பெரியாரின் சிந்தனைகள்
தந்தை
பெரியார்
- வெண்தாடி
வேந்தர், பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம், சுயமரியாதை பூபாளம் இசைத்தவர், சுயமரியாதைச் சுடர், பெண்ணின போர் முரசு, புத்துலக
தொலைநோக்காளர், தெற்காசியாவின்
சாக்ரடீசு
பெரியார் எதிர்த்தவை…
- இந்தித்
திணிப்பு
- குலக்கல்வித்
திட்டம்
- தேவதாசி
முறை
- கள்ளுண்ணல்
- குழந்தைத்
திருமணம்
- மணக்கொடை
எழுத்துச் சீர்திருத்தம்
- மொழி
என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு
ஒரு போர்க்கருவியாகும்;
- அக்கருவிகள்
காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது
கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்”
பெரியார் விதைத்த விதைகள்
- கல்வியிலும்
வேலையிலும் இட ஒதுக்கீடு
- பெண்களுக்கான
இட ஒதுக்கீடு
- பெண்களுக்கான
சொத்துரிமை
- குடும்ப
நலத்திட்டம்
- கலப்பு
திருமணம்
- சீர்திருத்த
திருமணம் எதிர்ப்பு
- இவருக்கு 13.11.1938 சென்னை பெண்கள் மாநாட்டில் ஈவேரா பெரியார்
பட்டம் வழங்கப்பட்டது
- பெரியார் 27.
06. 1970 ஐக்கிய
நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் யுனெஸ்கோ தந்தை பெரியாரை "தெற்காசியாவின் சாக்ரடீஸ்" எனப்
பட்டம் வழங்கிச் சிறப்பித்தது
பெரியாரின் இயக்கமும் இதழ்களுக்கும்
- தோற்றுவித்த
இயக்கம் சுயமரியாதை
இயக்கம்
- தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு 1925
- நடத்திய இதழ்கள் குடியரசு, விடுதலை,
உண்மை, ரிவோல்ட்(ஆங்கில இதழ்)
· தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் பார் அவர்தாம் பெரியார் -புரட்சிக்கவி பாரதிதாசன்
ஒளியின் அழைப்பு
- பிறவி
இருளை துளைத்து
சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி
…. உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி - ந. பிச்சமூர்த்தி
இலக்கணக் குறிப்பு
- பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர்- உருவகங்கள்.
பொதுவான
குறிப்புகள்
- இயற்கையையும்
வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவு தெளிவுடன் நல்வாழ்க்கைகான மெய்யியல்
உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் -புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும் - நூலில்-வல்லிக்கண்ணன்.
- மரபுக்கவிதையின்
யாப்பு பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதை எனப்பட்டன
புதுக்கவிதை
- இலகு
கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு
பெயர்கள் உண்டு.
ந. பிச்சமூர்த்தி
- புதுக்கவிதையின்
தந்தை
- பணி: தொடக்கத்தில் வழக்கறிஞர்
பின்னர் இந்து சமய அறநிலை பாதுகாப்பு துறை அலுவலர்.
- அனுமன்
நவ இந்தியா இதழின் துணையாசிரியர். இவர்
முதல் சிறுகதை ஸயன்ஸூக்கு
பலி
- 1932-ல் கலைமகள்
இதழ் வழங்கிய பரிசு பெற்றார். பிக்ஷு, ரேவதி ஆகிய
புனைபெயர்கள் கொண்டவர்.
தாவோ தே ஜிங்
லா
வோட்சு
- உண்டு
இல்லை என்ற சிந்தனைக்கிடையே உண்டு என்பதை பயனுள்ளதாகக் கருதுவதை சீனக் கவிஞர்
லாவோட்சு மறுக்கிறார்
- ஆரக்கால்
முப்பதும்
சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன
……இருத்தலின் பலன் கிடைக்கிறது
இன்னொரு பக்கம் இருத்தலின்மையை பயன்படுத்திக் கொள்கிறோம்
இலக்கண
குறிப்பு
- பண்டம்
பண்டமாக =
அடுக்குத்தொடர்
- வாயிலும் சன்னலும் = எண்ணும்மை
பொதுவான
குறிப்புகள்
- லாவோட்சு சீனாவில்
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
- சீன
மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது
சமகாலத்தவர்
- லாவோட்சு "தாவோவியம்" என்ற
சிந்தனை பிரிவைச் சார்ந்தவர்.
- ஒழுக்கத்தை
மையமாக வைத்துக் கான்பூசியஸ்
சிந்தித்தார்
- லாவோட்சுவோ
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்தார்
- இப்பாடலை
மொழிபெயர்த்தவர் சி மணி
யசோதர காவியம்
- ஆக்குவது
யாதெனில் அறத்தை யாக்கை
போக்குவது யாதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஞானம் யாதெனில் நோக்குக
காக்குவது யாதெனில் விரதம் காக்கவே.
சொல்லும் பொருளும்
- அறம் =நற்செயல்
- வெகுளி =சினம்
- ஞானம் =அறிவு
- விரதம் =மேற்கொண்ட
நன்னெறி
இலக்கணக் குறிப்பு
- ஆக்குக, போக்குக,
நோக்குக, - வியங்கோள் வினைமுற்றுகள்
யசோதர காவியம்
- ஐஞ்சிறு
காப்பியங்களுள் ஒன்று, ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- வட மொழியிலிருந்து தமிழில்
தழுவி எழுதப்பட்டது
- சமண முனிவர் ஒருவரால்
இயற்றப்பட்டது என்பர்
- யசோதர
காவியம் யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது
- ஐந்து சருக்கங்கள்
கொண்டது
- பாடல்கள்
எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கூறுவார்.
கடித
வடிவில் இலக்கியங்கள் படைத்தவர்கள்
தாகூர், நேரு, டி.கே.சி, வல்லிக்கண்ணன். பேரறிஞர் அண்ணா, மு வரதராசனார், அழகிரிசாமி கு, கி ராஜநாராயணன்
· வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்திற்கொரு முறை விசேஷமாக நடக்கும்.
….. மறந்தே போனார் மனசுக்குள் கூறுக
தூரெடுக்க - நா முத்துக்குமார்.
யாப்பிலக்கணம்
- யாப்பின்
உறுப்புகள் கவிதை இயற்றும் முறையைக் கூறும் இலக்கணம் யாப்பு இலக்கணம்
- உறுப்பியலில்
யாப்பின் 6 உறுப்புகளாக எழுத்து அசை
சீர் அடி தொடை தளை ஆகியவை
விளக்கப்படுகின்றன.
எழுத்து
- யாப்பிலக்கணத்தின்
அடிப்படையில் எழுத்துக்கள் குறில், நெடில், ஒற்று என வகைப்படும்.
அசை
- எழுத்துக்களால்
ஆனது அசை
- ஓரெழுத்து
இரண்டு எழுத்து நிற்பது அசை ஆகும்
- இது
நேரசை, நிரையசை- என வகைப்படும்
- இப்பிரிவில்
ஒற்று கணக்கிடப்படுவதில்லை
நேரசை
- தனிக்குறில்-
ப; தனிக்குறில், ஒற்று- பல்;
- தனிநெடில்
-பா; தனிநெடில், ஒற்று -பால்
நிரையசை
- இருகுறில்
-அணி இருகுறில், ஒற்று
-அணில்
- குறில், நெடில் -விழா குறில், நெடில்,
ஒற்று -விழார்
சீர்
- ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட அசைகளின் சேர்க்கை சீர்
- ஓசை
அடிப்படையில் ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர்,
நாலசைச்சீர் என வகைப்படும்
- நேர் +
உகரம் சேர்ந்து முடிவது =நேர்பு
- நிரை +
உகரம் சேர்ந்து முடிவது =நிரைபு
- இவை
வெண்பாவின் இறுதியாய் மட்டுமே அசையாகக் கொள்ளப்படும்.
- ஈரசைச்சீர்களுக்கு
'இயற்சீர்',
ஆசிரிய உரிச்சீர்' என்ற பெயர் உண்டு
ஓரசைச் சீர்
அசை - வாய்பாடு
- நேர் -
நாள்
- நிரை - மலர்
- நேர்பு - காசு
- நிரைபு- பிறப்பு
ஈரசைச் சீர்
மாச்சீர் அசை -
வாய்பாடு
·
நேர் +நேர் =தேமா
·
நிரை + நேர் = புளிமா
விளச்சீர்
·
நிரை +நிரை
=கருவிளம்
· நேர் + நிரை =கூவிளம்
- காய்ச்சீர்களை "வெண்சீர்கள் " என
அழைப்பர்.
- மூவசைச்
சீர்களை அடுத்து நேரசையோ நிரையசையோ வருகிறபொழுது
நாலசைச்சீர் தோன்றும்
- வெண்பாவில் இயற்சீரும்
வெண்சீரும் மட்டுமே வரும்.
- தளைகளில் இயற்சீர்
வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் மட்டுமே வரும்
- ஈற்றடி ஈற்றுச்
சீர் ஓரசைச் சீர்களில் முடியும்
தளை
- பாடலில்
நின்ற சீரின் ஈற்றசையும்
அதனை அடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் தளை எனப்படும்
- இது
ஒன்றியும் ஒன்றாமலும் வரும்
- தளை
ஏழு வகைப்படும்
- நேரொன்றாசிரியத்தளை =மா
முன் நேர்
- நிரையொன்றாசிரியத்தளை =விளம் முன் நிரை
- இயற்சீர் வெண்டளை
=மா
முன் நிரை, விளம் முன் நேர்
- வெண்சீர் வெண்டளை
=காய் முன்
நேர்
- கலித்தளை =காய் முன்
நிரை
- ஒன்றிய வஞ்சித்தளை =கனி
முன் நிரை
- ஒன்றா வஞ்சித்தளை =கனி
முன் நேர்
அடி
- இரண்டும்
இரண்டிற்கு மேற்பட்ட சீர்களிலும் தொடர்ந்து வருவது அடி
- இது
ஐந்து வகைப்படும்
- இரண்டு சீர்கள் கொண்டது குறளடி
- மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி
- நான்கு சீர்கள் கொண்டது அளவடி
- ஐந்து சீர்கள் கொண்டது நெடிலடி
- ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது கழிநெடிலடி
தொடை
- தொடுதல்
- தொடை
- பாடலின்
அடிகளிலும் சீர்களிலும் எழுத்துக்கள் ஒன்றி வரத் தொடுப்பது தொடை
- தொடை
என்னும் செய்யுள் உறுப்பு பாடலின் உள்ள அடிதோறும் அல்லது சீர்தோறும் ஒரு
குறிப்பிட்ட வகை ஓசை பொருந்தி
வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது
- மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண், இரட்டை, அந்தாதி, செந்தொடையென எட்டு வகை.
- மோனைத்தொடை ஒரு பாடலில் அடிகளிலும்
சீர்களிலும் முதலெழுத்து ஒன்றி வருவது
· ஒற்றொற்றித் தந்த பொருளையும்
மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
- எதுகைத் தொடை அடிகளிலும்
சீர்களிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
· திறனல்ல தற்பிறர் செய்யினும்
நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று
- இயைபுத்தொடை அடிதோறும் இருந்து
எழுத்தோ அசையோ சீரோ அடியோ ஒன்றி அமைவது
· வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு
கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
மற்ற குறிப்புகள்
- இருத்தலெனும்
சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து
வந்தது,
மெய்ம்மையெனும் இந்த ரத்தினம், ஊடுருவிப் பார்த்ததில்லை எவரும்;
அவரவர் இயல்பின்படி சொல்லிச் சென்றார்கள் ஒவ்வொருவரும்,
எதனுடைய குணத்தையும் விளக்க முடியாது எவராலும். - நமது மகிழ்ச்சியின்
தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே,
நீதியின் இருப்பிடமும் அநீதியின் அஸ்திவாரமும் நாமே;
தாழ்ச்சியும் உயர்ச்சியும் நாமே, நிறைவும் குறைவும் நாமே,
ரசம்போன கண்ணாடி, சகலமும் தெரியும் ஜாம்ஷீத்தின் மாயக்கிண்ணம்,
இரண்டும்
நாமே. - உமர் கய்யாம்
- ஜாம்ஷீத் மாயக்கிண்ணம் – ஜாம்ஷீத் பாரசீகத்தின் புகழ்பெற்ற அரசர். இவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜாம்ஷீத் மாயக்கிண்ணம் முக்காலத்தையும் காட்டக் கூடியதாக நம்பப்பட்டது.
- கொண்டல்
கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள்
வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும்
விண்ட பூமது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன்னெயில் வழி
தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே
- திங்கள்முடி
சூடுமலை தென்றல்விளை
யாடுமலை
தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன்
வாழுமலை
அங்கயற்கண் அம்மைதிரு
அருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை பொதியமலை
என்மலையே குமரகுருபரர்
கலைச்சொல் அறிவோம்
- எழுத்துச்
சீர்திருத்தம்- Reforming the letters
- எழுத்துரு -
Font
- மெய்யியல்
(தத்துவம்) - Philosophy
- அசை -
Syllable
- இயைபுத்
தொடை -
Rhyme
அறிவை விரிவு செய்
- பெரியாரின்
சிந்தனைகள் -
வே. ஆனைமுத்து
- அஞ்சல்
தலைகளின் கதை – எஸ்.பி. சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு. சாம்ப சிவன்)
- தங்கைக்கு
– மு. வரதராசன்,
- தம்பிக்கு
– அறிஞர் அண்ணா.