடல் பெற்ற நூல் பரிபாடல்

சொல்லும் பொருளும் 

·      விசும்பு                   -வானம் 

·      ஊழி                       -யுகம் 

·      ஊழ்                        -முறை 

·      தண்பெயல்           -குளிர்ந்த மழை 

·      ஆர்தருபு                -வெள்ளத்தின் மூழ்கிக் கிடந்த 

·      பீடு                           -சிறப்பு 

·      ஈண்டி                     -செறிந்து திரண்டு

இலக்கணக்குறிப்பு 

·      ஊழ் ஊழ்              -அடுக்குத்தொடர் 

·      வளர் வானம்         -வினைத்தொகை 

·      செந்தீ-                    -பண்புத்தொகை 

·      வாரா                       -ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

பொதுவான குறிப்புகள்

·      இந்த அண்டப் பெருவெளியில் நாம் வாழ்வது போன்ற எண்ணற்ற பால்வெளிகள் உள்ளன என்ன அமெரிக்க வானியல் அறிஞர் எட்வின் ஹப்பிள் 1924 நிரூபித்தார்

·      அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் சிறிய ஆகப் பெரியோன் தெரியின் எனத் திருவாசகத்தில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது

·      பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று 

·      விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல என்ற இப்பாடலை பாடியவர்  கீரந்தையார் 

·      ஓங்கு பரிபாடல் எனப் புகழ் உடையது 

·      இந்நூல் சங்கநூல், பண்ணோடு பாடப்பட்ட நூல்

·      இதில் 70 பாடல்கள் இருந்ததாகக் கூறியுள்ளனர், ஆனால் 24  பாடல்களே கிடைத்துள்ளன

·      ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, அறிவாற்றல், இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை சங்க இலக்கியம் மூலம் அறிந்து கொள்கிறோம்

விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

·      பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகம் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ளது

·      பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் - 1988  ஆண்டில் நிறுவப்பட்டது இதில் 10 காட்சிக் கூடங்கள் உள்ளன

·      இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்குதான் உள்ளது . இது 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது

·      மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறன் புத்திக்கூர்மை”,  “அறியாமை அறிவாற்றலின் மிகப் பெரிய எதிரி அல்ல அதே அறிவியலின் மாயை எனக் கன்னத்தின் அசைவின் மூலம் கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்

·      தற்கால ஐன்ஸ்டீன் எனப் புகழப்படுபவர் ஸ்டீபன் ஹாக்கிங்

·      இங்கிலாந்தின் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம் ஆண்டு 21 வயது இளைஞராக ஸ்டீபன் ஹாக்கிங் அனுமதிக்கப்பட்டார் அவருக்குப் பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது

·      1985-ல் மூச்சுக்குழாய் தடங்கலால் பேச்சுத் திறனை இழந்தார்

·      பேரண்ட பெருவெடிப்புகருந்துளைகள் பற்றிய ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானது 

·      பேரண்ட வெடிப்பினை கணிதவியல் அடிப்படையில் விளக்கினார்-ஸ்டீபன் ஹாக்கிங்

·      அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர் என்பவர் முதல் முதலில் கருந்துளை என்ற கோட்பாட்டைக் குறிப்பிட்டவர்

·      உள்ளே ஈர்க்கப்படும், இவ்வாறு உள் சென்ற யாவையும் வெளி வர முடியாததால் இதனைக் கருந்துளை  எனலாம் என்று ஜான் வீலர் கருதினார் 

·      கருந்துளை பற்றிய ஸ்டீபன் ஹாக்கிங் கருத்துகள் 

1.        இதனுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பிக்க முடியாது 

2.       இதன் ஈர்ப்பு விசை எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள்  (evant horizon) வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன 

3.       கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை , கருந்துளையில் ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும்  கசியத் தொடங்கி இறுதியில்  இது வெடிப்பு மறைந்துவிடும் இதற்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்

·      அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என கருதப்பட்டது ஆனால் ஹாக்கிங் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என நிறுவினார்

·      ஐன்ஸ்டீன், நியூட்டன் முதலானோர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள்

·      நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் வகித்த கணக்கியல் துறையின் லூகாசியன் பேராசிரியர் என்ற பதவியை ஸ்டீஃபன் ஹாக்கிங் வகித்தார்

·      ஐன்ஸ்டீன் ஈர்ப்பு அலைகளின் கணிதச் சமன்பாடு. E= MC2

·      ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் 

1.        அமெரிக்காவின்  உயரிய விருதான அதிபர் விருது presidential medal of freedom

2.       ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது 

3.       உல்ஃப் விருது Wolf foundation prize

4.      காப்ளி  பதக்கம் Copley  medal

5.      அடிப்படை இயற்பியல் பரிசு fundamental physics prize 

·      ஹாக்கிங்- கலிலியோ நினைவுநாளில் பிறந்து ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் இறந்தார்

·      தலைவிதிதான்  வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்ற நம்புகிறவர்களை பார்த்தால் எனக்குச் சிரிப்பு தான் வருகிறது எனக்கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்

·      2012 இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்தொடக்க விழா நாயகர்என்று சிறப்பிக்கப்பட்டார்

·      அடுத்த தலைமுறை மற்றும் பெருவெடிப்புக் கோட்பாடு உள்ளிட்ட தொலைக்காட்சி தொடரில் பங்கேற்றார்

·      சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். என ஹாக்கிங்போயிங் 727” விமானத்தின் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை பயணம் மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்

·      ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியகாலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூல் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது

·      1988 இல் வெளிவந்தகாலத்தின் சுருக்கமான வரலாறுபெருவெடிப்பு, கருந்துளை பற்றிக் கூறுகிறது

·        கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை 
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை

-என
அகநானூற்றுப் பாடல் கரூர்  மாவட்டத்தின் கருவூர் பற்றிக் கூறுகிறது

·      அறிவைவிட முக்கியமானது கற்பனைத்திறன்எனக்கூறியவர் -ஐன்ஸ்டீன்

·      வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது ஸ்டீபன் ஹாக்கிங்

இலக்கணம் -பொது

இரு திணைகள்

·      ஆறறிவு உடைய மக்களை உயர்திணை என்றும்

·      மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் அஃறிணை ( அல் திணை)

ஐம்பால்

·      பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் 

·      பால் பொருள் பகுப்பு, பிரிவு

·      இது ஐந்து வகைப்படும்

·      உயர்திணை ஆண்பால்பெண்பால் மற்றும்  பலர்பால்- என மூன்று பிரிவுகளையும் 

·      அஃறிணை ஒன்றன்பால் மற்றும் பலவின் பால்- என இரு பிரிவுகளை உடையது

மூவிடம்

·      தன்மை, முன்னிலை மற்றும்  படர்க்கையென மூன்று வகைப்படும்

·      தன்மை   -பெயர்  -நான், யான், வினை- வந்தேன், வந்தோம்

·      முன்னிலை -        பெயர்   - நீர் நீவிர் :          வினை - நடந்தாய் வந்தீர்

·      படர்க்கை               -பெயர் அவன், அவள், அவை: வினை வந்தான், சென்றான்

வழு, வழாநிலை, வழுவமைதி

·      இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் வழாநிலை

·      இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் வழு

·      இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவை வழு எனப்படும்

வழுவமைதி 

·      இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதோ ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்

திணை வழுவமைதி 

·      என் அம்மை வந்தாள்.-என மாட்டைக் கூறுவது

பால் வழுவமைதி 

·      வாடா ராஜா வாடாக் கண்ணா என்று தன் மகளைப் பார்த்துக் கூறுவது

இட வழுவமைதி 

·      மாறன் என்பான் தன்னை பற்றிக் கூறும்போதுஇந்த மாறன் ஒரு நாளும் பொய் சொல்லமாட்டான்”.

கால வழுவமைதி 

·      குடியரசுத் தலைவர் நாளைத் தமிழகம் வருகிறார். வருவார் என்பதற்கு பதிலாக வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 

மரபு வழுவமைதி 

·      கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்- பாரதியார்

·      இங்குக் குயில் கத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மரபுப் படி குயில் கூவும் எனக் குறிப்பிட வேண்டும்

திறன் அறிவோம்

1.       உனதருளே பார்ப்பன் அடியேனே யார் யாரிடம் கூறியது - இறைவனிடம் குலசேகர ஆழ்வார்

2.       தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு
தலைப்பு செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் கண்காணிப்பு கருவிகள் அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத்
  திருப்புகிறது
திறன்பேசி இல் உள்ள வரைபடம் போக்குவரத்திற்கு சுருக்கமான வழியே காண்பிக்கிறது.
தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன

3.       பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிப்பிடுகிறது வானத்தையும் பேரொலியையும்

4.      குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்து பாடுகிறார், பால் சோற்றை கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்ற வழுவமைதி முறையே பால் வழுவமைதி திணை வழுவமைதி

5.      பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது இலா


·      முகம் தெரியா நபர் இடையே இனம்புரியா உறவுமுறை
புத்தகத்தைத் திறந்தவுடன் உணர்வுகளை வைப்பது ஏனோ
 
-
டெபோரா பர்னாந்து இலங்கை தமிழ் கவிஞர்

·      நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ?-
பாரதியார்

கலைச்சொற்கள் 

·      Nanotechnology        -மீநுண் தொழில்நுட்பம் 

·      Biotechnology           -உயிரித் தொழில்நுட்பம் 

·      Ultraviolet rays         -புற ஊதாக்கதிர்கள் 

·      Space technology     - விண்வெளித் தொழில்நுட்பம் 

·      Cosmic rays               - விண்வெளி கதிர்கள் 

·      Infrared rays             - அகச்சிவப்பு கதிர்கள்

 நூல்களும் ஆசிரியர்களும்

·      பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - நீலமணி 

·      அன்றாட வாழ்வில் அறிவியல் -ச. தமிழ்ச்செல்வன் 

·      காலம்- ஸ்டீபன் ஹாக்கிங்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.