இயல் 3
8ம் வகுப்பு
உடலை ஓம்புமின்
நோயும் மருந்தும்
- தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்...
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே (பா.116) -நீலகேசி
சொல்லும் பொருளும்
·
தீர்வன -
நீங்குபவை
·
திறத்தன -
தன்மையுடையன
·
உவசமம் -
அடங்கி இருத்தல்
·
கூற்றவா -
பிரிவுகளாக
·
நிழல்இகழும் - ஒளி பொருந்திய
·
பேர்தற்கு -
அகற்றுவதற்கு
·
பிணி - துன்பம்
·
ஓர்தல் -
நல்லறிவு
·
தெளிவு -
நற்காட்சி
·
பிறவார் -
பிறக்கமாட்டார்
·
பூணாய் -
அணிகலன்களை அணிந்தவளே
· திரியோகமருந்து - மூன்று யோக மருந்து
பொதுவான குறிப்புகள்
- பிறவித் துன்பங்கள் தீர்க்கும் மருந்துகள் என நீலகேசி கூறும் மூன்று- நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்.
- நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள்
ஒன்று.
- இந்நூல்
சமண சமயக்
கருத்துகளை விளக்குகிறது.
- கடவுள்
வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக்
கொண்டது (தருமவுரைச் சருக்கம் அதில் ஒன்று).
- இது
ஒரு தருக்க நூலாகும். ஆசிரியர்
பெயர் அறியப்படவில்லை.
வருமுன் காப்போம்
கவிமணி தேசிக விநாயகனார்,
- பிறப்பு:
குமரி மாவட்டம்
தேரூர்
- 36 ஆண்டுகள் ஆசிரியர் பணி
- ஆசிய
ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும் ஆகியவை
நூல்கள்.
- உமர்கயாம் பாடல் என்பது நூல் மொழிபெயர்ப்பு நூல்.
தமிழர் மருத்துவம்
- சாங்கியம்,
ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்
உள்ள ஒற்றுமையைக் கூறுவனவாகும்.
- வேர்பாரு;
தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்.
தலைக்குள் ஓர் உலகம்
- மூளை,
முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது.
- உள்மூளை,
நடுமூளை, பின்மூளை.
- முன்மூளையில்
மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ளன.
- உடம்பில்
உள்ள சிறுமூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும்
கட்டுப்படுத்துகிறது.
- மூளைக்கு
ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி. குருதி தேவைப்படுகிறது
- மூளை இடப்பக்கம் = பேச,
எழுத, கணக்கிட, தர்க்க
ரீதியில் சிந்திங்க.
- வலப்பக்கம்= கவிதை
எழுத, படம் வரைய, நடனம் ஆட.
நடிப்பது (கலை தொடர்பானது).
- மூளையின்
வலது பகுதி செயல்பாடு அதிகம் உள்ளவர்கள்
நடிகர்கள், பாடகர்கள், நடனக்
கலைஞர்கள், இசைக்கருவிகள் கையாளுபவர்கள் ஆக இருப்பர்.
- இடது
பகுதி செயல்பாடு அதிகம் உள்ளவர் பட்டயக் கணக்கர்கள்,
கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப்
பணிக்குப் படித்தவர்கள் போன்றோர்.
சுஜாதா
- இயற்பெயர்
ரங்கராஜன்
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உருவாக்கும்
பணியில் முக்கிய பங்கு வகித்தார்
- படைப்புகள்:
என் இனிய எந்திரா, மீண்டும்
ஜீனோ, ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில்
கதைகள், தலைமைச் செயலகம் ஆகியவை.
எச்சம்
- பொருள்
முற்றுப்பெறாமல் எஞ்சி
நிற்கும் சொல் எச்சம்.
- வகைகள்
=பெயரெச்சம், வினையெச்சம்
பெயரெச்சம்
- படித்த
என்ற சொல் மாணவன், மாணவி, பள்ளி,
ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றை கொண்டு (பெயரைக் கொண்டு) முடியும் எச்சம்
பெயரெச்சம்
- பெயரெச்சம்
மூன்று காலத்திலும் வரும்
எகா: பாடிய
பாடல் = இறந்தகால பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் =நிகழ்காலப்
பெயரெச்சம்
பாடும் பாடல் =எதிர்காலப் பெயரெச்சம்
தெரிநிலை, குறிப்புப் பெயரெச்சங்கள்
v எழுதிய கடிதம்
- இதில்
எழுதிய என்பது செயல் மற்றும் இறந்தகாலத்தை காட்டுகிறது ஒரு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம் தெரிநிலை
பெயரெச்சம்
v சிறிய கடிதம்
- இதில்
சிறிய என்பது செயலையும் காலத்தையும் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டுகிறது
ஒரு செயலையோ காலத்தையோ தெளிவாகக்
காட்டாமல் பண்பினை மட்டும்
குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்.
வினையெச்சம்
- படித்து
என்னும் சொல் முடித்தாள், மகிழ்ந்தார்
- என வினைச்சொல்களுள் ஒன்றை
கொண்டு முடியும்
- வினையைக்
கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம்
தெரிநிலை , குறிப்பு வினையெச்சங்கள்
v எழுதி வந்தான்
·
இதில் எழுதி என்னும் சொல்
செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது ஒரு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்
v மெல்ல நடந்தான்
- இதில்
மெல்ல என்னும் சொல் காலத்தைக் காட்டாமல் பண்பினை மட்டுமே உணர்த்துகிறது ஒரு
சொல் காலத்தை வெளிப்படையாகக்
காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்துவது
குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
முற்றெச்சம்
v வள்ளி படித்தனள்
- படித்தனள்
என்னும் சொல் படித்தாள் வினைமுற்று பொருளைத் தருகிறது
v வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்
- படித்தனள்
என்ற சொல் படித்து என்னும் வினையெச்ச பொருளைத் தருகிறது
- ஒரு
வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு
முடிவது முற்றெச்சம்.
உவமைத்தொடர்
- பேச்சிலும்
எழுத்திலும் கருத்துக்களை எளிதாகப் புரியவைக்க பயன்படும் தொடர்கள்
உவமைத்தொடர்
- ஒவ்வொரு
உவமை தொடருக்கும் தனிப் பொருள் உண்டு
- மடைதிறந்த
வெள்ளம் போல் (தடையின்றி மிகுதியாக)
- உள்ளங்கை
நெல்லிக்கனி போல (வெளிப்படைத்தன்மை)
கலைச்சொல் அறிவோம்.
- நோய்
- Disease
- மூலிகை
-
Herbs
- ஒவ்வாமை
- Allergy.
- மரபணு
-
Gene
- சிறுதானியங்கள்
- Millets
- பட்டயக்
கணக்கர் - Auditor
- பக்கவிளைவு
-
Side Effect
- நுண்ணுயிர்
முறி - Antibiotic