Type Here to Get Search Results !

இயல் 1- 8ம் வகுப்பு தமிழ் இன்பம்-IYAL-1-8TH-THMIZH-TAMIZH-INPAM

இயல் 1- 8ம் வகுப்பு 
தமிழ் இன்பம்

table of contents(toc)

1. தமிழ்மொழி வாழ்த்து

  • வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
    வாழிய வாழியவே   - பாரதியார்

சொல்லும் பொருளும்

  • நிரந்தரம்     - காலம் முழுமையும் 
  • வண்மொழி     – வளமிக்க மொழி
  • வைப்பு     – நிலப்பகுதி 
  • இசை         – புகழ்
  • சூழ்கலி     – சூழ்ந்துள்ள அறியாமை இருள் 
  • தொல்லை     – பழமை, துன்பம்

சி. சுப்பிரமணிய பாரதியார். 

  • நடத்திய இதழ்கள்: இந்தியா, விஜயா 
  • படைப்புகள் சில: சந்திரிகையின் கதை, தராசு -உரைநடை நூல்கள், சீட்டுக்கவிகள் எழுதியுள்ளார். 
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ. அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்று புகழப்படுகிறார்

  • செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் 
    நந்தா விளக்கனைய நாயகியே-முந்தை
    மொழிக்கொல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே
    எழில்மகவே எந்தம் உயிரே.
  • உயிரும் நீ மெய்யும் நீ ஓங்கும் அறமாம் 
    பயிறும் நீ இன்பம் நீ அன்பு தருவும் நீ
    வீரம் நீ காதல் நீ ஈசன் அடிக்க நல்
    ஆரம் நீ யாவும் நீயே! -து. அரங்கன்

2. தமிழ்மொழி மரபு

  • நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - தொல்காப்பியர்

சொல்லும் பொருளும்

  • விசும்பு – வானம்
  • மரபு – வழக்கம்
  • மயக்கம் - கலவை
  • திரிதல் – மாறுபடுதல்
  • இருதிணை – உயர்திணை, அஃறிணை 
  • செய்யுள் – பாட்டு
  • வழாஅமை – தவறாமை 
  • தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
  • ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

பொதுவான குறிப்புகள் 

  • தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் 
  • இது தமிழில் மிகப் பழமையான இலக்கண நூலாகும்.
  • தொல்காப்பியம் =எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது 
  • ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது 
  • பொருளதிகாரம் (மரபியல்) பாடல் - நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

இளமைப் பெயர்கள் 

  • புலி - பறழ் 
  • சிங்கம் - குருளை  
  • யானை - கன்று 
  • பசு - கன்று 
  • ஆடு - குட்டி 

ஒலி மரபு

  • புலி - உறுமும்
  • சிங்கம் - முழங்கும்
  • யானை - பிளிறும்
  • பசு - கதறும்
  • ஆடு - கத்தும்

3. தமிழ் வரிவடிவ வளர்ச்சி

  • தொடக்க கால எழுத்து பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது. இது  ஓவிய எழுத்து என அழைப்பர்
  • ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை  என்பர். 

 கல்வெட்டு எழுத்துகள் 

  • ஸ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
  • புள்ளி வைத்த எழுத்துக்கள் பயன்படுத்தவில்லை.
  • எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
  • தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் கோவில்களில் உள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
  • கல்வெட்டுகள் கி.மு.3 ம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. 
  • சேப்பேடுகள் கி.பி. 7 ம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. 
  • கல்வெட்டுகள், சேப்பேடுகள் ஆகியவற்றில் உள்ள எழுத்துகளை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம். 
  • வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் ஆன மிகப் பழமையான தமிழ் எழுத்து வடிவம்
  • தமிழெழுத்து வழக்கத்தில் உள்ள  தமிழ் மொழியின் பழைய எழுத்து வடிவம்
  • சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் 8 - 11 ம் நூற்றாண்டுவரை உள்ள சாசனங்களில் வட்டெழுத்துகள் இடம் பெற்றுள்ளன. 
  • முதலாம் இராஜாராஜ சோழனின் ஆட்சிக் காலமான 11 நூற்றாண்டுக்குப் பின்னான கல்வெட்டுக்களில் பழைய தமிழெழுத்துகள் உள்ளன
  • கடைச்சங்க காலத்து தமிழ் எழுத்து கண்ணெழுத்து "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
  • தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் இருந்தன. அரச்சலூர் கல்வெட்டே இதற்குச் சான்றாகும். இதில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
  • எகர ஒகர =குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது. 
  • (எ. கா)  எ்து = எது என்றும், எது = ஏது என்றும் ஒலித்தனர்.
  • உயிர்மெய்க் குறில் பின் பக்கப்புள்ளி வைத்தால் அது நெடிலாகக் கருதப்பட்டன. (க. = கா, த. = தா)
  • ஐகார எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (..க = கை). 
  • எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளின்  பின்  இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ.. = தௌ ). 
  • மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி         இட்டனர். 
  • குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.. இணைக்கொம்பு (ை)
  • தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். 

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்

  • எ்-எ 
  • எ-ஏ 
  • ஒ்-ஒ 
  • ஒ-ஓ 
  • கெ் - கெ  
  • கெ-கே 
  • கெ்ா-கொ 
  • கொ-கோ  

பெரியார் எழுத்து சீர்திருத்தங்கள்

 

4. சொற்பூங்கா,

  • சொல் = நெல் எனப் பொருள். அவற்றில் தோன்றியவை  சொன்றி, சோறு 
  • எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியர்
  • நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்பர் தொல்காப்பியர். 
  • குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவதில்லை -
  • குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே என்பர்.

ஓரெழுத்து ஒருமொழிகள்

  • உயிர் எழுத்து - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
  • மகர வரிசை - மா, மீ, மூ, மே, மை, மோ 
  • தகர வரிசை - தொ தீ, தூ, தே, தை
  • ககர வரிசை - கா, கூ, கை, கோ
  • நகர வரிசை - நா, நீ, நே, நை, நோ 
  • பகர வரிசை-பா. பூ. பே, பை, போ
  • சகர வரிசை - சா, சீ, சே, சோ 
  • வகர வரிசை - வோ, வீ, வை, வெள
  • யகர வரிசை - யா
  • குறில் எழுத்து - நொ, து

  • ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது; கோன் என்பது கோன் ஆகியது; தேன் என்பது தே  ஆகியது; பேய்  என்பது பே ஆகியது.
  • யா என்பது வினா, மா என்பது விலங்கை குறிக்கும். அரிமா , பரிமா , நரிமா , வரிமா , கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
  • காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர். 
  • ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் ‘எய்ப்பன்றி'

செந்தமிழில் அந்தனர் இரா இளங்குமரனார்.

  • சிறப்புப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார் 
  • நூலாசிரியர் இதழாசிரியர் உரையாசிரியர் தொகுப்பாசிரியர்,
  • படைப்புகள் இலக்கண வரலாறு. தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழின் தனிப்பெருஞ் சிறப்பு.
  • திருச்சிக்கு அருகில்  அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் அமைத்துள்ளார் 
  • இவர் தொகுத்த நூல் தேவநேயம்

5. எழுத்துகளின் பிறப்பு

  • உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, 
  • இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகியவற்றின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. 
  • இதனைஎழுத்துகளின் பிறப்பு என்பர். 
  • எழுத்து பிறப்பு =இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு எனப் பிரிப்பர்.

எழுத்துகளின் இடப்பிறப்பு

  • உயிர் எழுத்துகள் 12             = கழுத்தில் பிறக்கின்றன.
  • வல்லினமெய் எழுத்துகள் 6         = மார்பில் பிறக்கின்றன.
  • மெல்லினமெய் எழுத்துகள் 6     =  மூக்கில் பிறக்கின்றன.
  • இடையின மெய் எழுத்துகள் 6    = கழுத்தில் பிறக்கின்றன.
  • ஆய்த எழுத்து தலையில் பிறக்கிறது.

எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு

உயிர் எழுத்துகள்

  • அ, ஆ ஆகியவை வாய் திறத்தல் = முயற்சியில் பிறக்கும்.
  • இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய 5 = வாய்திறக்கும் முயற்சி+ நாக்கின் அடி ஓரம் மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியில் பிறக்கும். 
  • உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய 5 வாய்திறக்கும் முயற்சி+ இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.

மெய் எழுத்துகள் பிறப்பு

  • க், ங் - நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதி பொருந்துதல்.
  • ச், ஞ் - நாவின்  இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துதல்.
  • ட், ண் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துதல்.
  • த், ந் - மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துதல்.
  • ப், ம் - மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துதல்.
  • ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
  • ர், ழ் - மேல்வாயை நாக்கின் நுனி வருடுதல்.
  • ல் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குதல் .
  • ள் – இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதல்.
  • வ் – மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துதல்.
  • ற், ன் - மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துதல்.

பறவைகளின் ஒலிமரபு

  • ஆந்தை அலறும் 
  • குயில் கூவும் 
  • மயில் அகவும்
  • காகம் கரையும் 
  • கோழி கொக்கரிக்கும் 
  • கிளி பேசும்
  • சேவல் கூவும் 
  • புறா குனுகும் 
  • கூகை குழறும்

 தொகை மரபு

  • மக்கள் கூட்டம்
  • ஆநிரை 
  • ஆட்டு மந்தை

வினைமரபு

  •  சோறு உண்.
  • தண்ணீர் குடி 
  • பூக் கொய்
  • முறுக்குத் தின் 
  • பால் பருகு 
  • இலை பறி
  • சுவர் எழுப்பு 
  • கூடை முடை 
  • பானை வனை 

கலைச்சொல் அறிவோம்.

  • ஒலிபிறப்பியல்     – Articulatory phonetics     
  • உயிரொலி         - Vowel 
  • மெய்யொலி         – Consonant 
  • அகராதியியல்     – Lexicography 
  • மூக்கொலி         – Nasal consonant sound 
  • ஒலியன்         – Phoneme
  • கல்வெட்டு         – Epigraph 
  • சித்திர எழுத்து     - Pictograph

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.