Type Here to Get Search Results !

இயல் 2 8ம் வகுப்பு ஈடில்லா இயற்கை IYAL-2-8TH-TAMIL-ETILLAIYARKAI

 
இயல் 2
8ம் வகுப்பு 
ஈடில்லா இயற்கை
table of contents(toc)

1.    ஓடை

  • ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்
    உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் - வாணிதாசன்

சொல்லும் பொருளும்

  • நன்செய் நிறைந்த நீர் வளத்தொடு பயிர்கள் விளையும் நிலம்
  • புன்செய்குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
  • வள்ளைப்பாட்டு -நெல் குத்தும்போது பாடும் பாடல்
  • செஞ்சொல்திருந்திய சொல்

பொதுவான குறிப்புகள்

  • தமிழகத்தின் வோர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர் வாணிதாசன் 
  • அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் 
  • இவர் பாரதிதாசனின் மாணவர் 
  • கவிஞரேறு பாவலர்மணி சிறப்புப் பெயர்கள்
  • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்
  • இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது
  • தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் இவரது படைப்புகள்

2.   கோணக்காத்துப் பாட்டு

  • விக்கினம் எல்லாம் தீர்த்துக் காத்திடீரையா - வெங்கம்பூர் சாமிநாதன்
  • காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
  • பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் மக்கள் பட்ட துயரங்களைக் கூறும் கும்மி பாடல்கள் பேச்சுத்தமிழில் அமைந்ததால்  இவற்றைப் பஞ்ச கும்மி என்றழைப்பர்
  • புலவர் செ. இராசு தொகுத்த பஞ்ச கும்மி பாடல்கள் இருந்து வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய காத்து நொண்டிச் சிந்து.

 3.   நிலம் பொது

  • அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச்சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர். 
  • அவர்களின் தலைவராக விளங்கியவர் சியாட்டல்
  • பக்தவச்சல பாரதி எழுதிய நூல் தமிழகப் பழங்குடிகள்

4.   வெட்டுக்கிளியும் சருகுமானும்

  • பரம்பிக்குளம் ஆனைமலை பகுதியில் காடர்கள் வசிக்கும் ஊர் உள்ளன. இவர்கள் பேசும் மொழி ஆல்அலப்பு
  • மனிஷ், சாண்டி, மாதுரி மற்றும் ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதையைத் தொகுத்துள்ளனர் 
  • அவற்றை யானையோடு பேசுதல் என்ற நூலில் .கீதா தமிழாக்கம் செய்துள்ளார்.

5.   வினைமுற்று

  • ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

வினைமுற்று

  • மலர்விழி எழுதினாள். கண்ணன் பாடுகிறான். மாடு மேயும்.
  • இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. 
  • பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். 
  • இது ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
  • வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

தெரிநிலை வினைமுற்று

  • ஒரு செயல் நடைபெற செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மை ஆகும். 
  • இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

எ.கா. மாணவி கட்டுரை எழுதினாள்.


செய்பவர்     - மாணவி 

காலம்        - இறந்தகாலம்

கருவி         - தாளும் எழுதுகோலும் 

செய்பொருள்     - கட்டுரை

நிலம்         - பள்ளி 

செயல்     - எழுதுதல்


குறிப்பு வினைமுற்று 

  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது. செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

பொருள்     - பொன்னன் 

சினை         - கண்ணன்

இடம்         - தென்னாட்டார் 

பண்பு (குணம்) - கரியன்

காலம்     - ஆதிரையான் 

தொழில்     - எழுத்தன்

v  தெரிநிலை & குறிப்பு வினைமுற்றுகள், அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு

ஏவல் வினைமுற்று 

  • பாடம் படி, கடைக்குப் போகும்
  • இவ்வாறு தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் ஏவல் வினைமுற்று ஆகும்
  • எழுது = ஒருமை, எழுதுமின்= பன்மை 
  • பன்மை ஏவல் வினைமுற்று = எழுதுங்கள் என வருவது தற்போதைய  வழக்கம்.

வியங்கோள் வினைமுற்று

  • வாழ்த்தல் வைதல் விதித்தல் வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
  • இவை இருதிணையும் ஐந்து பால்களையும் மூன்று இடங்களையும் காட்டும்
  •  , இய, இயர், அல் விகுதி  பெற்று வரும்
  • வாழ்க, ஒழிக, வாழியர்.

ஏவல் வினைமுற்று

வியங்கோள் வினைமுற்று 

முன்னிலையில் வரும்

இருதிணை ஐம்பால்  மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்

ஒருமை பன்மை வேறுபாடு உண்டு

ஒருமை பன்மை வேறுபாடு இல்லை 

கட்டளை பொருளை மட்டும் உணர்த்தும் 

வாழ்த்தல் வைதல் விதித்தல் வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் 

விகுதி  பெற்றும் பெறாமலும் வரும்

விகுதி பெற்றே வரும்












  • விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று. தன்மை இடத்தில் வராது
  • இயர், அல்  இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ளன.

முக்கிய தினங்கள்

  • உலக இயற்கை வள பாதுகாப்பு நாள் ஜூலை 28,
  • உலக ஈர நில நாள் பிப்ரவரி 2
  • உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16 
  • உலக இயற்கை நாள்  அக்டோபர்
  • உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6
  • உலக இயற்கை சீரழிவு தடுப்பு தினம் அக்டோபர் 5

தொடர் வகைகள் 

  • பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும் 

செய்தி தொடர் 

  • ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர்.

எ.கா. கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத்தொடர்

  • ஒருவரிடம் ஒன்றே  வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர்

எ.கா. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவு தொடர் 

  • ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவு தொடர்.

இளமையில் கல் (ஏவல்)

உன் திருக்குறள் நூலைத் தருக (வேண்டுதல்)

உழவுத் தொழில் வாழ்க (வாழ்த்துதல்) 

கல்லாமை ஒழிக (வைதல்)

உணர்ச்சித் தொடர் 

  • உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர்

ஆ! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை) 

ஆ!புலி வருகிறது! (அச்சம்) 

பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்) 

ஆ! மலையின் உயரம் தான் என்னே! (வியப்பு)

கலைச் சொற்கள் 


  • பழங்குடியினர்        - Tribes 
  • மலைமுகடு               - Ridge
  • சமவெளி                   - Plain 
  • வெட்டுக்கிளி             - Locust
  • பள்ளத்தாக்கு           - Valley 
  • சிறுத்தை                  - Leopard
  • புதர்                            - Thicket 
  • மொட்டு                      - Bud

6.   திருக்குறள்

v  சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் 

கோடாமை சான்றோர்க்கு அணி- உவமை அணி

v  வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 

புலித்தோல் போர்த்துமேய்ந் தற்று - இல்பொருள் உவமையணி

v  வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 

வைத்தூறு போலக் கெடும்  - உவமையணி

v  கடலோடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து - பிறிது மொழிதல் அணி

  • அறத்துப்பால்        =பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
  • பொருட்பால்        = அரசியல் அங்கவியல் ஒழிபியல்
  • இன்பத்துப்பால்    = களவியல் கற்பியல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.