இயல் 2
தமிழ் 9ம் வகுப்பு
உயிருக்கு வேர்
நீரின்றி அமையாது உலகு
- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என இயற்கையைப் பாடி இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார்
- உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 5
- அகழி, ஆழிக்கிணறு, உறைகிணறு, அணை, ஏரி, குளம், ஊரணி, கண்மாய், கேணி என்பன நீர்நிலைகளின் பல்வேறு பெயர்கள்.
- பாண்டி மண்டலத்து நிலப்பகுதியின் ஏரி கண்மாய் என்றழைப்பர். கம்மாய் என்பது வட்டார வழக்கு.
- மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு உறைகிணறு என்று பெயர்.
- மக்கள் பருகும் நீர் உள்ள நீர்நிலைக்கு ஊரணி என்று பெயர்
- கல்லணை கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது. கல்லணையின் நீளம் 1080 அடிகள், அகலம் 40 முதல் 60 அடி, உயரம் 15 முதல் 18 அடி ஆகும்
- மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
- காடும் உடையது அரண். நீருக்கே முதலிடம் தருகிறார் திருவள்ளுவர்
- உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’எனப் புறநானூறு கூறுகிறது
- இந்திய நீர் பாசனத்தின் தந்தை சர் ஆர்தர் காட்டன்
- ஆங்கில பொறியாளர். 1829 -இல் காவிரி நீர் பாசன பகுதிக்குத் தனி பொறுப்பாளராக இருந்தார்
- பயனற்று கிடந்த கல்லணையில் மணல் போக்கிகள் அமைத்துச் சீரமைத்தார்.
- கல்லணைக்கு- கிராண்ட் அணைக்கட் என்று பெயர் சூட்டினார்
- கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு 1873 கோதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரன் அணையைக் கட்டினார்
- நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப் பட்டவையாக விளங்குகின்றன என்றார் பேராசிரியர் தொ பரமசிவன்.
- குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார் ஆண்டாள்
- தெய்வ சிலைகளைக் குளிக்க வைப்பதை திருமஞ்சனமாடல்
- சனி நீராடு’ என்பது ஒளவையார் வாக்கு
சோழர் கால குமிழித்தூம்பு
- ஏரி நிரம்பும்போது நீச்சல் வீரர் ஒருவர் தண்ணீருக்குள் நின்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பு மேலே தூக்குவார்
- அடியில் இரண்டு துளைகள் காணப்படும் மேலே இருக்கும் நீரோடி துளையிலிருந்து நீர் வெளியேறும். கீழே உள்ள சேறோடி துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும் இதனால் தூர்வார வேண்டிய அவசியமில்லை.
- தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய மாவட்டத்திற்கு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னிகுயிக்
நீர்நிலை | பயன்கள் |
அகழி | கோட்டையின் புறத்தே அமைக்கப்பட்ட நீர் அரண் |
அருவி | மலைமுகட்டு தேக்கநீர் குத்திட்டு குதிப்பது. |
ஆழிக்கிணறு | கடல் அருகே தோண்டி கட்டிய கிணறு |
ஆறு | இரு கரைகளுக்கு இடையே ஓடும் நீர்ப்பரப்பு |
இலஞ்சி | பலவகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் |
உறைகிணறு | மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையம் இட்ட கிணறு |
ஊருணி | மக்கள் பருகும் நீர் உள்ள நீர் நிலை |
ஊற்று | அடியிலிருந்து நீர் ஊறுவது |
ஏரி | வேளாண்மை பாசன நீர் தேக்கம் |
கட்டுக்கிணறு | சரளை நிலத்தில் தோண்டி கல் செங்கற்களால் அகசுவர் கட்டிய கிணறு |
கடல் | அலைகளைக் கொண்ட உப்புநீர் பெரும்பரப்பு |
கண்மாய் | பாண்டி மண்டலத்து ஏரிக்கு வழங்கப்படும் பெயர் |
குண்டம் | சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை |
குண்டு | குளிப்பதற்கு ஏற்றச் சிறுகுளம் |
குமிழி | ஊற்று அடி நிலத்தின் நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று |
கூவல் | உவர் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை |
கேணி | ஆழமும் அகலமும் உள்ள பெரும் கிணறு |
புனற்குளம் | நீர்வரத்து மடையின்றி மழை நீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை |
பூட்டை கிணறு | கமலை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு |
பட்டமரம்
இலக்கணக்குறிப்பு
- வெந்து, வெம்பி, எய்தி= வினையெச்சங்கள்
- மூடுபனி =வினைத்தொகை
- ஆடுங்கிளை = பெயரெச்சத் தொடர்.
பொதுவான குறிப்புகள்
- கவிஞர் தமிழ் ஒளி (1924-1965)புதுவையில் பிறந்தவர்
- பாரதியாரின் வழித்தோன்றல், பாரதிதாசனின் மாணவர்
- நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே- தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவி பாடி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம், தமிழ்ஒளியின் கவிதைகள் இவரின் படைப்புகள்
பெரியபுராணம் சேக்கிழார்
சொல்லும் பொருளும்
- மா- வண்டு
- வளர் முதல் - நெற்பயிர்
- தரளம் - முத்து
- பணிலம் - சங்கு
- குழை – சிறு கிளை
- அரும்பு – மலர் மொட்டு
- மாடு - பக்கம்
- கோடு - குளக்கரை
- ஆடும் - நீராடும்
- மேதி - எருமை
- மது - தேன்
- வரம்பு - வரப்பு
- கழை - கரும்பு
- கா - சோலை
- சூடு - நெல் அரிக்கட்டு
- சுரிவளை - சங்கு
- வேரி - தேன்.
- பகடு - எருமைக்கடா
- பாண்டில் - வட்டம்
- சிமயம் – மலையுச்சி
- வாவி–பொய்கை
- நாளிகேரம் - தென்னை
- நரந்தம் - நாரத்தை
- கோளி - அரசமரம்
- சாலம் - ஆச்சா மரம்
- தமாலம் - பச்சிலை மரம்
- சந்து - சந்தன மரம்
- நாகம் - நாகமரம்
- காஞ்சி – ஆற்றுப்பூவரசு.
- துதைந்து எழும் - கலக்கி எழும்;
- இரும்போந்து -பருத்த பனைமரம் ;
- நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள்
- கன்னி வாளை - இளமையான வாளைமீன்
இலக்கண குறிப்பு
- கருங்குவளை, செந்நெல் -பண்புத்தொகை
- விரிமலர் -வினைத்தொகை
- தடவரை - உரிச்சொற்றொடர்.
பொதுவான குறிப்புகள்
- ஒரு அடிக்கு ஒரு அடியவரின் பெருமையைக் கூறுவது - திருத்தொண்டத்தொகை, சுந்தரர்
- ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு அடியவரின் பெருமையைக் கூறுவது திருத்தொண்டர் திருவந்தாதி, நம்பியாண்டார் நம்பி
- ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு அடியாராக அறுபத்து மூவரின் பெருமையைக் கூறுவது பெரியபுராணம் திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்.
- கிபி 12ஆம் நூற்றாண்டுச் சேர்ந்தவர்
- சேக்கிழார் சோழன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதல் அமைச்சராக இருந்தார்.
- ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ’ மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டியுள்ளார்.
- வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ? - பாரதியார்.
புறநானூறு -குடபுலவியனார்
- வான் உட்கும் வடிநீண் மதில் மல்லன் மூதூர் வய வேந்தே! -பாண்டியன் நெடுஞ்செழியனை பாடியது
பொதுவியல் திணை
- வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
முதுமொழிக்காஞ்சித் துறை
- அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதிதரும் தன்மையைக் கூறுதல்.
சொல்லும் பொருளும்
- யாக்கை – உடம்பு,
- புணரியோர் – தந்தவர்,
- புன்புலம் – புல்லிய நிலம்,
- தாட்கு – முயற்சி, ஆளுமை;
- தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறை வில்லாது நீர்நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்
இலக்கணக்குறிப்பு
- மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகைகள் ;
- நிறுத்தல் – தொழிற்பெயர் ;
- அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
- நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மைகள் ;
- அடுபோர் – வினைத்தொகை.
- கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்.
பொதுவான குறிப்புகள்
- எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
- பண்டைய தமிழர்களின் வீரம் வெற்றி கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் புற வாழ்வைப் பற்றியும் கூறுகிறது
- பண்டைய தமிழர்களின் பண்பாட்டு கருவூலம் புறநானூறு,
மற்ற குறிப்புகள்
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே புறம் 18
- உண்பது நாழி உடுப்பவை இரண்டே புறம் 189
- யாதும் ஊரே யாவரும் கேளிர் புறம் 192
- சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே புறம் 312
- உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே - புறம் 183
தண்ணீர் -கந்தர்வன்
- கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம்.
- ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர்
- தமிழக அரசின் கருவூல கணக்குத் துறையில் பணியாற்றியவர்
- சாசனம் ,ஒவ்வொரு கல்லாய் ,கொம்பன் சிறுகதைத் தொகுப்புகள்.
துணைவினைகள்
வினை வகைகள்
- அமைப்பு, பொருள், சொற்றொடரில் அவை தொழிற்படும் விதம் - அடிப்படையில் பலவகை உண்டு
- வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் தனிவினை, கூட்டு வினை வகைபடும்.
தனிவினை
- படி, படியுங்கள், படிக்கிறார்கள்.
- படி என்னும் வினையடி, பகாப்பதம் ஆகும். அதை மேலும் பிரிக்க முடியாது.
- இவ்வாறு, தனிவினையடிகளை அல்லது தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை என்பர்.
கூட்டுவினை
- ஆசைப்பட்டேன், கண்டுபிடித்தார்கள், தந்தியடித்தேன், முன்னேறினோம்.
- ஆசைப்படு, கண்டுபிடி, தந்தியடி, முன்னேறு என்பன வினையடிகள்- பகுபதங்களாகும்.
- இவ்வாறு பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினையடிகள் என்பர்.
- அவ்வகையில் கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.
கூட்டுவினைகள் பொதுவாக மூன்று வகை
- பெயர் + வினை = வினை, தந்தி + அடி = தந்தியடி;ஆணை + இடு = ஆணையிடு
- வினை + வினை = வினை, கண்டு + பிடி = கண்டுபிடி;சுட்டி+ காட்டு = சுட்டிக்காட்டு
- இடை + வினை = வினை முன் + ஏறு = முன்னேறு; பின் + பற்று = பின்பற்று.
- முதல்வினையும் துணைவினையும்
- நான் படம் பார்த்தேன்.
- பார் என்னும் வினை, கண்களால் பார்த்தல் என்னும் பொருளைத் தருகிறது.
- இது அடிப்படைப் பொருள் அல்லது சொற்பொருள்(LEXICAL MEANING)
- எழுதிப் பார்த்தாள்.
- இவற்றில் இரண்டு உறுப்புகள் உள்ளன. எழுதி என்பது முதல் உறுப்பு. இவை அந்த வினையின் அடிப்படைப் பொருளைத் தருகின்றன. பார் என்பது இரண்டாவது உறுப்பு. பார்த்தல் எனப் பொருள் தராமல் தனது முதல் உறுப்போடு சேர்ந்து வேறு பொருள் தருகிறது. பார் என்பது சோதித்து அறிதல் என்னும் பொருளைத் தருகிறது.
- முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை, முதல் வினை (MAIN VERB) எனப்படும்.
- இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை, துணைவினை எனப்படும்.
- கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
- துணைவினை, வினையடி வடிவில் இருக்கும். துணைவினை திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும். 40 துணைவினைகள் உள்ளன.
- அவற்றுள் பெரும்பாலானவை முதல்வினையாகவும் செயல்படுகின்றன.
- பார், இரு, வை, கொள், போ, வா, முடி, விடு, தள்ளு, போடு, கொடு, காட்டு முதலானவை இருவகை வினைகளாகவும் செயல்படுகின்றன.
துணைவினைகள் இன் பண்பு
- இவை பேசுவோரின் மனதை செயலின் தன்மை ஆகியவற்றை புலப்படுத்தும்
- முதல் வினையைச் சார்ந்து அதன் வினைபொருண்மைக்கு மெருகூட்டுகின்றன
- பேச்சு மொழியிலேயே அதிகம் பயன்படுகிறது
- தற்காலத் தமிழில் ஆம், ஆயிற்று, இடு, ஒழி, காட்டு, கூடும், கூடாது, கொடு, கொண்டிரு, கொள், செய், தள்ளு, தா, தொலை, படு, பார், பொறு, போ, வை, வந்து, விடு, வேண்டாம், முடியும், முடியாது, இயலும், இயலாது, வேண்டும், உள் போன்ற பல சொற்கள் துணைவினைகளாக வழங்குகின்றன.
- தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்குப் பின்பே இடம்பெறும். (எ.கா.) கீழே விழப் பார்த்தான். இத்தொடரில் விழு (விழ) என்பது முதல்வினை; பார்த்தான் என்பது துணைவினை.
- அணில் ஓடிக் களைக்கிறது
சன்னல்களுக்கிடையே
அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து அதன்மீது உதிர்த்துக்கொண்டிருப்பது தெரியாமல். -யூமா வாசுகி
மொழி பெயர்ப்பு
- Every flower is a soul blossoming in nature – Gerard De Nerva - ஒவ்வொரு பூவும் இயற்கையில் மலரும் ஆன்மா - ஜெரார்ட் டி நெர்வால்
- Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek - சூரிய அஸ்தமனம் இன்னும் எனக்குப் பிடித்தவண்ணம், வானவில் இரண்டாவது - மேட்டி ஸ்டெபனெக்
- An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau - அதிகாலை நடைப்பயணம் முழு நாளுக்கும் ஒரு ஆசீர்வாதம் - ஹென்றி டேவிட் தோரோ
- Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson - வாழ்வது மட்டும் போதாது... சூரிய ஒளி, சுதந்திரம் மற்றும் ஒரு சிறிய பூ வேண்டும் - ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்
- கல்லும் மலையும் குதித்து வந்தேன் – பெருங்காடும் செடியும் கடந்து வந்தேன் - கவிமணி.
கலைச்சொல் அறிவோம்
- குமிழிக் கல் - Conical Stone
- நீர் மேலாண்மை - Water Management
- பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology
- வெப்ப மண்டலம் - Tropical Zone
அறிவை விரிவு செய்
- அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
- தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்
- தண்ணீர் தேசம் – வைரமுத்து
- வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
- மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்
உற்பத்தி செய்யத் தேவைப்படும் தண்ணீர் அளவு
- ஒரு கிலோ ஆப்பிள்- 822 லிட்டர்
- ஒரு கிலோ சர்க்கரை- 1780 லிட்டர்
- ஒரு கிலோ அரிசி - 2500 லிட்டர்
- ஒரு கிலோ காப்பிக் கொட்டை -18,900 லிட்டர்