Type Here to Get Search Results !

EYAL-3-9TH-TAMIL-ULLATHTHIN-SEER-இயல் 3 தமிழ் 9ம் வகுப்பு உள்ளத்தின் சீர்

 

இயல் 3
தமிழ் 9ம் வகுப்பு
உள்ளத்தின் சீர்


Table of contents(toc)

ஏறு தழுவுதல்

·   முல்லை நில ஆயர்கள் பங்கேற்கும்  ஏறுதழுவல் பற்றிக் கலித்தொகை பாடல் 

·   எழுந்தது துகள் 

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு 

கலங்கினர் பலர் -முல்லைக்கலி

·   நீறு எடுப்பவை நிலம்  சாடுபவை 

மாறுஏற்றுச் சிலைப்பவை மண்டி பாய்பவையாய் 

துளங்கு இமிழ் நல்ஏற்றினம் பல களம்புகும்

மள்ளர் வனப்பு ஒத்தன -கலித்தொகை

·   காளைகள் போர் வீரருக்கு இணையானவையெனக் குறிப்பிடப்படுகிறது

·   சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள், புறப்பொருள் வெண்பா மாலை எனும் இலக்கண நூலிலும்  ஏறுகோள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

·   ஏறு தழுவல் எனப் பள்ளு இலக்கியத்திலும் எருது கட்டி எனும் மாடு  தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது

·   ஏறுதழுவல் விளையாட்டில் இறந்தவர் பற்றிய நடுகல் சேலம் மாவட்டம்- எருது  பொருதார் கல் கல்வெட்டுக் குறிப்பு

·   கோவுரிச் சங்கன் கருமந்துறையில் எருது விளையாடிப் பட்டான் பெரிய பயலு நட்டகல்லு. பொருள் கருமந்துறை என்னும் ஊரில் இருக்கும் எருதோடு போராடி இறந்துபட்டவன் ஆகிய சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பையன் எடுத்த நடுகல்

·   மூன்று எருதுகளை பலர் விரட்டும் ஓவியம் நீலகிரி -கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர்

·   திமில் காளையை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை உசிலம்பட்டி அருகில் கல்லூத்து மேட்டுப்பட்டி 

·   தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே  சித்திரங்கல் புடவு  திமில் காளை ஓவியம் உள்ளது

·   எகிப்து பெனி ஹசன் சித்திரங்களிலும் கிரீட் தீவில் கினோஸஸ் அரண்மனை சித்திரங்களிலும்  காளை போர் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளன

·   சிந்து சமவெளி அகழாய்வில்  மாடு தழுவும் கல் முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

·   தமிழர்களின் தொல்லியல் அடையாளமாக ஏறுதழுவலை குறிக்கலாமென ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்

·   முல்லை நில மக்களின் அடையாளம் மருத நில மக்களின் தொழில் உற்பத்தி பாலை நிலத்து போக்குவரத்து ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது ஏறுதழுவல்

·   ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளைகள் எருதுகள், ஏர் மாடுகள், ஏறுகள் என அழைத்தனர்

ஏறுதழுவல் வேறு பெயர்கள்

·   மாடு பிடித்தல், மாடு அணைத்தல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டிகாளை விரட்டு, ஏறுவிடுதல், ஜல்லிக்கட்டு.

·   சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையத்தைக் குறிக்கும்

·   காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின்.


மணிமேகலை

சொல்லும் பொருளும்


·      குழீஇ      -ஒன்றுகூடி 

·      தோம்       -குற்றம் 

·      பொலம்   -பொன்

·      தாமம்      -மாலை 

·      கோட்டி     -மன்றம்

·      வேதிகை -திண்ணை 

·      வசி          - மழை 

·      தூணம்   -தூண்

·      கலாம்     -போர் 

·      செற்றம்- சினம் 

·      பாடைமாக்கள் - பல மொழிபேசும் மக்கள்

·      விலோதம்           - துணியாலான கொடி,

·      துருத்தி   - ஆற்றிடைக்குறை .(ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு)

·      கதலிகைக் கொடி -சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது,

·      சமயக் கணக்கர் -சமயத் தத்துவவாதிகள்,

·      காழூன்று கொடி - கொம்புகளில் கட்டும் கொடி

ஐம்பெரும் குழுக்கள்

  1. அமைச்சர்
  2. சடங்கு செய்விப்போர் 
  3. படைத்தலைவர் 
  4. தூதர் 
  5. சாரணர் (ஒற்றர்)

எண்பேராயம்


  1. கரணத்தியலவர்
  2. கரும விதிகள்
  3. கனகச்சுற்றம் 
  4. கடைகாப்பாளர்
  5. நகரமாந்தர்
  6. படைத்தலைவர் 
  7. யானை வீரர் 
  8. இவுளி மறவர்

இலக்கணக்குறிப்பு

·   தோரண வீதியும், தோமறு கோட்டியும்       =எண்ணும்மைகள்

·   காய்க் குலைக் கமுகு, பூக்கொடி வல்லிமுத்துத்தாமம் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

·   மாற்றுமின் பரப்புமின்         = ஏவல் வினைமுற்று,

·   உறுபொருள்                           =உரிச்சொல் தொடர்

·   தாழ்பூந்துறை                       =வினைத்தொகை 

·   பாங்கறிந்து                            =இரண்டாம் வேற்றுமைத்தொகை  

·   நன்பொருள், தண்மணல், நல்லுரை      = பண்புத்தொகை

பொதுவான குறிப்புகள்

·   இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை

·   மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று

·   மணிமேகலை துறவு எனவும்  அழைக்கப்படுகிறது

·   இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம், தமிழ் காப்பியம்.

·   பௌத்த சமயச் சார்புடையது கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி

·   முப்பது காதைகள் உடையது. மணிமேகலை  முதல் காதை விழாவறை காதை.

·   மணிமேகலை ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

·   இயற்பெயர் சாத்தன்; திருச்சியை அடுத்துள்ள சீத்தலையில் பிறந்து.

·   மதுரையில் வாழ்ந்தவர்;கூல வணிகம் செய்தவர் கூலம் = தானியம்.

·   மதுரை கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் -என அழைக்கப்படுகிறார்

·   இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர்கள்.

·   தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரை பாராட்டியுள்ளார்.

·   அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் 

மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்- மணிமேகலை.

அகழாய்வுகள்

·   மதுரை நகர் அருகே கீழடி (சிவகங்கை) -இல்  நடந்த அகழாய்வில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானைகள், ஓடுகள், கருவிகள், முதலானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

·   இவற்றுள் தொன்மையானவை. சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை

·   ராபர்ட் புரூஸ்புட் - 1863 ல் சென்னை பல்லாவரத்தில்   செம்மண் மேட்டுப் பகுதியில் எலும்பையும் கற்கருவிகளையும் கண்டுபிடித்தார். இந்தியாவில்  கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகளில் இதுவே பழமையானது 

·   ரோமானியர்களின் பழங்கால காசுகளைக் கோவையில் கண்டுபிடிக்கப்பட்டது

·   அரிக்கமேடு அகழாய்வு மூலம்  ரோமானிய மண்பாண்டங்கள் கிடைத்தன; இதனால் வணிக தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.

·   ஆதிச்ச நல்லூரில்  1914 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.

·   பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே நன்னூல் பவணந்தி முனிவர்

 

பட்டிமண்டபம்

·   பட்டிமண்டபம் என்பது இலக்கிய வழக்கு, பட்டிமன்றம் என்பது பேச்சு வழக்கு

பட்டிமண்டபம் எனச் சொல் வரும் பகுதிகள்

·   மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் -என சிலப்பதிகாரம்

·   பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின் - மணிமேகலை

·   பட்டி மண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே திருவாசகம்

·   பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம் கம்பராமாயணம் பாலகாண்டம் நகரப்படலம்

வல்லினம் மிகும் இடங்கள்

·   , , , ப - நான்கும் மொழிக்கு முதலில் வரும் நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துக்கள் தோன்றி புணரும் இதை வல்லினம் மிகுதல் என்பர்.

·   தோன்றல், திரிதல், கெடுதல்- விகாரப் புணர்ச்சி

·   வல்லினம் மிகுந்து வருவதால் தோன்றல் விகாரம் புணர்ச்சியின்பாற்பட்டது.

·   சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தை தவிர்க்கவும் பேச்சின் இயல்பைப் பேணவும் இனிய  ஓசைக்காகவும் வல்லின எழுத்துக்களின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது


1.

 

ச்சட்டை

இந்தக் காலம்

த்திசை ?

எந்தப்பணம்?

, என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும் , என்னும் வினா வெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.

2.

கதவைத்திற

தகவல்களைத் திரட்டு

காட்சியைப் பார்

என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு

வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

3.

முதியவருக்குக் கொடு

மெட்டுக்குப் பாட்டு

ஊருக்குச் செல்

கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு

வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

4.

எனக் கேட்டார்

வருவதாகக் கூறு

என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின்

வல்லினம் மிகும்.

 

மேலும் சில வல்லினம் மிகும் இடங்களை அறிந்துகொள்வோம்

அதற்குச் சொன்னேன்

இதற்குக் கொடு

எதற்குக் கேட்கிறாய்?

அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின்

வல்லினம் மிகும்

இனிக் காண்போம்

தனிச் சிறப்பு

இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்.

மிகப் பெரியவர்

மிக என்னும் சொல்லின் பின் வல்லினம் மிகும்.

எட்டுத் தொகை

பத்துப் பாட்டு

எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின்

வல்லினம் மிகும்.

தீப் பிடித்தது

பூப் பந்தல்

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.

கூவாக் குயில்

ஓடாக் குதிரை

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

புலித் தோல்.

ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்

கேட்டுக் கொண்டான்

விற்றுச் சென்றான்

வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும்.

ஆடச் சொன்னார்

ஓடிப் போனார்

அகர, இகர ஈற்று வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்

கிழக்குப் பகுதி

வடக்குப் பக்கம்

திசைப் பெயர்களின் பின் வலிமிகும்

மல்லிகைப் பூ

சித்திரைத் திங்கள்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

தாமரை ப் பாதம்

உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.

சாலப் பேசினார்

தவச் சிறிது

சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின்

வல்லினம் மிகும்.

நிலாச் சோறு

கனாக் கண்டேன்

தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும்.

வாழ்க்கைப் படகு

உலகப் பந்து

சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.

 

மொழி பெயர்ப்பு 

  1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

ஒரு நாட்டின் கலாச்சாரம் அதன் மக்களின் இதயங்களிலும் உள்ளத்திலும் உள்ளது - மகாத்மா காந்தி

2.      The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

மக்களின் கலை அவர்களின் மனதிற்கு ஒரு உண்மையான கண்ணாடி - ஜவஹர்லால் நேரு

3.      The biggest problem is the lack of love and charity – Mother Teresa

அன்பும், தொண்டும் இல்லாததே மிகப்பெரிய பிரச்சனை - அன்னை தெரசா

4.      You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam 

உங்கள் கனவுகள் நனவாகும் முன் கனவு காண வேண்டும் – ஏ பி ஜே அப்துல் கலாம்

5.      Winners don’t do different things; they do things differently – Shiv Khera

வெற்றியாளர்கள் வெவ்வேறு விஷயங்களைச் செய்வதில்லை; அவர்கள் விஷயங்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் - ஷிவ் கேரா

 

·   கரூர் அமராவதி ஆற்று துறையில் காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கி.மு முதல் நூற்றாண்டு சேர்ந்த  சேரர் கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

அறிவை விரிவு செய்

·   தமிழர் நாகரிகமும் பண்பாடும்        - அ. தட்சிணாமூர்த்தி

·   தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - மா. இராசமாணிக்கனார்

·   தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க. ரத்னம்

·   தொல்லியல் நோக்கில் சங்க காலம் - கா. ராஜன்

·   தமிழர் சால்பு                                       - சு. வித்யானந்தன் 

திருக்குறள்

·   அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை  

இகழ்வார்  பொறுத்தல் தலை                  -உவமையணி

·   செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 

செல்வத்துள் எல்லாம் தலை                    -சொற்பொருள் பின்வருநிலையணி

·   குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் 

மிகைநாடி மிக்க கொளல்                       -சொற்பொருள் பின்வருநிலையணி

·   பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 

கருமமே கட்டளைக் கல்                           -ஏகதேச உருவக அணி

·   சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்   

கலத்துநீர் பெய்திரீஇ யற்று                     -உவமை அணி

திருக்குறளின் சிறப்புப் பெயர்கள் 

·   முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, முதுமொழி, பொருளுரை, உத்தரவேதம், தெய்வநூல்.

பொதுவான குறிப்புகள்

·   பழைய உரையாசிரியர்கள் : தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்

·   சிறந்த உரை பரிமேலழகர்

·   பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று

·   திருக்குறளை போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை

·   தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல் திருக்குறள்

திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்

·   நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி,  செந்நாப்போதார், பெருநாவலர்.

திருக்குறளின் சிறப்புகள் 

·   திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

·   திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது.

·   திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

·   திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் (1812)

·   திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

·   திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ள து.

·   ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

·   திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர்- ஜி.யு. போப்

·   இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கலைச்சொல் அறிவோம்


·   அகழாய்வு       - Excavation

·   கல்வெட்டியல் - Epigraphy

·   நடுகல் - Hero Stone

·   பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol

·   புடைப்புச் சிற்பம் - Embossed sculpture

·   பொறிப்பு         - Inscription

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.