இயல் 4
8ம் வகுப்பு
கல்வி கரையில
கல்வி அழகே அழகு
v கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்
மற்றோருக்கு அணிகலன் வேண்டாவாம்
- முற்ற
முழு மணி பூணுக்கு பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார் -குமரகுருபரர்
சொல்லும் பொருளும்
- கலன்
-அணிகலன்
- முற்ற
-ஒளிர
பொதுவான குறிப்புகள்
- குமரகுருபரர்
17 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்தவர்
- இவரின்
நூல்கள் கந்தர் கலிவெண்பா, கயிலைக்
கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சி
அம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- இவற்றுள்
நீதிநெறி விளக்கம் கடவுள் வாழ்த்து உட்பட 102 செய்யுள்கள் கொண்டது
பிற குறிப்புகள்
v கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல -
தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே
நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து - நாலடியார்
புத்தியைத் தீட்டு
v கத்தியைத் தீட்டாதே - உந்தன்
புத்தியைத் தீட்டு - ஆலங்குடி சோமு.
- சிவகங்கை
மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தவர்
- தமிழ்நாடு
அரசின் கலைமாமணி விருதுப்
பெற்றவர்
பல்துறைக் கல்வி.
- இளமையில்
கல் என்பது முதுமொழி
- கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மயத் தேடவும் அறநெறிப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும். - விஜயலட்சுமி பண்டிட். ஐ. நா. அவையின் முதல் பெண் தலைவர்
முக்கிய குறிப்புகள்
- இயற்கை
ஓவியம் -பத்துப்பாட்டு
- இயற்கை
இன்பக்கலம் -கலித்தொகை
- இயற்கை
வாழ்வு இல்லம் -திருக்குறள்
- இயற்கை
இன்ப வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
- இயற்கை
தவம் -சிந்தாமணி
- இயற்கை
பரிணாமம் -கம்பராமாயணம்
- இயற்கை
அன்பு -பெரியபுராணம்
- இயற்கை
இறையுறையுள் -தேவார திருவாசக திருவாய்மொழிகள்
பாடல்
v ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்
இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
வீடன்று கல்வி; தேர்வு தந்த
விளைவன்று கல்வி; அது வளர்ச்சியின் வாயில் -குலோத்துங்கன்
பொதுவான குறிப்புகள்
- திரு வி க எனும் திருவாரூர்
விருத்தாசலம் கல்யாணசுந்தரனார்
- சிறந்த
மேடைப் பேச்சாளர்.
- தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர்.
- இவரின்
நூல்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,
பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து
ஆன்ற குடிப் பிறத்தல்
- பி.ச. குப்புசாமி சிறுகதை
ஆசிரியர்களுள் ஒருவர்.
- தொடக்கப்பள்ளி
ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; ஜெயகாந்தனுடன் நட்புக் கொண்டவர்.
- ஜெயகாந்தனோடு பல்லாண்டு, ஆரம்பப்
பள்ளி ஆசிரியரின் கதை நூல்களை எழுதியுள்ளார்
வேற்றுமை
- பெயர்ச்சொல்லின்பொருள்
வேறுபடுத்தும் முறை வேற்றுமை என்பர்.
- இதற்காகப்
பெயர்ச் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.
- சில
இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச் சொற்களே வேற்றுமை உருபாக வருவதும்
உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
- ஓவியர்
தூரிகையால் ஓவியம் தீட்டினார். இதில் ஆல் என்பது வேற்றுமை உருபு.
- ஓவியர்
தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். கொண்டு என்பது சொல்லுருபு
- வேற்றுமை
உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்கள் வேற்றுமைத் தொடர் என்பர்.
- வேற்றுமை
உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அ ஃ து இடம் பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத் தொகை என்பர்.
முதல் வேற்றுமை
- சொற்றொடர்கள்
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகளைப் பெற்றிருக்கும்
- எழுவாய்
உடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான
பொருளைத் தருவது முதல் வேற்றுமை.
இது எழுவாய் வேற்றுமை எனவும் அழைப்பர்
- பாவை
வந்தாள்
இரண்டாம் வேற்றுமை
- இரண்டாம்
வேற்றுமை உருபு ஐ ஆகும்
- கபிலர்
பரணரைப் புகழ்ந்தார். கபிலரைப் பரணர்
புகழ்ந்தார்
- இதில்
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ எந்தப் பெயருடன் இணைகிறதோ அப்பெயர் செயப்படுபொருளாக மாறுகிறது
- ஒரு
பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் அழைப்பர்
- இது
ஆக்கல், அழித்தல், அடைதல்,
நீத்தல், ஒத்தல், உடைமை- என
ஆறுவகை பொருள்களில் வரும்.
- ஆக்கல்
-கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
- அழித்தல்-
பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
- அடைதல்
-கோவலன் மதுரையை அடைந்தான்
- நீத்தல்-
காமராஜர் பதவியைத் துறந்தார்
- உடைமை
-வள்ளுவர் பெரும் புகழை உடையவர்
மூன்றாம் வேற்றுமை
- ஆல், ஆன்,
ஒடு, ஓடு.ஆகிய நான்கும் இதன் உருபுகள் ஆகும்
- இவற்றுள்
ஆல், ஆன் ஆகியவை கருவி பொருள், கருத்தா பொருள் என இரண்டு வகை பொருளில் வரும்
- கருவி பொருள்= முதற்கருவி, துணைக்கருவி
- கருவியைச்
செய்யப்படும் பொருளாக மாறுவது
முதற்கருவி
= மரத்தால் சிலை செய்யப்பட்டது
- ஒன்றை
செய்வதற்கு துணையாக இருப்பது துணைக்கருவி
= உளியால் சிலை செய்தனர்.
- கருத்தா பொருள்= ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா
- ஏவுதல் கருத்தா= கரிகாலனால்
கல்லணை கட்டப்பட்டது
- இயற்றுதல் கருத்தா =சேக்கிழாரால்
பெரியபுராணம் எழுதப்பட்டது.
- ஆன் என்னும் உருபுச் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
- புறந்தூய்மை நீரான் அமையும்
- ஒடு ஓடு ஆகிய உறுப்புகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும், தாயொடு குழந்தை சென்றது, அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
நான்காம் வேற்றுமை
- வேற்றுமை
உருபு கு ஆகும்
- கொடை,
பகை, நட்பு, தகுதி,
அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை
- என பல பொருள்களில் வரும்
- கொடை
-
முல்லைக்கு தேர் கொடுத்தான்
- பகை -
புகை மனிதனுக்குப் பகை
- நட்பு -கபிலருக்கு நண்பர் பரணர்
- தகுதி -கவிதைக்கு
அழகு கற்பனை
- அதுவாதல் - தயிருக்கு
பால் வாங்கினான்
- பொருட்டு -தமிழ்
வளர்ச்சிக்குப் பாடுபட்டார்
- முறை -செங்குட்டுவனுக்கு
தம்பி இளங்கோ
- எல்லை - தமிழ்நாட்டுக்கு
கிழக்கு வங்க கடல்.
ஐந்தாம் வேற்றுமை
- இன், இல் வேற்றுமை
உருபுகள்
- நீங்கல்,
ஒப்பு, எல்லை, ஏது
என்ற பொருள்களில் வரும்
- நீங்கல்-தலையின் இழிந்த மயிர்
- ஒப்பு
-பாம்பின் நிறமொரு குட்டி
- எல்லை
- தமிழ்நாட்டின் கிழக்கு வங்க கடல்
- ஏது-
சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்
ஆறாம் வேற்றுமை
- அது, ஆது அ வேற்றுமை உருபுகள்
- இது
உரிமை பொருளில் வரும். உரிமை பொருளைக் கிழமை பொருள் என்றும் கூறுவர்
- ராமனது
வில், நண்பனது கை
- ஆது,
அ ஆகிய உறுப்புகள்
இக்காலத்தில் பயன்படுத்துவதில்லை
ஏழாம் வேற்றுமை
- கண்,
மேல், கீழ், கால்,
இல், இடம்- போன்றவை உருபுகள்,
- இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும்
சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்
- எ.கா:
எங்கள் ஊரின் கண் மழை பெய்தது.
- இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும் இடப் பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை கொள்ள வேண்டும்.
எட்டாம் வேற்றுமை
- இது
விளி பொருளில்
வரும்
- படர்கை
பெயரை முதல்நிலை பெயராக மாற்றி அழைப்பதே விளி வேற்றுமை என்கிறோம்
- தனி வேற்றுமை உருபு இல்லை பெயர்கள் திரிந்து வருவதும் உண்டு அண்ணன் என்பதை அண்ணா என்றும் புலவர் என்பதை புலவரே என்றும் மாற்றிக் கூறுவது எட்டாம் வேற்றுமை
நிறுத்தக்குறிகள்
காற்புள்ளி ( , )
- பொருள்களை
எண்ணும் இடங்களில் வரும். (எ. கா)
குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
- கடிதத்தில் விளி முன். (எ.கா.) அன்புள்ள நண்பா, வினையெச்சங்களுக்குப் பின், (எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை
இலை பறித்து வந்தான்.
- மேற்கோள் குறிகளுக்கு (“) முன்.
(எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து,” நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
- முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில். (எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்
அரைப்புள்ளி ( ; )
- ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில். (எ.கா.) கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.
- உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் (எ.கா.) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.
முக்காற்புள்ளி ( : )
- சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி
வரும். (எ.கா.) முத்தமிழ் : இயல்,
இசை, நாடகம்.
முற்றுப்புள்ளி ( . )
- சொற்றொடரின்
இறுதியில் வரும். (எ.கா.)
கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
- சொற்குறுக்கங்களை
அடுத்து முற்றுப்புள்ளி வரும். (எ.கா.) திரு. வி. க. மா. க. அ. ஊ. ஒ. ந. நி. பள்ளி
- பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும். (எ.கா.) நெ. து.
சுந்தரவடிவேலு
வினாக்குறி ( ? )
- வினாப்பொருளை
உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில். (எ.கா.)
சேக்கிழார் எழுதிய நூல் எது?
வியப்புக்குறி ( ! )
- மகிழ்ச்சி,
வியப்பு, அச்சம், அவலம்,
இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில். (
எ.கா.) தமிழின் இனிமைதான் என்னே! - வியப்பு
பாம்பு! பாம்பு! - அச்சம்
அந்தோ! இயற்கை அழிகிறதே! - அவலம்
ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
- தனிச்
சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும்,
இரட்டைமேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும்
ஒற்றை மேற்கோள் பயன்படும். (எ.கா.) ‘நல்ல’ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் ‘இப்போது தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்
கலைச்சொல் அறிவோம்.
- நிறுத்தக்குறி - Punctuation
- மொழிபெயர்ப்பு - Translation
- அணிகலன் - Ornament
- விழிப்புணர்வு - Awareness
- திறமை - Talent
- சீர்திருத்தம் - Reform