Type Here to Get Search Results !

இயல் 9 தமிழ் 9ம் வகுப்பு அன்பென்னும் அறனே iyal-9-9th-tamil-notes-anbennum-arane

இயல் 9
தமிழ் 9ம் வகுப்பு

அன்பென்னும் அறனே 


Table of contents(toc)

விரிவாகும் ஆளுமை

·       கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • பரந்த ஆளுமையும் (Personality) மனித நலக்கோட்பாடும் (humanism) 
  • நான் மனிதன் மனிதனை சார்ந்த எதுவும் எனக்குப் புறம் அன்று என்பது இலத்தீன் புலவர்  தெறென்ஸ் கூற்று 
  • முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் என்கிறார் கோர்டன் ஆல்போர்ட் (Gordon Allport) உளநூல் வல்லுநர்

1.       தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்; பிறருடைய நலத்திற்கு இன்பத்திற்கு  பாடுபடுதல் வேண்டும்.

2.      ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்க வேண்டும். (Self-objectification)

3.      அவனது வாழ்க்கைக்குத் தன் ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும் (unifying  philosophy of life-self-unification).

  • குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் எனபூட்கையி ல்லோன் யாக்கை போல (புறம். 69) என்னும் அடியில் புலவர் ஆலத்தூர்கிழார் கூறுகிறார்.
  • பிறர் நலவியல் (Altruism) சீனநாட்டில் பொ.ஆ. மு. 604ஆம் ஆண்டில் பிறந்த லாவோட்சும் (Lao-Tse). அவருக்குப் பின்பு கன்பூசியசும் (Confucius பொ.ஆ. மு. 551-479) தம் காலத்திலேயே இந்தக் கொள்கையைப் பற்றிக் கூறினர்.
  • பிளேட்டோ, அரிஸ்டாட்டில் -கிரேக்கத் தத்துவ ஞானிகள்.
  • உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர் , திருக்குறளைப் பற்றிக் கூற்றுஇத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது
  • பிறநாடுகளை வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்காது மொழிமாறும் நாடு – மொழிபெயர் தேயம்என்றுக் கூறுவர்.
  • தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்தமுறை உலகின் பிரிவாகவே அமைந்தது. படுதிரை வையம் பாத்திய பண்பே – (தொல். 948)
  • நன்மையை நன்மைக்காகவே செய்தது தான் - என ஆய் பற்றிக் கூறுகிறது.
  • இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
    அறவிலை வணிகன் ஆய் அலன் - புறம். 134 
  • பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் -"உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற புறப்பாட்டு. பண்புடைமை -அதிகாரத்திற்கு  உரை கண்ட பரிப்பெருமாள் 
  • பண்புடைமையாவது யாவர்மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை

உலகத் தமிழ் மாநாடு

  1. மலேசியா, கோலாலம்பூர்     = 1966 
  2. இந்தியா, சென்னை            =1968 
  3. பிரான்சு, பாரிஸ்                  = 1970 
  4. இலங்கை, யாழ்ப்பாணம் = 1974 
  5. இந்தியா, மதுரை                 = 1981
  6. மலேசியா, கோலாலம்பூர்     = 1987
  7. மொரிசியசு, மொரிசியசு    = 1989 
  8. இந்தியா, தஞ்சாவூர்            =1995 
  9. இந்தியா, கோவை.               =2010

 

இமயமலை, நீடிக்கும் உறுதிக்கு மேற்கோளாகக் காட்டப்படுகின்றது.

  • இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
    தீது இல் யாக்கையொடு  மாய்தல் தவத்தலையே- புறம்

அத்துடன் கங்கையையும் இமயத்தில் பெய்யும் மழையையும் உவமையாகச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

  • இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக்
    கொண்டல் மாமழை பொழிந்த
    நுண்பல் துளியினும் வாழிய பலவே ”. - புறம் 34 
  • தமிழ் மக்கள்சான்றோன்” -குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் “sapens” (அறிவுடையோன்) - இலட்சிய புருஷனைப் போற்றி வந்தனர்.
  • உரோமையருடைய -சாப்பியன்ஸ்”  சான்றோன் -சமுதாயத்திலிருந்து விலகி இருந்தனர்.
  • பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனுக்குக் கூறியது போலத்  தமிழ்ச் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருவதாகும் (புறம் 191). 
  • செனக்கா எனும் தத்துவ ஞானியின் கூற்று எல்லோருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும் நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும்  நாம் கருதுதல் வேண்டும்.
  • மார்க்கஸ் அரேலியஸ் பேரரசர் கூற்று நான் பகுத்தறிவும் கூட்டுஅறிவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்
  • ஜி யு போப் திருவள்ளுவரை உலக புலவர் எனக் கூறுகிறார்.

·    உள்ளற்க உள்ளம் சிறுகுவ உள்ளுவது 

எல்லாம் உயர்வு ள்ளல் -திருக்குறள்

தனிநாயகம் அடிகள் 

  • தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவ பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்
  • இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பாஸ்கர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு - "விரிவாகும் ஆளுமை
  • சொற்பொழிவின் மூலமாகத் தமிழின் புகழை உலகிற்கு பரப்பியவர்.
  • அகில இந்திய உலக தமிழ் ஆய்வு மன்றம் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாகக் காரணமானவர்
  • இவர் தொடங்கிய தமிழ் பண்பாடு இதழ் இப்பொழுதும் வெளியாகிறது

அக்கறை

  • பழங்களை விடவும்
    நசுங்கிப் போனது
    அடுத்த மனிதர்கள்
    மீதான அக்கறை- கல்யாண்ஜி

இலக்கணக் குறிப்பு

  • உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்
  • சரிந்து – வினையெச்சம் 
  • அனைவரும் – முற்றும்மை

கல்யாண்ஜி

  • இயற்பெயர் கல்யாணசுந்தரம்
  • வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்தவர்
  • புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு இவரின் கவிதை நூல்கள்
  • அகமும் புறமும் கட்டுரை தொகுப்பு. கடிதங்களின் தொகுப்பு சில இறகுகள் சில பறவைகள்.
  • கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது  இவரின் சிறுகதைத் தொகுப்புகள்
  • ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு 2016ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

·        இந்தக் காட்டில் 

எந்த மூங்கில் 

புல்லாங்குழல் அமுதோன் 

·        பிம்பங்களற்ற தனிமையில் 

ஒன்றிலொன்று முகம் பார்த்தன 

சலூன் கண்ணாடிகள் -நா முத்துக்குமார்

·        வெட்டுக்கிளியின் சப்தத்தில் 

மலையின் மௌனம் 

ஒரு கணம் அசைந்து திரும்புகிறது 

ஜப்பானிய கவிஞர் பாஷோ

குறுந்தொகை

  • குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்; அதன் சிறப்புக் கருதியே நல்ல குறுந்தொகை என்று அழைக்கப்படுகிறது
  • நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
    பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின தோழி அவர் சென்ற ஆறே. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

திணை: பாலை 

துறை: தலைவன் விரைந்து வருவானெனத் தோழி தலைவியை ஆற்றியது.

இப்பாடலில் இறைச்சி அமைந்துள்ளது

சொல்லும் பொருளும்

  • நசை              -விருப்பம்
  •  நல்கல்          - வழங்குதல் 
  • பிடி                 -பெண்யானை 
  • வேழம்             -ஆண் யானை
  •  யா                 -ஒருவகை மரம் (பாலைநிலத்தில் வளர்வது) 
  • பொளிக்கும்  - உரிக்கும் 
  • ஆறு               -வழி 

இலக்கண குறிப்பு

  • களைஇய                             = சொல்லிசை அளபெடை 
  • பெருங்கை, மென்சினை   =பண்புத்தொகை 
  • பொளிக்கும்                         =செய்யும் என்னும் வினைமுற்று
  • பிடிபசி                                    = இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • அன்பின                               =பலவின்பால் அஃறிணை வினைமுற்று

பொதுவான குறிப்புகள்

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் கொண்டது
  • இதன் பாடல்கள் நான்கடி சிற்றெல்லை 8 அடி பேரெல்லை கொண்டது
  • 1915 சௌரி பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
  • பாலைபாடிய பெருங்கடுங்கோ சேர மரபைச் சேர்ந்த மன்னன் 
  • கலித்தொகையில் பாலை திணை பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பெற்றார்.

தாய்மைக்கு வறட்சி இல்லை! 

சு. சமுத்திரம்

  • வளத்தம்மா- என் கதைகளின் கதைகள் - சு. சமுத்திரம்,
  • சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர்
  • முந்நூற்றுக்கும் மேற்பட்ட  சிறுகதைகள் எழுதியுள்ளார்
  • வாடாமல்லி, மலைபுறா, மண் சுமை தலைப்பாகை, காகித உறவு சிறுகதைத் தொகுப்புகள்
  • வேரில் பழுத்த பழம் - புதினம் சாகித்ய அகாடமி விருது பெற்றது
  • குற்றம் பார்க்கில் சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் விருதைப் பெற்றது

அணியிலக்கணம்

உவமைஅணி

அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும்

  • இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
  • இதில் உவமையணி அமைந்துள்ளது

உருவக அணி

  • கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமை யாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்.
  • உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையேஉருவகம்எனக் கூறப்படும். உவமை, உவமேயம் என்னும்  இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது  உருவக அணி ஆகும்.

·    இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக

வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்.

  • இன்சொல் – நிலமாகவும், வன்சொல் – களையாகவும், வாய்மை– எருவாகவும், அன்பு – நீராகவும், அறம் - கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன

பின்வருநிலை அணிகள்

  • ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலேபின்வருநிலைஅணியாகும். இது மூன்று வகைப்படும்.

சொல் பின்வருநிலையணி

  • முன் வந்தசொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறுபொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை  அணியாகும். 

·    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

  • இக்குறளில்துப்புஎன்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு பொருள்களைத் தருகிறது. துப்பார்க்கு – உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை ; துப்பு – உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்

பொருள் பின்வருநிலையணி

  • செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது  பொருள்பின் வருநிலையணி ஆகும். 

·        அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா

நெகிழ்ந்தன நேர் முகை முல்லை - மகிழ்ந்திதழ்

விண்டன கொன்றை விரிந்த கருவிளை

கொண்டன காந்தள் குலை.

  • இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.

·        கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு 

மாடல்ல மற்றை யவை.

  • செல்வம், மாடு=செல்வம் எனப் பொருள் தரும்

சொற்பொருள் பின்வருநிலையணி

  • முன்னர் வந்த சொல்லும் பொருளும்  பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும். 
  • எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

  • இக்குறட்பாவில்விளக்குஎன்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

வஞ்சப்புகழ்ச்சியணி

  • வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும்

·        தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.

  • கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது. எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும்.

·        பாரி பாரி என்றுபல ஏத்தி,

ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்;

மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே

  • இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.

நூல் மதிப்புரை

  • பாஞ்சாலி சபதம் 
  • மாதப்பத்திரிகை ஞான பாநு‘, ஆசிரியர் எஸ். சுப்பிரமணிய சிவா, சென்னை, நவம்பர் 1913.
  • கம்பராமாயணம்
  •  'நிகழ்' - நூல் திறனாய்வுகள் 100; ஞானி, அறிவன்; டிசம்பர் 2001


  • வெண்பாவிற் புகழேந்திபரணிக்குஓர்
    சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
    ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவை உலா
    அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
    கண்பாய கலம்பகத் திற்கு இரட்டையர்கள்
    வசைபாடக் காள மேகம்;
    பண்பாய பகர்சந்தம் படிக்காசு
    அலாதொருவர் பகர ஒணாதே. - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

 

  • எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
    தம்முயிர்போல் எண்ணி உள்ளே
    ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
    …. புரிந்திட என்
    சிந்தை மிக விழைந்த தாலே”  வள்ளலார் 

கலைச்சொல்லாக்கம்

  • மனிதம்                      = Humane 
  • ஆளுமை                  = Personality 
  • பண்பாட்டுக் கழகம் = Cultural Academy
  • கட்டிலாக் கவிதை   = Free verse 
  • உவமை யணி          = Simile 
  • உருவக அணி          = Metaphor

அறிவை விரிவு செய்

  • சிற்பியின்  மகள்- பூவண்ணன்
  • அப்பா சிறுவனாக இருந்தபோது - அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் முகமது செரீபு)

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.