Type Here to Get Search Results !

இயல் 2 தமிழ் பத்தாம் வகுப்புஉயிரின் ஓசை - eyal-2-10th-tamil-notes-vurin-oschai

இயல்

தமிழ் பத்தாம் வகுப்பு

Table of contents(toc)

உயிரின் ஓசை 

கேட்கிறதா என் குரல்

  • தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்
  • திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறியுள்ளார்- திருமூலர்
  • பிற்கால ஒளவையார் - வாயுதாரணை எனும் அதிகாரத்தில்

வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கம்உண் டாம்.(குறள் 49-ஒளவை)

நான்கு திசையிலும் நான்

கிழக்கு 

  • கிழக்கு என்பதற்கு குணக்கு என்றும் பெயர்
  • இத்திசையில் வீசும் காற்று-கொண்டல்
  • மழையை சுமந்து வருவதால் -மழைக்காற்று 

மேற்கு 

  • மேற்கு என்பதற்கு குடக்கு எனும் பெயரும் உண்டு
  • இத்திசைக் காற்று -கோடை
  • வறண்ட நிலத்திலிருந்து வீசுவதால் - வெப்பக்காற்று

வடக்கு 

  • வடக்கு என்பதற்கு வாடை என்றும் பெயர்
  • இத்திசையிலிருந்து வீசும் காற்று-வாடைக்காற்று
  • பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் ஊதைக் காற்று

தெற்கு

  • தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல்
  • ஆறு, மலைகளைக் கடந்து வருவதால் இதமான இயல்பு கொண்டது

இலக்கியத்தில் நான்

  • வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் சிலப்பதிகாரம்
  • நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதாக இளங்கோவடிகள் பாடினார்
  • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி 
  • நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் 
    செந்தமிழின் பின்னுதித்த தென்றலே 
  • நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக 
    களிஇயல் யானைக் கரிகால் வளவ - புறம் 66 
  • கரிகால பெருவளத்தான் புகழ்ந்து பாடிய பாடலில் சங்கத் தமிழ்பெண் புலவர்  வெண்ணிகுத்தியார் 'வளி' குறிப்பிட்டு சிறப்பு செய்திருப்பது என்னையே

ஹிப்பாலஸ் பருவக்காற்று

  • கி.பி.முதல் நூற்றாண்டு ஹிப்பாலஸ் எனும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி பருவக் காற்றின் உதவியால் நடுக்கடல் வழியாக முசிறி துறைமுகத்துக்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
  • அதுமுதல் யவன கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டுத் துறைமுகத்திற்கு வந்து சென்றன.
  • அந்தப் பருவக் காற்றை கண்டுபிடித்தவர் பெயரால் அது  ஹிப்பாலஸ் பருவக்காற்று எனப் பெயர் பெற்றது.

ஆற்றலாக நான்

  • ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக்காற்று 
  • அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ காற்றாகவும் வீசுகிறேன்.
  • இந்தியாவிற்கு தேவையான 70 % மழை அளவை தென்மேற்கு பருவக்காற்று கொடுக்கிறது
  • வளி மிகின் வலி இல்லை என ஐயூர்  முடவனார் - புறம்
  • மதுரை  இளநாகனார் கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று எனது வேகத்தைப் பற்றிக் கூறுகிறார்
  • உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா 5வது இடம். இந்தியாவில் தமிழகம் முதலிடம்
  • உலகிலேயே காற்று அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் 2 ம் இடம் இந்தியாவிற்கே உரியது
  • காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) கூறுகிறது 
  • குளோரோ புளோரோ கார்பன் காற்று மாசுக்கு முக்கிய காரணம் இதற்குப் பதிலாக இப்போது ஹைட்ரோ கார்பன் (HC)  பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்
  • ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 வரை  மூச்சுக் காற்றினை  நாம் வெளியிடுகிறோம்
  • ஜூன் 15 உலக காற்று தினம்
  • குளோரோ புளோரோ கார்பன் ஒரு மூலக்கூறு ஓசோனின்(O3) ஒரு லட்சம் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்
  • மென்துகிலாய் உடல் வருடி
    வாஞ்சையுடன் மனம் வருடி 
    பகலெரிச்சல் பண கவலை பயம் குழப்பம்……
    … 
    உனைப் பாடாத இருந்து விட்டேன் 
    புதுக்கவிதையில் சிக்கி போனேன் தேவகோட்டை வா.மூர்த்தி
  • தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழா திருப்பாவை, திருவெம்பாவை தாய் மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர்  -தனிநாயகம் அடிகள் -ஒன்றே உலகம்

காற்றே வா 

  • மகரந்தத் தூளை சுமந்துகொண்டு
    மனதை மயலுறுத்து கின்ற
    …… உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் 
    உன்னை வழிபடுகின்றோம்  -பாரதியார் 

சொல்லும் பொருளும் 

  • மயிலுறுத்தும் -மயங்கச் செய் 
  • ப்ராண ரஸம் - உயிர்வளி 
  • லயத்துடன் -சீராக

பாரதியார் 

  • நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை
  • எட்டயபுர எந்தலாக அறியப்பட்டவர் 
  • கேலிச்சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர் 
  • சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணடிமைத்தனத்தையும்  தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்.
  • குயில் பாட்டுபாஞ்சாலி சபதம்கண்ணன் பாட்டுபாப்பா பாட்டுபுதிய ஆத்திச்சூடி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  • சுதேசமித்திரன் இதழில் ஆசிரியராகவும் பணியாற்றினார் 
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி -எனப் பாராட்டப்பட்டவர்
  • வசன கவிதை ஆங்கிலத்தில் Prose  poetry (free Verse)
  • திக்குகள் எட்டும் சிதறி தக்கத்
    தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட ....
    ……தக்கை அடிக்குது காற்று தக்க 
    தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட  -பாரதியார்

முல்லைப்பாட்டு - நப்பூதனார்

  • நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
    வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல........
    ……. கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர 
    இன்னே வருகுவர் தாயர் என்போள் 
    நன்னர் நன்மொழி கேட்டனம் – நப்பூதனார் 
     

சொல்லும் பொருளும்

  •  நனந்தலை உலகம் -அகன்ற உலகம் 
  • நேமி - வலம்புரிச் சங்கு 
  • கோடு -மலை 
  • கொடுஞ் செலவு  -விரைவாக  செல்லுதல் 
  • நறுவீ -நறுமணம் உடைய மலர்கள் 
  • தூஉய் -தூவி 
  • விரிச்சி- நற்சொல் 
  • சுவல் - தோள்

இலக்கணக்குறிப்பு 

  • மூதூர் - பண்புத்தொகை.
  • உறுதுயர்         - வினைத்தொகை 
  • கைதொழுது   - மூன்றாம் வேற்றுமைத்தொகை 
  • தடக்கை          - உரிச்சொல் தொடர்

விரிச்சி 

  • ஒரு செயல் நன்றாக நடக்க வேண்டி - தெய்வத்தைத் தொழுது நிற்கும்போது -அயலார் பேசுவதை கூர்ந்து நோக்கி நற்சொல் வந்தால் நன்மையும்  தீய சொல் வந்தால் தீமையும் நடக்கும் என்று பொருள் கொள்வர் 

முல்லை நிலம் 

  • முதற்பொருள் -காடும் காடு சார்ந்த இடமும் 
  • பொழுது         - பெரும்பொழுது கார்காலம் (ஆவணி, புரட்டாசி) -சிறுபொழுது மாலை 
  • கருப்பொருள்           
    • நீர்       - குறுஞ்சுனை நீர்காட்டாறு 
    • மரம்    - கொன்றை, காயா, குருந்தம் 
    • பூ         - முல்லை, பிடவம், தோன்றி பூ
  • உரிபொருள் -இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)

பொதுவான குறிப்புகள்

  • முல்லைப்பாட்டு 103  அடிகள் கொண்டது 
  • முல்லைப்பாட்டு ஆசிரியர் பாவால்  ஆனது 
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் 
  • இது காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் இயற்றியது

புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

  • தமிழ்குடிகள்-  மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, நாடுகளின் நெடுங்காலம் வாழ்ந்து வருகின்றனர்
  • கப்பித்தான்  -தலைமை மாலுமி (கேப்டன்)
  • தொங்கான் -கப்பல் 
  • வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2000 ம் ஆண்டில் தொடங்கியது
  • புதுதில்லியில் உள்ள உலக வானியல் அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரிலிருந்து புயலுக்கு பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது 
  • சார்க் அமைப்பில் இருக்கும் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இப்பெயர்களை வழங்கின
  • இந்தியா வழங்கிய புயலின் பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்). லெஹர் (அலை).இனி வரும் புயல்களின் பெயர் மேக், சாகர், வாயு 
  • கஜா புயலின் பெயர் இலங்கை வழங்கியது. 
  • அடுத்து வந்த பெய்ட்டி- தாய்லாந்து வழங்கியது

கொரியாலிஸ் விளைவு

  • நிலநடுக் கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை  வலப்புறமாகத் திருப்பும் தெற்குப் பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாக இருப்போம் வேகம் கூடினால் இந்த விலக்கமும் கூடும் 
  • வங்கக் கடலில் வீசும் புயலும்   அமெரிக்காவையும்  ஜப்பானையும்  சீனாவையும் தாக்கும்  புயலும் இடம்புரி பெயர்கள் 
  • ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரி புயல்கள் 
  • பிரெஞ்சு  நாட்டைச் சேர்ந்த கணித வல்லுனர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார் இதன் பெயர் கொரியாலிஸ் விளைவு என்று அழைக்கப்படுகிறது
  • பறவை மீன், அவுலியா மீன் -மீன் வகைகள் 
  • பிலவான் - இந்தோனேசியாவில் உள்ள இடம்.

பொதுவான குறிப்புகள்

  • புலம்பெயர்ந்த தமிழர்கள்பற்றிய புதினம் புயலிலே ஒரு தோணி 
  • ப. சிங்காரம் 1920-1997
  • ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேர்ந்தவர் 
  • இந்தோனேசியா சென்றார் மீண்டும் வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார்
  • ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களுக்குக் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.

 முன் தோன்றிய மூத்தகுடி 

  • பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி  -அகநானூறு  - நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை

தொகைநிலைத் தொடர்கள்

சொற்றொடர்  

  • சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர். நீர்  பருகினான்.,  வெண்சங்கு  ஊதினான்

தொகைநிலைத் தொடர்

  • பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர் சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபு, வினை, பண்பு ஆகியவற்றின் உருபுகள் தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல்போல் நிற்கும் ஆனால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர்
  • கரும்பு தின்றான் -ஐ வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது

வகைகள்

தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்

  1. வேற்றுமைத்தொகை 
  2. வினைத்தொகை 
  3. பண்புத்தொகை 
  4. உவமைத்தொகை 
  5. உம்மைத்தொகை 
  6. அன்மொழித்தொகை.

வேற்றுமைத்தொகை

  • ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமை தொகை

உருபும் பயனும் உடன் தொக்க தொகை 

தேர்ப்பாகன்

  • தேரை ஓட்டும் பாகன்- ஐ எனும் வேற்றுமை உருபும், ஓட்டும்   பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளது. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும் இதுவும் வேற்றுமைத் தொகையே
  • தமிழ் தொண்டு (தமிழுக்கு செய்யும் தொண்டு) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

வினைத்தொகை 

  • காலம் காட்டும், இடைநிலையும்  பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப்பகுதி தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது வினைத்தொகை 
  • காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை ஆகும்
    • வீசுதென்றல் -வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும்
    • கொல்களிறு -கொன்ற களிறு கொல்கின்ற  களிறு கொல்லும் களிறு  என முக்காலமும் முக்காலத்திற்கும் பொருந்தும் படி விரிந்து பொருள் தருகின்றன. 
  • காலம் காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன
  • வினைப் பகுதியும் அடுத்து பெயர் சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்

பண்புத்தொகை 

  • நிறம், வடிவம், சுவை, அளவு முதலியவற்றை உணர்த்தும் பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் மை எனும் பண்பு விகுதியும்  ஆகிய, ஆன  என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது. எ.கா

·  செங்காந்தள் = செம்மையாகிய காந்தள் 

·  வட்டத்தொட்டி =வட்டமான தொட்டி

·  இன்மொழி =இனிமையான மொழி

இருபெயரொட்டுப் பண்புத்தொகை 

  • சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய, எனும் பண்பு உருபு தொக்கி வருவது  எ. கா:

·        மார்கழித் திங்கள் = மார்கழி ஆகிய திங்கள்

·        சாரைப்பாம்பு = சாரை எனும் பாம்பு

உவமைத்தொகை 

  • உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம் ) இடையில் உவம உருபு மறைந்து வருவது 

எ.கா:

·        மலர்க்கை = மலர் போன்ற கை

உம்மைத்தொகை 

  • இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் முன்னும்  உம் எனும் இடைச்சொல் மறைந்து வருவது. எ.கா

·        அண்ணன் தம்பி. =அண்ணனும் தம்பியும்

·        தாய் சேய் =தாயும் சேயும்

அன்மொழித்தொகை 

  • வேற்றுமை. வினை, பண்பு. உவமை, உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது. எ.கா
  • சிவப்பு சட்டை பேசினார் = சிவப்பு சட்டை அணிந்தவர் பேசினார்
  • முறுக்கு மீசை வந்தார்=முறுக்கு மீசை வைத்தவர் வந்தார்.
  • மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
    வளரும் விழி வண்ணமே – வந்து-- கவிஞர் கண்ணதாசன்
  • வீணையிலிருந்து 
    கவர்ந்த இசையை
    எங்கே கொண்டு போய்
    ஒளித்து வைக்கிறாய் அப்துல் ரகுமான் 

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

  1. பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் : ஆல மலர்; பலா மலர்.
  2. மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் : சுள்ளி மலர், பாங்கர் மலர்.
  3. அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் : அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.
  4. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன : நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
  5. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும்.
  6. பாதிரிப் பூ - குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும். - கோவை. இளஞ்சேரன்

கலைச்சொற்கள் அறிவோம்

  • Strom               - புயல் 
  • Tornado            - சூறாவளி 
  • Tempest           -பெருங்காற்று 
  • Land breeze      - நிலக்காற்று 
  • Sea breeze        -கடல்காற்று
  •  Whirlwind         - சுழல்காற்று

 நூல்களும் ஆசிரியர்களும்

  • குயில் பாட்டு -பாரதியார் 
  • அதோ அந்தப் பறவைபோல -ச முகமது அலி 
  • உலகின் மிகச்சிறிய தவளை -எஸ். ராமகிருஷ்ணன்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.