Type Here to Get Search Results !

இயல் 1-10 வகுப்பு தமிழ் அமுத ஊற்று.eyal-1-10th-tamil-notes-amutha-vootru



இயல்

10 வகுப்பு தமிழ்

Table of contents(toc)

அமுத ஊற்று.

அன்னை மொழியே 

அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே ……

…… நினைவால் முடிதாழ வாழ்த்துமே

செம்மொழியே உள் உயிரே செப்பரிய நின்பெருமை .......

...... முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனிதமிழே - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 

கனிச்சாறு

  • சாகும்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் என்றன்  சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்".  -க சச்சிதானந்தன்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  • கனிச்சாறு -தொகுதி 1- இரு வேறு தலைப்பு (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்)
  • இதழ்கள்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு 
  • இயற்பெயர் துரை. மாணிக்கம்
  • படைப்புகள்: உலகியல் நூறு, பாவிய கொத்துநூறாசிரியம்கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்கள் 
  • திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழ் கருவூலம்
  • இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ் சொல்வளம்

தேவநேய பாவாணர்

  • நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்- மகாகவி பாரதி
  • பிற திராவிட மொழிகள் உரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள என்ன கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) குறிப்பிட்டுள்ளார்

அடி வகைகள் 

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள்

  • தாள் -நெல், கேழ்வரகு 
  • தண்டு - கீரை வாழை 
  • கோல்- நெட்டி, மிளகாய்ச் செடி 
  • தூறு -குத்துச்செடி, புதர் 
  • தட்டு அல்லது தட்டை -கம்பு, சோளம்,
  • கழி -கரும்பு  
  • கழை- மூங்கில்.
  • அடி -புளி, வேம்பு 

கிளைப் பிரிவுகள்

தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள்.

  • கவை -அடிமரத்தினின்று பிரியும் பெரும் கிளை
  • கொம்பு அல்லது கொப்பு- கவையின் பிரிவு
  • கிளை - கொம்பின் பிரிவு 
  • சினை - கிளையின் பிரிவு 
  • போத்து - சினையின் பிரிவு 
  • குச்சு - போத்தின் பிரிவு 
  • இணுக்கு - குச்சியின் பிரிவு

காய்ந்த அடி, கிளை  பெயர்

  • சுள்ளி-  காய்ந்த குச்சி அழகு
  • விறகு - காய்ந்த சிறு கிளை
  • வெங்கழி  - காய்ந்த கழி 
  • கட்டை - காய்ந்த கொம்பு கொம்பும் அடியும்

இலை வகை 

  • இலை - புளி, வேம்பு இலை 
  • தாள் -நெல், புல் இலை 
  • தோகை -சோளம், கரும்பு 
  • ஓலை- தென்னை, பனை இலைகள் 
  • சண்டு -காய்ந்த தாளும் தோகையும் 
  • சருகு - காய்ந்த இலை 

கொழுந்து வகை 

  • துளிர் அல்லது தளிர் = நெல், புல் கொழுந்து 
  • முறி அல்லது கொழுந்து =புளி, வேம்பு கொழுந்து.  
  • குருத்து =சோளம், கரும்பு, தென்னை, பனை கொழுந்து.
  • கொழுந்தாடை =கரும்பின் நுனி

பூவின் நிலைகள் 

  • அரும்பு =பூவின் தோற்ற நிலை 
  • போது= பூ விரியத் தொடங்கும் நிலை 
  • மலர் =(அலர்)  பூவின் மலர்ந்த நிலை 
  • வீ =செடியிலிருந்து பூக் கீழே விழும்  நிலையில் 
  • செம்மல் =பூ வாடிய நிலை

யார் இவர்??

  • சொல் ஆராய்ச்சியில் பாவாணரும்  வியந்தவர்= இரா.இளகுமரனார்
  • திருச்சிராப்பள்ளி அல்லூரில் = திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கினார் 
  • தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர் 
  • தமிழ்த் தென்றல் திரு.வி. -போல் இமைகளை மூடி எழுதக் கற்றுக் கொண்டவர் 
  • படைப்புகள்: இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, தேவநேயம் ஆகிய நூல்கள் 
  • உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு  இரா இளங்குமரனார் 

பிஞ்சு வகைகள்

  • பூம்பிஞ்சு      - பூவோடு கூடிய இளம்பிஞ்சு 
  • பிஞ்சு            - இளம் காய் 
  • வடு                 -மாம்பிஞ்சு 
  • மூசு                -பலா பிஞ்சு 
  • கவ்வை         -எள் பிஞ்சு 
  • குரும்பை     -தென்னை, பனை 
  • முட்டு குரும்பை -சிறு குரும்பை 
  • இளநீர்           - முற்றாத தேங்காய் 
  • நுழாய்           -இளம் பாக்கு 
  • கருக்கல்       -இளநெல் 
  • கச்சல்            -வாழைப்பிஞ்சு

குலை வகை

  • கொத்து        -அவரை, துவரை 
  • குலை            - கொடிமுந்திரி குலை.
  • தாறு               -வாழை குலை 
  • கதிர்                - கேழ்வரகு, சோளம் கதிர் 
  • அலகு அல்லது குரல் -நெல் தினை கதிர் 
  • சீப்பு                -வாழைத்தாற்றின் பகுதி.

கெட்டுப்போன காய்கனி வகை

  • சூம்பல்         -நுனியில் சுருங்கிய காய்
  • சிவியல்        -சுருங்கிய பழம் 
  • சொத்தை     -பூச்சி அரித்த காய் அல்லது கனி  
  • வெம்பல்       -சூட்டினால் பழுத்த பிஞ்சு.
  • அளியல்        -குளுகுளுத்த பழம் 
  • அழுகல்         -குளுகுளுத்து நாறிய பழம்
  • சொண்டு      -பதராய் போன மிளகாய்
  • கோட்டான் காய்-கூகை காய் கோட்டான் உட்கார்ந்தினால் கெட்ட காய் 
  • தேரைகாய்    - தேரை அமர்ந்ததனால் கெட்ட காய் 
  • அல்லிக்காய்தேரை அமர்ந்ததனால் கெட்ட தேங்காய்
  • ஒல்லிக்காய்- தென்னையில் கெட்ட காய்

பழத்தோல் வகைகள்

  • தொலி           - மிகத் தோல் திண்ணமானது 
  • தோடு              -வன்மையானது 
  • ஓடு                  - மிக வன்மையானது 
  • குடுக்கை      -சுரையின் ஓடு 
  • மட்டை           -தேங்காய் நெற்றின் மேற்பகுதி 
  • உமி                -நெல், கம்பு முதலியவற்றின் மூடி 
  • கொம்மை    - வரகு, கேழ்வரகு ஆகியவற்றை உமி

மணி வகை 

  • கூலம்            -நெல், புல் முதலியவற்றின் தானியம்
  • பயறு              -அவரை, உளுந்து முதலியவை 
  • கடலை          - வேர்க்கடலை & கொண்டக்கடலை முதலியவை 
  • விதை           - கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து 
  • காழ்                -புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் விதை
  • முத்து             -வேம்பு, ஆமணக்கு ஆகியவற்றின் வித்து 
  • கொட்டை     -மா, பனை ஆகியவற்றின் வித்து
  • தேங்காய்      - தென்னையின் வித்து 
  • முதிரை          -அவரை, துவரை முதலிய பயிர்கள்

இளம் பயிர் வகை 

  • நாற்று           -நெல், கத்தரி -இளநிலை 
  • கன்று            -மா, புளி, வாழை இளநிலை 
  • குருத்து         -வாழையின் இளநிலை  
  • பிள்ளை       -தென்னையின்  இளநிலை 
  • குட்டி              -விளாவின் இளநிலை 
  • மடலி அல்லது வடலி -பனையின் இளநிலை 
  • பைங்கூழ்     -நெல், சோளம்  முதலியவற்றின் பசும் பயிர்

 

  • கோதுமை வகை- சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமைவாற்கோதுமை
  • நெல் வகை-செந்நெல், வெண்ணெல்கார் நெல், சம்பா, மட்டை கார்
  • சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச் சம்பா என அறுபது வகை உள்ளன
  • வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலியவை சிறு கூலங்கள் 
  • உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே.  பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையா

தேவநேய பாவாணர்,

  • மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள் நூலில் உள்ள தமிழ் சொல்வளம் இப்பகுதி.
  • தமிழ் சொல்லாராய்ச்சி உச்சம் தொட்டவர் 
  • செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராகப் பணியாற்றியவர் 
  • உலகத் தமிழ் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்

குறிப்பு

  • போர்ச்சுகீசிய நாட்டில் தலைநகர் லிஸ்பனில் 1554 கார்டிலா எனும் நூலில் முதன்முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது அதன் முழு பெயர் cartilage de lingoa tamul e português.
  • இந்திய மொழிகளிலே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில்  அச்சேறியது தமிழ் தான்

இரட்டுற மொழிதல்,

  • முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
    மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம் 
    அணை கிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு 
    இணைகிடந்த தேதமிழ்  ஈண்டு -தனிப்பாடல் திரட்டு சந்தக்கவிமணி  தமிழழகனார்

சொல்லும் பொருளும் 

  • துய்ப்பது - கற்பது (தருதல்) 
  • மேவலால் - பொருந்துதல் (பெறுதல்)

பொதுவான குறிப்புகள்

  • ஒரு சொல்லோ சொற்றொடரோ இரு பொருள் பட வருதல் இரட்டுற மொழிதல் அணி எனப்படும். சிலேடை எனவும் அழைப்பர்
  • செய்யுள், உரைநடை, மேடைப்பேச்சு - சிலேடை பயன்படுகிறது
  • புலவர்கள் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம்   பகுதி கழகப்   பதிப்பு) இந்நூல்.
  • சந்தக்கவிமணியெனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம் 
  • 12 சிற்றிலக்கிய நூல்கள் இவர் படைத்துள்ளார்.

உரைநடையில் அணிநலன்கள்

எழில் முதல்வன்

  • முதல் தமிழ் கணினி திருவள்ளுவர் பெயரில் முதல்  தமிழ் கணினி  
  • 1983 செப்டம்பர் டி. சி . எம் - டேட்டா புரோடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வந்தது 
  • முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை உள்ளீடு  செலுத்துதல் பெறுதல் முடியும்
  • தேனாம்பேட்டையில் இருந்த புள்ளி விவரத் துறை அலுவலகத்துக்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழி கணினி திருவள்ளுவரே!
  • திருப்பரங்குன்றத்தின் அழகை பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரு பெரிய கண்ணாடி வடபுறம் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்" -குறிஞ்சிமலர் நூல்- நா.பார்த்தசாரதி.
  • உவமையும் பொருளும் வேற்றுமை  ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவமாகும் -தண்டி.
  • களம்புக துடித்து நின்ற உனக்கு  வெற்றி சாறு கிடைத்துவிட்டதுஉண்டு மகிழ்ந்தாய்:  உன் புன்னகை தான் அதற்குச் சான்று "- அறிஞர் அண்ணா.
  • புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் (எடுத்துக்காட்டு உவமையணி) -இணை ஒப்பு (analogy).
  • வ. ராமசாமி - மழையும் புயலும் -ஊர் கூடி செக்கு தள்ள முடியுமா?
  • ஞாயிறு திங்கள் நெஞ்சம் போன்ற அஃறிணை சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" -தொல்காப்பியர் - உணர்வில்லாதவை உணர்வு உள்ளது போல கற்பனை-இப்பொழுது இலக்கணை- எனக் குறிப்பிடுவர்
  • சொல்லின் செல்வர் -இரா.பி.சே - தமிழின்பம் (இரா.பி.சேதுப்பிள்ளை).
  • சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு   மு வரதராசனார் தம் நாட்டுப்பற்று எனும் கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.
  • முரண்படுவது போல உண்மையில் முரண்படாத மெய்மையை சொல்லுவது முரண்படு மெய்மை (Paradox).
  • எ.கா இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றுக்கு தவிர வேறு எதற்கும் நான் பயப்பட வேண்டும்
  • கலப்பில்லாத பொய் சொல்முரண் - Oxymoron
  • எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவது எதிரிணை இசைவு (Antithesis).
  • எழில்முதல்வன்- புதிய உரைநடை - நூலின் ஒரு கட்டுரை - உரைநடையின்  அணிநலன்கள்
  • மா.ராமலிங்கம் (எ)எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பணியைத் தொடர்ந்தவர் 
  • குடந்தை அரசு ஆடவர் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்  தமிழ் துறை தலைவராகப் பணியாற்றியவர்
  • படைப்புகள்: இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் நூல்கள்.
  • புதிய உரைநடை என்னும் நூலுக்காகச் சாகித்ய அகாடமி பரிசுப் பெற்றவர்

முன்தோன்றிய மூத்த குடி

  • வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
    மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய
    தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்" -சிலப்பதிகாரம் காடுகாண் காதை
  • திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை

எழுத்து, சொல் 

  • மொழியைத் தெளிவுற பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம்
  • மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும்

எழுத்து

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம் 
  7. ஐகாரக்குறுக்கம் 
  8. ஒளகாரக் குறுக்கம் 
  9. மகரக்குறுக்கம் 
  10. ஆய்தக்குறுக்கம் 

உயிரளபெடை

  • செய்யுளில் ஓசை குறையும்போது அதை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்து ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும் 
  • அதைக் குறிக்க நெட்டெழுத்துக்களின் இனமான குற்றெழுத்து அவற்றின் பின்னால் வரும்.
  • உயிரளபெடை மூன்று வகைப்படும்

செய்யுளிசை அளபெடை

  • செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தல்.
  • இசைநிறை அளபெடை என்றும் அழைப்பர்  

·        எ. கா:  ஓஒதல் வேண்டும் – மொழிமுதல்
            உறாஅர்க்கு உறுநோய் – மொழியிடை
            நல்ல படாஅ பறை-மொழியிறுதி

இன்னிசை அளபடை

  • செய்யுளில் ஓசை குறையாத  இடத்திலும்  இனிய ஓசை அளபெடுப்பது 
  • கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே 
    எடுப்பதூஉம் எல்லாம் மழை

சொல்லிசை அளபெடை

  • செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது
  • உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
    வரனசைஇ இன்னும் உளேன்
  • நசை விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுப்பது
  • பெயர்ச்சொல் வினை அடையாக மாறியது

ஒற்றளபடை

  • செய்யுளில் ஓசை குறையும்போது அதை நிறைவுசெய்ய மெய்யெழுத்துக்களான -ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும் ஆய்த எழுத்தும் என 11 எழுத்துகள் அளபெடுப்பது
  • எஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர் 
    வெஃஃ குவார்க்கில்லை வீடு

சொல்

  • ஓர் எழுத்து   தனித்தோ பல எழுத்துக்கள் சேர்ந்தோ  பொருள் தரும் வகையில் அமைவது சொல்
  • இரு  திணைகளையும் ஐந்து  பால்களையும் குறிக்கும்
  • மூவகை இடங்களிலும் வரும் 
  • உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும் 
  • வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வரும்

மூவகை மொழி  

  • தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழியென மூன்று வகை அமையும்
  • ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி
    பல பொருளன பொது இருமையும் ஏற்பன - நன்னூல்


தனிமொழி 

  • ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்
  • கண், படி =பகாபதம் 
  • கண்ணன், படித்தான் =பகுபதம்

தொடர்மொழி 

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட  தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள்   தருவது 
  • கண்ணன் வந்தான் 
  • மலர் வீட்டுக்குச் சென்றாள்

பொதுமொழி 

  • ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே  பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது
  • எட்டு - எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்,எள் + து. = எள்ளை உண் எனவும்
  • வேங்கை - வேங்கை எனும் மரத்தைக் குறிக்கும் 
  • வேம் + கை =வேகின்ற கை எனவும் பொருள் தரும்
  • இவை இருபொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது

தொழிற்பெயர்

  • ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது  எண், இடம், காலம். பால் ஆகியவற்றை குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர்.

விகுதி பெற்ற தொழிற்பெயர்

 வினையடி உடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர்

  • வினையடி  == விகுதி ==  தொழிற்பெயர்
  • நட             ==    தல்   ==       நடத்தல்
  • ஆள்         ==    அல் ==        ஆளல்
  • வாழ்          ==    கை  ==       வாழ்க்கை
  • ஒரே வினையடி பல பகுதிகளை ஏற்கும் 

எ.கா - நட என்பது வினையடி ;     நடை, நடத்தல். நடத்தை

எதிர்மறை தொழிற்பெயர் 

  • எதிர்மறைப் பொருளில் வரும் தொழிற்பெயர்      எகா: நடவாமை, கொல்லாமை

முதனிலை தொழிற்பெயர்

  • விகுதி பெறாமல் வினை பகுதியே தொழிற்பெயராதல் முதனிலை தொழிற்பெயர்
    எகா: தட்டு, உரை, அடி

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

  • விகுதி பெறாமல் முதல் நிலை திரிந்து வரும் தொழிற்பெயர்
    எகா: கெடுதல்  -கெடு -கேடு,            சுடுதல் -சுடு -சூடு

வினையாலணையும் பெயர்

  • ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலை கொண்டு முடிவது வினையாலணையும் பெயர்.
  • தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் 
  • மூன்று காலங்களிலும் வரும்.  எ.கா வந்தவர் அவர்தான்; பொறுத்தார் பூமியாள்வார்.

தொழிற்பெயர்

வினையாலணையும் பெயர்

வினை பெயர் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்.

தொழில் செய்யும் கருத்தாவை  குறிக்கும்

காலம்  காட்டாது.

காலம் காட்டும்   

படர்க்கைக்கே உரியது.

மூவிடத்திற்க்கும் உரியது

பாடுதல், படித்தல்.

பாடியவள், படித்தவர்

 

  • மரமது மரத்தில் ஏறி 
    மரமதைத் தோளில் வைத்து 
    மரமது மரத்தைக் கண்டு 
    மரத்தினால் மரத்தைக் குத்தி 
    மரமது வழியே  சென்று 
    வளமனைக்  கேகும் போது
    மரமது கண்ட மாதர் 
    மரமுடன் மரம் எடுத்தார்- தனிப்பாடல் திரட்டு சுந்தர கவிராயர்

மொழிபெயர்ப்பு

If you talk to a man in a language he understands, that goes to his head, if you talk to him in his own language that goes to his heart -Nelson Mandela

ஒரு மனிதனிடம் அவனுக்குப் புரியும் மொழியில் பேசினால், அது அவன் தலைக்கு ஏறும், அவனுடைய சொந்த மொழியில் அவனிடம் பேசினால் அவனுடைய இதயத்திற்குச் செல்லும் - நெல்சன் மண்டேலா

Language is the road map of a culture it tells you where it's people come from and where they are going - Rita mae brown

மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் வரைபடமாகும், அது மக்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பதை அது உங்களுக்குச் சொல்கிறது - ரீட்டா மேப்பிரவுன்

 

தேனிலே ஊறிய செந்தமிழின் -சுவை 

தேரும் சிலப்பதி காரமதை 

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுணர்த்தின் புருவோமே    -கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

 

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே 

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே 

தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே

கா.நமச்சிவாயர்

கலைச்சொற்கள் அறிவோம்

  • Homograph      - ஒப்பெழுத்து                       Vowel               - உயிரெழுத்து 
  • Consonant        - மெய்யெழுத்து                  monolingual     - ஒருமொழி 
  • Conversation    - உரையாடல்                        Discussion        -கலந்துரையாடல்

நூலும் ஆசிரியர்களும்

  • நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் -முனைவர் சேதுமணி மணியன்
  • தவறின்றித் தமிழ் எழுதுவோம் - மா நன்னன்
  • பச்சை நிழல் -உதயசங்கர்

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.