இயல் -3
பத்தாம் வகுப்பு -தமிழ்
கூட்டாஞ்சோறு
விருந்து போற்றுதும்!
·
உணவு ஆக்கலும்
அளித்தலும் - 17 ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் சிதம்பரம்
·
விருந்தோம்பல்- 17 ஆம்
நூற்றாண்டுச் சுவரோவியம், சிதம்பரம்.
·
விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறுகிறார்
·
விருந்தோம்பலை
வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் உருவாக்கினார் -இல்லறவியல்
·
இல்லறம் பொழிவது
விருந்தோம்பல் செய்யும் பொருட்டு என வள்ளுவர் கூறுகிறார்
·
முகமலர்ச்சியோடு
விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்“ என்ற குறளில்
திருவள்ளுவர் கூறுகிறார்
·
தொல்லோர்
சிறப்பின விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை - எனச் சிலப்பதிகாரம்
கூறுகிறது
·
கண்ணகி தன்
கணவனைப் பிரிந்து வாழ்வதால் விருந்தினருக்கு விருந்து அளிக்க முடியாது என எண்ணி
வருந்தியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது
·
பொருந்து
செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர் ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன
யாவையே- எனக் கம்பராமாயணம் கூறுகிறது
·
கல்வியும்
செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிடுகிறார்
·
விருந்தினரும்
வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல”- எனக் கலிங்கத்துப் பரணி கூறுகிறது
·
விருந்தினர்க்கு
உணவு இடுபவர் முகமலர்ச்சியை உவமையாகக் கலிங்கத்துப்பரணி ஜெயங்கொண்டார் கூறுகிறார்
·
தனித்து உண்ணாமை தமிழர் விருந்தோம்பல்
பண்பின் அடிப்படை
·
அமிழ்தமே
கிடைத்தாலும் தனித்து உண்ணாது பிறருக்கு கொடுத்து உண்பது நல்லோர் எனப் புறநானூறு கூறுகிறது
·
உண்டால் அம்ம
இவ்வுலகம் இந்திரர் அமிர்தம் இயைவ தாயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இவரே -புறநானூறு கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிடுகிறார்
·
நடு இரவில்
விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்புகள் குடும்பத்
தலைவிக்கு உண்டு என நற்றிணை கூறுகிறது
·
அல்லில் ஆயினும்
விருந்து வரின் உவக்கும்” - என நற்றிணைப் பாடல்
·
காலில் ஏழடி
பின்சென்று எனப் பொருநராற்றுப்படை கூறுகிறது
·
தானியம் ஏதும்
இல்லாத நிலையிலும் விதைக்காக வைத்திருந்த தினையை இடித்து விருந்தளித்தனர்
எனப் புறநானூறு கூறுகிறது
·
குரல் உணக்கு
விதைத் தினை உரல் வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள். புறநானூற்றுப் பாடல்கள்
·
நேற்று வந்த விருந்தினருக்காக
இரும்பாலான பழைய வாளையும்
இன்று வந்த விருந்தினருக்குக் கருங்கோட்டு சீறியாழ் பணையம்
வைத்து விருந்தளித்தாரெனப் புறநானூற்றுச் செய்தி கூறுகிறது
·
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடை பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டு சீறியாழ் பணையம்”-எனப் புறநானூற்றுப் பாடல்
·
இளையான்குடி
மாறநாயனார் விருந்துக்கு வந்த சிவனடியாருக்காக முன் விதைத்த
நெல்லை அரித்து சமையல் செய்து படைத்தவர் எனப் பெரிய புராணம் கூறுகிறது
·
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் எனச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது
·
இலையை
மடிப்பதற்கு முந்தைய வினாடி முன்பாக மறுக்க மறுக்கப் பரிமாறப்பட்ட கூடுதல்
இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு- அம்சப்ரியா
·
பலர் புகு
வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனப் பெரிய வாயில் இரவு மூடுவதற்கு
முன்னர் கேட்பார்கள் என்று குறுந்தொகை கூறுகிறது
·
மருந்தே ஆயினும்
விருந்தோடு உண் எனக் கொன்றை
வேந்தனில் ஔவையார் பாடியுள்ளார்
·
வரகரிசிச்
சோறும் வழுதுணங்காய் வாட்டும்.
முரமுரெனவே புளித்த மோரும் -
திறமுடனே
புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து
இட்டான்ஈ(து)
எல்லா உலகும் பெறும்-என ஔவையார்
·
நாயக்கர், மராட்டியர் ஆட்சி காலத்தில்
நிறைய சத்திரங்கள் தோன்றின
·
தமிழர்
பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடம் உண்டு
·
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் வாழை இலையில் விருந்து
விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது
·
இட்டதோர்
தாமரைப் பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி இறைவுண்ணும் -பாரதிதாசனார்
·
விருந்தோம்பல்
பற்றிய சுவரோவியம் காணப்படும் இடம் -சிதம்பரம் (17ஆம் நூற்றாண்டு)
காசிக்காண்டம் -அதிவீரராம பாண்டியன்
·
விருந்தின்னாக ஒருவன்
வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் .....
பரிந்துநன் முகமன்
வழங்கல் இவ்வொன்பன்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே ---இல்லொழுக்கம், (பா எண் : 17)-- அதிவீரராம
பாண்டியன்
·
அருகுற- அருகில்
·
முகமன் -ஒருவரை நலம் வினவி கூறும் விருந்தோம்பல் சொற்கள்
இலக்கணக்குறிப்பு
·
நன்மொழி - பண்புத்தொகை
·
வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் - தொழிற் பெயர்கள்
· ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து
உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும் முப்பழமொடு
பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய
பசியி னோடு கடும்பசி ஆகும்
தானே" -விவேகசிந்தாமணி,
பொதுவான குறிப்புகள்
- காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் காசி காண்டம்
- துறவு பெருமையைக் கூறும், உரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறு வாழ்வில் அடையும் நன்மைகள்பற்றிக் கூறும் நூல் -காசி காண்டம்
- முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் மற்றும் தமிழ் புலவர் அதிவீரராம பாண்டியன்
- இவரின் நூலான வெற்றிவேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த கருத்துக்களைக் கொண்டது
- நைடதம், இலிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம்” ஆகிய நூல்களை அதிவீரராமபாண்டியன் இயற்றியுள்ளார்
மலைபடுகடாம்- பெருங்கௌசிகனார்
·
அன்று அவண் அசைஇ
.....
குரூஉக்கண் இறடி பொம்மல் பெறுகுவிர் --- மலைபடுகடாம்
சொல்லும் பொருளும்
·
அசைஇ -
இளைப்பாறி
·
கடும்பு -
சுற்றம்
·
ஆரி - அருமை
·
வயிரியம் -
கூத்தர்
·
இறடி - தினை
·
அல்கி - தங்கி
·
நரலும்
-ஒழிக்கும்
·
படுகர் - பள்ளம்
·
வேவை - வெந்தது
·
பொம்மல் - சோறு
இலக்கண குறிப்பு
·
அசைஇ, கெழீஇ =சொல்லிசை அளபெடை
·
பரூஉக், குரூஉக்கண் =செய்யுளிசை அளபெடை
·
ஆற்றுப்படுத்தும்
கூத்தன் வள்ளலிடம் பெற்ற பரிசுகுறித்து எதிர்வரும் கூத்தனை அழைத்து
நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெறுவாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை
·
மலைபடுகடாம் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
·
மலைபடுகடாம் 583 அடிகள் கொண்டது
·
மலைபடுகடாம் -கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது
·
மலையை யானையாகவும் மலையின் எழும் ஓசைகளை
யானையின் ஓசையாக உருவகம் செய்வதால் இது
மலைபடுகடாம்
·
நன்னன் என்ற குறுநிலமன்னன் இதன் பாட்டுடைத் தலைவன்
·
புலவர் பெயர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
கோபல்லபுரத்து மக்கள் -கி ராஜநாராயணன்
கரிசல் இலக்கியம்
·
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்தது கரிசல் இலக்கியம்
·
கரிசல் மண்ணின்
படைப்பாளி கு.அழகிரிசாமி கி.நாராயணனுக்கு
முன் கரிசல் இலக்கியம் எழுதியவர்
·
கரிசல்
இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் கி ராஜநாராயணன்
·
கரிசல்
இலக்கிய பரம்பரை
பா. செயப்பிரகாசம், பூமணி, வீர வேலுச்சாமி, சோ.தர்மன், வேல
ராமமூர்த்தி.
·
வட்டார வழக்குச்
சொற்கள்
- பாச்சல் -பாத்தி
- பதனம்- கவனம்
- நீத்துப்பாகம் -மேல் கஞ்சி
- கடிச்சு குடித்தல் -வாய் வைத்துக் குடித்தல்
- மகுளி -சோற்றுக் கஞ்சி
- வரத்துக் காரன் - புதியவன்
- சடைத்து புளித்து -சலிப்பு
- அலுக்கம் -அழுத்தம் (அணுக்கம்)
- தொலவட்டையில் - தொலைவில்
·
கோபல்ல
கிராமம் என்ற புதினத்தின் ஆசிரியர் கி ராஜநாராயணன்
·
கி ராஜநாராயணன்
சொந்த ஊர் இடைசெவல்
·
இந்நூல் இந்திய
விடுதலைப் போராட்டத்தினை பின்னணியாகக் கொண்ட நூல்
·
1991 இல் சாகித்ய
அகாடமி விருது பெற்றது
·
கி
ராஜநாராயணன் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்
·
இவரின் கதைகள்
ஒரு கதைசொல்லியின் போக்கில் அமைந்திருக்கும்
·
கி ராஜநாராயணன் “கரிசல் வட்டார
அகராதி” ஒன்றை உருவாக்கினார்
·
வட்டார மரபு
வாய்மொழி புனை கதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகிறது
·
கறங்கு இசை
விழவின் உறந்தை"
என அகநானூறு திருச்சி மாவட்டத்தின் உறையூர் பற்றிக் கூறுகிறது
தொகாநிலைத் தொடர்கள்
தொகாநிலைத் தொடர்
·
இரு சொற்களுக்கு
இடையில் சொல் மற்றும் உருபு இல்லாமல் வருபவை
எ.கா : காற்று
வீசியது, குயில் கூவியது
·
தொகாநிலை
தொடரின் ஒன்பது வகைகள்
எழுவாய் தொடர், விளித்தொடர், வினைமுற்றுத்
தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், வேற்றுமைத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர் மற்றும் அடுக்குத்தொடர்.
1. எழுவாய் தொடர்
எழுவாய் உடன் பெயர் வினை வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது
எ.கா : இனியன்
கவிஞர் -பெயர் , காவிரி
பாய்ந்தது -வினை, பேருந்து வருமா? - வினா
2. விளித்தொடர்
விளியுடன் வினை தொடர்வது எ. கா நண்பா எழுது
3. வினைமுற்று தொடர்
வினைமுற்று உடன் ஒரு பெயர் தொடர்வது. எ. கா பாடினால் கண்ணகி
4. பெயரெச்சத் தொடர்
முற்றுப் பெறாத வினை பெயர்ச்சொல்லை தொடர்வது பெயரெச்சத்தொடர். எ.கா கேட்ட பாடல்
5.
வினையெச்சத்
தொடர்
முற்றுப் பெறாத
வினை வினைச் சொல்லைத் தொடர்வது வினையெச்சத் தொடர் பாடி மகிழ்ந்தனர்
6.
வேற்றுமைத்
தொடர்
வேற்றுமை
உருபுகள் வெளிப்படையாக அமையும் சொற்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் எ. கா கட்டுரையைப் படித்தாள்
7.
இடைச்சொல்
தொடர்
இடைச்சொல் உடன்
பெயர் மற்றும் வினை தொடர்வது இடைச்சொல். எ. கா மற்றொன்று இதில் மற்று என்பது இடைச்சொல்
8. உரிச்சொல் தொடர்
உரிச்சொல் பெயரோ வினையோ தொடர்வது சாலச் சிறந்தது சால என்பது உரிசொல்
9. அடுக்குத்தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது வருக வருக வருக
10.
கூட்டு நிலை
பெயரெச்சம்
ஒன்றுக்கு மேற்பட்ட
வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது கூட்டு நிலை பெயரெச்சம்.. வேண்டிய கூடிய தக்க தல்ல பெயரெச்சங்கள் செய வாய்ப்பாட்டு வினையெச்சம் கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க
செய்தி
·
மைக்கடல்
முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து என முக்கூடற்பள்ளு கூறுகிறது
· கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் …….
இலையில் இட வெள்ளி எழும்--- காளமேகப்
புலவர் பாடிய பாடல்
TRANSLATIONS
·
செவ்விலக்கியம் -classical
literature
·
காப்பிய
இலக்கியம் -epic literature
·
பக்தி இலக்கியம் -devotional
literature
·
பண்டைய இலக்கியம் -
ancient literature
·
வட்டார
இலக்கியம் -regional literature
·
நாட்டுப்புற
இலக்கியம் -folk literature
·
நவீன இலக்கியம் -modern
literature
நூலும் ஆசிரியர்களும்
·
திருக்குறள்
தெளிவுரை-வ உ சிதம்பரனார்
·
சிறுவர்
நாடோடிக் கதைகள் -கி ராஜநாராயணன்
·
ஆறாம் திணை -மருத்துவர் கு
சிவராமன்
திருக்குறள்
·
வேலொடு நின்றான்
இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு- பயின்று
வந்துள்ள அணி உவமை அணி
·
பண் என்னாம்
பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் -எடுத்துக்காட்டு
உவமை அணி பயின்று வந்துள்ளது
·
நச்சப் படாதவன்
செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத்
தற்று -இதில் உவமை
அணி பயின்று வந்துள்ளது
·
உரை(றை) ஊற்றி
ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத பால்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்
………………… – அறிவுமதி