Type Here to Get Search Results !

இயல் 1 9ம் வகுப்பு அமுதென்று பேர்- amuthenthru per-eyal-1-9th-tamizh-tnpsc-notes

 

இயல் 1
9ம் வகுப்பு

அமுதென்று பேர்

Table of contents(toc)

திராவிட மொழிக் குடும்பம்

  • தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும்.
  • இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300- க்கு மேல்.

நான்கு மொழிக்குடும்பங்கள் 

  1. இந்தோ – ஆசிய மொழிகள்
  2. திராவிட மொழிகள்
  3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
  4. சீன – திபெத்திய மொழிகள்

  • இந்திய  நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
  • மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரிகம். இதைத் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருத்து.
  • திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர்.
  • தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
  • ஹீராஸ் பாதிரியார் என்பார் தமிழ் - > தமிழா -> தமிலா -> டிரமிலா -> ட்ரமிலா -> த்ராவிடா ->திராவிடா என்று வந்ததாக விளக்குகின்றார்.
  • அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் -வடமொழியானது மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழியென முதன்முதலில் குறிப்பிட்டார். 
  • இதைபற்றி 1816ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 
  • முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார்.
  • ஹோக்கன் என்பவர் மால்தோ, தோடா, கோண்டி ஆகிய மொழிகள் அனைத்தையும் இத்தோடு  இணைத்துத் தமிழியன்  எனப் பெயரிட்டார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.
  • கால்டுவெல், (1856 இல்) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில், திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவையெனக் கூறினார்.
  • ஸ்டென்கனோ, கே.வி. சுப்பையா, எல்.வி.இராமசுவாமி, பரோ, எமினோ, கமில்சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முதலான அறிஞர்கள் திராவிட மொழிகளின் ஆய்வில் குறிப்பிடத்தக்கவர்கள்.

திராவிட மொழிக்குடும்பம்

  • நில அடிப்படையில்  3 வகை

  1. தென்திராவிட மொழிகள்.
  2. நடுத்திராவிட மொழிகள்.
  3. வடதிராவிட மொழிகள்.

தென்திராவிட மொழிகள்

  • தமிழ், மலையாளம், கன்னடம், குடகு (கொடகு), துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா.

நடுத்திராவிடம்

  • தெலுங்கு, கூயி, கூவி (குவி), கோண்டா, கோலாமி, (கொலாமி), நாய்க்கி. பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா

வட திராவிடம் 

  • குரூக், மால்தோ, பிராகுய் (பிராகுயி)

 

  • இந்த 24 மொழிகள் தவிர அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிககளையும் சேர்த்து திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்

  • தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி ; சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்றது தமிழ்; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம். – கால்டுவெல்

சான்று


அடிச் சொல்

திராவிட மொழிகள்

அடிச் சொல்

திராவிட மொழிகள்

கண்

தமிழ்

மூன்று

தமிழ்

கண்ணு

மலையாளம், கன்னடம்

மூணு

மலையாளம்

கன்னு

தெலுங்கு

மூடு

தெலுங்கு

ஃகன்

குரூக்

மூரு

கன்னடம்

கெண்

பர்ஜி

மூஜி

துளு

  • திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப் பால்பாகுபாடு அமைந்துள்ளது., வடமொழியில் உயிரற்ற பொருள்களும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும் கூட ஆண், பெண் என்று பாகுபடுத்தப்படுகின்றன.
  • ஜெர்மன் மொழி –(வாய், மூக்கு, கண்) பால் பாகுபாடு.
  • வாய்- ஆண்பால், மூக்கு- பெண்பால், கண்-பொதுப்பால் எனக் கருதுவர் 
  • மலையாள மொழி திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும். பால் காட்டும் விகுதிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துகொள்ள முடியும்.

பழைமையான இலக்கண இலக்கியங்கள்


மொழி

இலக்கியம்

காலம்

இலக்கணம்

காலம்

சான்று

தமிழ்

சங்க இலக்கியம்

கி.மு 5 முதல் கி.பி 2 நூற்றாண்டு

தொல்காப்பியம்

கி.மு 3 ஆம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ) சாகித்ய அகாடமி

கன்னடம்

கவிராஜ மார்க்கம்

கி.பி 9 நூற்றாண்டு

கவிராஜ மார்க்கம்

இலக்கணம் கி.பி 9 நூற்றாண்டு

இந்திய இலக்கண கொள்கைகளின் பின்னனியில் தமிழ் இலக்கணம் செ. வை. சண்முகம்

தெலுங்கு

பாரதம்

கி.பி 11 ம் நூற்றாண்டு

ஆந்திர  பாஷா பூஷணம்

கி.பி 12 ஆம் நூற்றாண்டு

மலையாளம்

ராம சரிதம்

கி.பி 12ஆம் நூற்றாண்டு

லீலாதிலகம்

கி.பி 15 ஆம் நூற்றாண்டு

மலையாள இலக்கிய வரலாறு சாகித்ய அகாடமி

திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை


தமிழ்

மலையாளம்

தெலுங்கு

கன்னடம்

துளு

கூர்க்

மரம்

மரம்

மானு

மரம்

மர

மர

ஒன்று

ஒண்ணு

ஒகடி

ஒந்து

ஒஞ்சி

---------

நூறு

நூறு

நூரு

நூரு

நூது

---------

நீ

நீ

நீவு

நீன்

நின்

இரண்டு

ஈர்ரெண்டு

ஈர்ரெண்டு

எரடு

ரட்டு

------

நான்கு

நால், நாங்கு

நாலுகு

நாலு

நாலு

------

ஐந்து

அஞ்சு

ஐது

ஐது

ஐனு

------

  • தமிழின்  பல அடி சொற்களின் ஒலியன்கள் ஒலி பெயர்த்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறி இருக்கின்றன
  • மொரீசியஸ் இலங்கை நாடுகளில்  உள்ள பணத்தாள்களில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது

 தமிழோவியம்  ஈரோடு தமிழன்பன்

இலக்கணக்குறிப்பு 

  • எத்தனை எத்தனை, விட்டு விட்டு =அடுக்குத் தொடர்கள்
  • ஏந்தி                  = வினையெச்சம் 
  • காலமும்           =முற்றும்மை
  • வளர்ப்பாய்     = வினைமுற்று

பொதுவான குறிப்புகள்

  • ஈரோடு தமிழன்பன் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என்ற புதுப்புது வடிவங்களாகக் கவிதை நூல் தந்தார்.
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் பாரதியார்.
  • ஈரோடு  தமிழன்பனின் தமிழோவியம் என்ற நூலின் முன்னுரை "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவையில்லை பாடலும் அப்படித்தான்"
  • வணக்கம் வள்ளுவ கவிதை நூல் சாகித்ய அகாடமி விருது 2004.
  • தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் 
  • இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் -பிங்கல நிகண்டு
  • உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 
  • தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் இலங்கை சிங்கப்பூர்.

தமிழ் விடு தூது.

  • தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
    முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள் - கண்ணிகள்

சொல்லும் பொருளும்

  • குறம், பள்ளு     = சிற்றிலக்கிய வகைகள்
  • மூன்றினம்    = துறை, தாழிசை, விருத்தம்
  • திறமெல்லாம்    =சிறப்பெல்லாம்
  • சிந்தாமணி     =சீவகசிந்தாமணி, சிதறாத மணியென இரு பொருள் தரும்.
  • சிந்து         =ஒரு வகை இசை பாடல்
  • முக்குணங்கள் = சத்துவம் -அமைதி குணம், இராசசம்- போர்க்குணம். தாமசம்- சோம்பல் குணம்.
  • வண்ணங்கள் ஐந்து     :வெள்ளை, சிகப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை.
  • வண்ணம் நூறு  :குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
  • ஊன ரசம் = குறையுடைய சுவை 
  • நவரசம் =வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், பகை, சமநிலை.
  • வனப்பு அழகு, அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.
  • பத்து குணங்கள்: செறிவு, தெளிவு, சமநிலை,  இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலின் பொருண்மை, காந்தம், வலி, சமாதி

இலக்கண குறிப்பு

  • முத்திக்கனி     – உருவகம்
  • தெள்ளமுது     -பண்புத்தொகை 
  • குற்றமிலா       - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  • நா                      - ஓரெழுத்து ஒரு மொழி 
  • செவிகள் உணவான -இரண்டாம் வேற்றுமைத்தொகை 
  • சிந்தாமணி    - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  • கொள்வார்- வினைமுற்று 
  • உணர்ந்த     - பெயரெச்சம்

பொதுவான குறிப்புகள்

  • தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’ என்பதும் ஒன்று. 
  • இது, ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • தலைவன் தலைவியருளுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் மீது காட்டும் அன்பை வெளிப்படுத்த மற்றொருவரிடம் மாலை வாங்கி வருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும்  தூது அனுப்புவதாக அமைவது தூது இலக்கியம்.
  • மதுரை சொக்கநாதரிடம் காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை அவரிடம் கூறி வருமாறு தமிழை தூது விடுவதாக அமைந்து உள்ளது- தமிழ்விடு தூது
  • இது 268 கண்ணிகள் கொண்டது
  • தமிழ் விடுதூது  1930ம் ஆண்டு - உ.வே. சா - ஆல்  முதன்முதலில் பதிப்பிக்கபட்டது.

மற்றவை

  • காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் 
    மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
    போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
    நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளை தாங்குதமிழ் நீடுவாழ்க 
     - கவியோகி சுத்தானந்த பாரதியார்.

வளரும் செல்வம்.

  • சாப்ட்வேர் [software] - மென்பொருள் 
  • ப்ரௌசர் [browser]     - உலவி 
  • க்ராப் [crop]         - செதுக்கி 
  • கர்சர் [cursor]         - ஏவி அல்லது சுட்டி
  • சைபர்ஸ்பேஸ் [cyberspace] – இணையவெளி
  • சர்வர் [server]     - வையக விரிவு வலை வழங்கி 
  • ஃபோல்டர் [Folder]     - உறை
  • லேப்டாப் [Laptop]     - மடிக்கணினி



பெயர்

எண் அளவு

பெயர்

எண் அளவு

முந்திரி

அரைக்காணி 

அரைக்காணி முந்திரி 

காணி- 

கால் வீசம் 

அரைமா 

அரை வீசம் 

முக்காணி 

1/320

1/160

3/320

1/80

1/64

1/40

1/32

3/80

முக்கால் வீசம் 

ஒருமா 

மாகாணி (வீசம்) 

இருமா 

அரைக்கால் 

மூன்றுமா 

மூன்று வீசம் - 

நாலுமா 

3/64

1/20

1/16

1/10

1/8

3/20

3/16

1/5

 

  •  கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் பாய்யியோனா (παιήονα) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது 'பா' எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.
  • வெண்பாவின் ஓசை செப்பலோசை. கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் சாப்போ என அழைக்கப்படுகின்றன.
  • கிரேக்கத்திலிருந்து இலத்தீன்  மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் சேப்பிக்- ஸ்டேன்சா என இன்று வழங்கப்ப டுகிறது.
  • தமிழில் இளிவரல் என்ற துன்பச் சுவையினைத் தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன . 
  • கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (ελεγεία) என அழைக்கப்படுகின்றன.
  • கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு கடல் வழியைக் கூறும் கிரேக்க நூல் எறிதிரேசியன் ஆப் த பெரிபிலஸ்.(PeriPlus of the erythraean). எறிதிரை என்பது கடலைச் சார்ந்த பெரியபுலம் என்று பொருள்.


தமிழ் எண்கள் அறிவோம்.


1-

2-

3-

4- 

5-

6-

7-

8-

9-

10- ௧௦ /௰

 

தொடர் இலக்கணம்


எழுவாய் 

  • எட்வர்டு வந்தான் ; எட்வர்டு பெயர்ச்சொல்
  • சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த சொல்லே எழுவாய் ஆகும்.

பயனிலை 

  • கனகாம்பரம் பூத்தது ; பூத்தது -வினைச்சொல்
  •  இதில்  வினைச்சொல்லே பயனிலை ஆகும். ஒரு தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம்

செயப்படுபொருள்

  • மீனா  கனகாம்பரத்தை சூடினாள்
  • சொற்றொடர் எழுவதற்கு காரணமாக அமைந்த மீனா எனும் பெயர்ச்சொல் எழுவாய் ஆகும். எழுவாயின் பயனிலை சூடினாள்  என்பதாகும் மற்றொரு சொல்  கனகாம்பரம் செயப்படுபொருள்
  • எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளையே செயப்படுபொருள்.
  • ஒரு தொடரில் எழுவாயும் செயப்படுபொருளும் பெயர்ச் சொல்லாகவும் பயனிலை வினைமுற்றாகவும் இருக்கும்.  பயனிலை அந்தத் தொடரில் பயன் நிலைத்து இருக்கும்  இடமாகும் 
  • ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. செயப்படுபொருள் தோன்றும் தொடர் விளக்கமாக இருக்கும்.
  • படித்தாய் இதில் படித்தாய் என்பது பயனிலை நீ என்னும் எழுவாய் மறைந்து உள்ளது இது தோன்றா எழுவாய் என்கிறோம்

வினைப் பயனிலை

  • நான் வந்தேன். வினைமுற்று பயனிலையாக வருவது  

பெயர் பயனிலை

  • சொன்னவள் கலா.   பெயர்ச்சொல் பயனிலையாக வருவது 

வினாப் பயனிலை

  • விளையாடுபவன் யார். யார் என்னும் வினாச்சொல் பயனிலையாக  வருவது 

பெயரடை

  • நல்ல நூல் படித்தேன். இத்தொடரின் நல்ல என்னும் சொல் எழுவாயாக வரும் பெயர்ச் சொல்லுக்கு அடையாக வருவது பெயரடை

வினையடை

  • மகிழன் மெல்ல நடந்தான். மெல்ல எனும் சொல் நடந்தான் என்ற வினைப் பயனிலைக்கு அடையாக வருவது வினையடை

தன்வினை, பிறவினை

  • பந்து உருண்டது என்பது தன்வினை 
  • உருட்ட வைத்தான் என்பது பிறவினை
  • எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை 
  • எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால்  பிறவினை 
  • பிறவினைகள்  வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும். செய், வை, பண்ணு போன்ற துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.

செய்வினை, செயப்பாட்டுவினை

  • செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை 
  • செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை
  • அப்பா சொன்னார் செய்வினை தொடர் 
  • தோசை வைக்கப்பட்டது செயப்பாட்டு வினை தொடர்

பயன்பாட்டு தொடர்கள்

  • அப்துல் நேற்று வந்தான்                               =தன்வினை தொடர் 
  • அப்துல்  நேற்று வருவித்தான்                     = பிறவினை தொடர் 
  • கவிதா உரை படித்தாள்                                 = செய்வினைத் தொடர் 
  • உரை கவிதாவால் படிக்கப்பட்டது               = செயப்பாட்டுவினை தொடர் 
  • குமரன் மழையில் நனைந்தான்                = உடன்பாட்டு வினை தொடர் 
  • குமரன் மழையில் நனையவில்லை         = எதிர்மறை வினை தொடர் 
  • என் அண்ணன் நாளை வருவான்             = செய்தித் தொடர் 
  • எவ்வளவு உயரமான மரம்                            = உணர்ச்சித் தொடர் 
  • உள்ளே பேசிக் கொண்டிருப்பது யார்?         =வினாத்தொடர்
  • இது நாற்காலி அவன் மாணவன்               =பெயர்ப் பயனிலை தொடர்


பகுபத உறுப்பிலக்கணம்.

  • பதம் சொல் இருவகைப்படும்
  • பகுபதம், பகாப்பதம்
  • பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் 
  • இது பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இருவகைப்படும்

பகுபத உறுப்புகள் ஆறு


பகுதி  

(முன்னிலை)

சொல்லின் முதலில் நிற்கும் பகாப்பதம் ஆக அமையும். வினைச் சொல்லில்  ஏவல் ஆகவும், பெயர்ச்சொல்லின் ஆறு வகை பெயராகவும் அமையும்.

விகுதி

(இறுதி நிலை)

சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டும்

இடைநிலை

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்

சந்தி       

பகுதியையும் பிற உறுப்புக்களையும் இணைக்கும். பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்

சாரியை

பகுதி, விகுதி, இடைநிலைகளைச்  சார்ந்து வரும். பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

விகாரம்

தனி உறுப்பு அன்று: பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்.

       

விகுதி

படித்தான்

ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

அன், ஆன்

பாடுகிறாள்

ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

அள், ஆள்

பெற்றார்

ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

அர், ஆர்

நீந்தியது

 து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

 து, று

ஓடின

அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

,

சிரிக்கிறேன்

ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

என், ஏன்

உண்டோம்

ஓம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி

அம், ஆம், எம், ஏம், ஓம்

செய்தாய்

ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

, ஆய்,

பாரீர்

ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி

இர், ஈர்

அழகிய, பேசும்

, உம் – பெயரெச்ச விகுதிகள்

, உம்

வந்து, தேடி

, இ - வினையெச்ச விகுதிகள்

,

வளர்க

க – வியங்கோள் வினைமுற்று விகுதி

, இய, இயர்

முளைத்தல்

தல் – தொழிற்பெயர் விகுதி

தல், அல், , கை , சி, பு...

 

இடை நிலை

 

வென்றார்

ற்-இறந்தகால இடை நிலை

த், ட், ற், இன்

 

உயர்கிறான்

கிறு – நிகழ்கால இடை நிலை

கிறு, கின்று, ஆநின்று

 

புகுவான், செய்கேன்

வ், க் – எதிர்கால இடை நிலைகள்

ப், வ், க்

 

பறிக்காதீர்

ஆ – எதிர்மறை இடை நிலை

இல், அல்,

 

மகிழ்ச்சி, அறிஞன்

ச், ஞ் – பெயர் இடை நிலைகள்

ஞ், ந், வ், ச், த்

 

சந்தி

உறுத்தும்

த் - சந்தி

த், ப், க்

பொருந்திய

 ய் – உடம்படுமெய் சந்தி

ய், வ்

 

சாரியை

நடந்தனன்

அன் – சாரியை

அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து,

அம், தம், நம், நும், , , , , கு, ன்

 

எழுத்துப் பேறு 

  • பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி விகுதிக்கும் நடுவே காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும் 
  • 'த்' மட்டுமே பெரும்பாலும் வரும். சாரியை இடத்தில் த் வந்தால் எழுத்துப்பேறு.

  • செய்யாதே =செய் + ய் + ஆ + த் + ஏ
  • செய்   – பகுதி
  • ய்        – சந்தி
  • ஆ       – எதிர்மறை இடைநிலை
  • த்         – எழுத்துப்பேறு
  • ஏ         – முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி.

  • வந்தனன் =  வா(வ) + த் (ந்) + த் + அன் + அன்
  • வா      – பகுதி (’வ’ ஆனது விகாரம்)
  • த்(ந்)    – சந்தி (’ந்’ ஆனது விகாரம்)
  • த்         – இறந்தகால இடைநிலை
  • அன்    – சாரியை
  • அன்    – ஆண்பால் வினைமுற்று விகுதி

  • விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த
    பிறகுநான் வீணையாய்ப் போனேன்; - கவிஞர் வாலி.

  • விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
    விண்ணோங்கு பெருமலையில், - ம.இலெ. தங்கப்பா

கலைச்சொல் அறிவோம்

  • உருபன் - Morpheme 
  • ஒலியன் - Phoneme
  • ஒப்பிலக்கணம் - Comparative Grammar
  • பேரகராதி - Lexicon

அறிவை விரிவு செய்

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ராபர்ட் கால்டுவெல்
  • மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா
  • தமிழ்நடைக் கையேடு, மாணவர்களுக்கான தமிழ் – என். சொக்கன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.