Type Here to Get Search Results !

இயல் 9 8ம் வகுப்பு குன்றென நிமிர்ந்து நில் iyal-9-8th-tamil-notes-kunrena-niminthu-nel

இயல் 9
8ம் வகுப்பு
குன்றென நிமிர்ந்து நில்

table of contents(toc)

உயர் குணங்கள்

  • அறிவுஅருள் ஆசைஅச்சம்
    அன்புஇரக்கம் வெகுளி நாணம் -இறையரசன்

சொல்லும் பொருளும்

  • நிறை         - மேன்மை 
  • அழுக்காறு     - பொறாமை
  • பொறை     - பொறுமை 
  • மதம்         - கொள்கை
  • பொச்சாப்பு     - சோர்வு 
  • இகல்         - பகை
  • மையல்     - விருப்பம் 
  • மன்னும்     - நிலைபெற்ற
  • ஓர்ப்பு         - ஆராய்ந்து தெளிதல். 

பொதுவானக் குறிப்புகள்

  • இறையரசன் இயற்பெயர் சே.சேசுராசா தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார் 
  • ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத்  தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர்.
  • பாவை நோன்பு இருப்பவர்கள். திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக  ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை .
  • சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. இயற்றியவர் மணிவாசகர்.

பிற குறிப்புகள் 

  • செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண் 
    செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானை பாடேலோ ரெம்பாவாய். -திருப்பாவை.

இளைய தோழனுக்கு

  • வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் மு மேத்தா
  • கண்ணீர் பூக்கள், ஊர்வலம், சோழ நிலா. மகுட நிலா, மு மேத்தா கவிதைகள்-இவரின் நூல்கள் 
  • கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றியவர் 
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிதை நூல் .

சட்டமேதை அம்பேத்கர்

  • இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
  • மிகச்சிறந்த பொருளியல் அறிஞர், அரசியல் தத்துவமேதை, பகுத்தறிவு சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்.
  • 14.4 .1891 பிறப்பு, ராம்ஜி சக்பால் - பீமாபாய் - 14வது குழந்தை.
  • ஊர் மகாராஷ்டிரா - ரத்தனகிரி மாவட்டம்-அம்பவாதே
  • தந்தை ராணுவப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
  • தொடக்க கல்வி சதாரா
  • ஆசிரியர் பெயர் மகாதேவ் அம்பேத்கர்
  • அம்பேத்கரின் இயற்பெயர் =பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்
  • ஆசிரியர் இவர் மீதுகொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்றிக் கொண்டார். 1904 குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.
  • மும்பை எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். 1907 தன் பள்ளிப் படிப்பை முடித்தார்.
  • பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் 1912ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் உயர் அலுவலராகப் பணியாற்றினார்.
  • பரோடா மன்னர் சாயாஜி ராவ் உதவியுடன் அமெரிக்காவில் உயர் கல்வி கற்கச் சென்றார்.
  • கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.
  • 1915 பண்டைய கால இந்திய வணிகம் என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.
  • இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை படைத்தார்.இதுவே அம்பேத்கரின் முதல் நூலாகும்.
  • இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற ஆய்வுக்குக் கொலம்பியா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.
  • ஆண்டு 1920 ல்  பொருளாதார படிப்பிற்காக இலண்டன் சென்றார். 
  • ஆண்டு 1921 ல் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார். 
  • ஆண்டு 1923 ல் ரூபாய் பற்றிய பிரச்சனை என்ற ஆராய்ச்சிக் கட்டுரைக்கு முனைவர் பட்டமும் பெற்றார். 
  • ஆண்டு 1923 ல்  சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
  • ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை 1924
  • அம்பேத்கரின் பொன்மொழி நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று 
    • முதல் தெய்வம் அறிவு 
    • இரண்டாவது தெய்வம்  சுயமரியாதை 
    • மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.
  • 1930-ல் லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார்.

பூனே ஒப்பந்தம் 

  • தனி வாக்குரிமையும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேண்டும் என்ற இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கூறினார்.
  • அதன் விளைவாகப் பொது வேட்பாளருக்கு ஒரு ஓட்டும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளருக்கு மற்றொரு ஓட்டும் என இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. இதைக் காந்தி எதிர்த்தார்.
  • ஆண்டு 24/10/1931 காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது- பூனா ஒப்பந்தம் என அழைக்கப்படும்.
  • இவ்வொப்பந்தத்தில். ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.  

சுதந்திர தொழிலாளர் கட்சி

  • ஆண்டு 1935 மாநில சுயாட்சிக்கான இந்திய அரசாங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • இதனால் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் மட்டுமின்றி அக்கட்சியின் 15 பேரும் வெற்றி பெற்றனர்.
  • ஒடுக்கப்பட்ட பாரதம் இதழ் 1927ல் தொடங்கினார்.
  • சமாஜ் சமாத சங்கம் தொடங்கினார். 
  • 1930 நாசிக் கோயில் நுழைவு போராட்டம் நடத்தினர்.
  • அரசியல் முன்னுரிமை வழங்குவதைப்  பற்றி முடிவு செய்ய 1930 ல் நவம்பர் மாதம் இங்கிலாந்தில் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது.
  • அதில் அம்பேத்கருடன் இராவ்பகதூர், இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்
  • இங்கிலாந்து வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு, பின்னர் அமெரிக்கா சென்று, இந்தியா திரும்பியபோது 18 பெட்டிகள் புத்தகம் கொண்டுவந்தார் அம்பேத்கர்.

அரசியல் நிர்ணய மன்றம்

  • அரசியல் நிர்ணய மன்றம் 29.8.1947 ல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன்படி அம்பேத்கர் தலைமையில் 7 பெயர்கள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது குழு உறுப்பினர்கள் 

  1. கோபாலசாமி 
  2. அல்லாடிக் கிருஷ்ணமூர்த்தி 
  3. கே.எம்.முன்ஷி 
  4. சையது முகமது சாதுல்லா 
  5. மாதவராவ் 
  6. டி.பி.கைதான்.

  • இக்குழு தனது அறிக்கையை 21.2.1948ல் ஒப்படைத்தது. 
  • இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சோவியத் யூனியன், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா  ஆகியவற்றிலிருந்து இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு இந்தியா.
  • இலங்கையில் நடைபெற்ற புத்த துறவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டார் 
  • உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார் 
  • இவர் 14.9.1956 நாக்பூரில் லட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
  • அவர் எழுதிய நூல் புத்தரும் அவரின் தம்மமும்.  அவரின் மறைவுக்குப் பின் 1957 இல் வெளியானது.
  • மறைவு 6.12.1956 மறைவுக்குப் பின் 1990இல் இந்திய அரசின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பால் மனம்(கோமகள்)

  • இயற்பெயர் ராஜலட்சுமி
  • சிறுகதைகள், புதினங்கள், குறும் புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி, நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
  • அன்னை பூமி  புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருதினைப் பெற்றுள்ளார்
  • உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல், அ.வெண்ணிலா தொகுத்த =மீதமிருக்கும் சொற்கள் (பால் மனம்) என்ற பல நூல்களை எழுதியுள்ளார்.


அணி இலக்கணம்

பிறிது மொழிதல் அணி

  • உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிதுமொழிதல் அணி
    • கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் 
      நாவாயும் ஓடா நிலத்து 
  • நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறுகிறது. 
  • இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெற முடியும்; தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என உணர்த்துகிறது.

வேற்றுமை அணி

  • இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி.
  • தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே 
    நாவினால் சுட்ட வடு
    .
  • முதலில் நெருப்பு கடுஞ்சொல் இரண்டும் சுடும் தன்மை உடையன எனக் குறிப்பிடுகிறார்
  • பின்னர் நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும் உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என வேறுபாடு கூறப்படுகிறது.

 இரட்டுறமொழிதல் அணி 

  • ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் அணி ஆகும் இதனைச் சிலேடை என்றும் கூறுவர்
  • ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
    நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
    தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்
    தேங்காயும் நாயும்நேர் செப்பு

விளக்கம் 

  • இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. 
  • தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்; 
  • தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும். 
  • நாய் சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்; சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்; குரைப்பதற்கு வெட்கப்படாது. 

தான், தாம் என்னும் சொற்கள்

  • தான் என்பது ஒருமையைக் குறிக்கும்.
  • தாம் என்பது பன்மையைக் குறிக்கும். 
  • தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
  • தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும். (எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார். மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.
  • இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும் 
  • எ.கா. மாடுகள் தமது தலையை ஆட்டின. கன்று தனது தலையை ஆட்டியது.

கலைச்சொல் அறிவோம்.

  • குறிக்கோள்          - Objective 
  • பல்கலைக்கழகம்  - University
  • நம்பிக்கை          - Confidence
  • ஒப்பந்தம்          - Agreement
  • முனைவர் பட்டம்    - Doctorate 
  • அரசியலமைப்பு    - Constitution
  • வட்ட மேசை மாநாடு - Round Table Conference 
  • இரட்டை வாக்குரிமை- Double voting

 




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.