இயல் 4
தமிழ் 9ம் வகுப்பு
எட்டுத்திக்கும்
சென்றிடுவீர்
தமிழ் 9ம் வகுப்பு
இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
ஒளிப்படி இயந்திரம் (Photo copier)- ஜெராக்ஸ் (Xerox)
· செஸ்டர் கார்ல்சன் (Chester Carlson)
· நியூயார்க் காப்புரிமை சட்ட வல்லுனர் + பகுதி நேர ஆய்வாளர்
· இவர் 1938 கந்தகம் தடவிய
துத்தநாக தட்டை கொண்டு உலகின் முதல் ஒளிப்படி எடுத்தார்
· கிரேக்க மொழி பெயர் சீரோகிராஃபி (Xerography) -உலர் எழுத்து முறை ( dry writing) எனப் பொருள். 1959 இயந்திரம் அறிமுகம்
தொலை
நகல் இயந்திரம் (Fax)
· அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain)
· இவர் 1846 ஸ்காட்லாந்து
கண்டுபிடிப்புக் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுதலில் காப்புரிமை
பெற்றார்
· இத்தாலி நாட்டு இயற்பியலாளர் ஜியோவான்னி காசில்லி (Giovanni Caselli) பான்டெ லிகிராஃப் (Pantelegraph)என்ற தொலை நகல்
கருவி உருவாக்கினார்.
· முதலில் 1865 பாரிஸ் நகரின் லியான்
இருந்து சேவை தொடக்கம்.
· அமெரிக்காவின் ஹாங்க் மாக்னஸ்கி
(Hank Magnuski) என்பவர் 1985
கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக்
கண்டுபிடித்தார். காமா ஃபேக்ஸ்
என்று பெயரிட்டார்
தானியங்கு பண இயந்திரம் (Automated Teller Machine)
· ஜான் ஷெப்பர்டு பாரன் இங்கிலாந்து
பொறியாளர்
· பார்க்லேஸ் வங்கிக்காக லண்டனில் 27.06.1967 தானியங்கி பணம் எந்திரம்
நிறுவப்பட்டது
· சாக்லேட் வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து உருவாக்கப்பட்டது.
· அட்டை தேய்ப்பி எந்திரம் (Swiping Machine), கட்டணம் செலுத்தும் கருவி (payment terminal), விற்பனைக்
கருவி (point of sale terminal), சில்லு (chip),ஆளறி சோதனைக் கருவி (Biometric Device)
· ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு (Adrian Ashfield) என்பவர 1962இல் கடவுச்
சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றார் தொடக்கத்தில்
பெட்ரோல் தருவதற்கு மட்டுமே இப்பொழுது அனைத்து இருக்கும் காப்புரிமை பொருந்தும்.
இணைய வணிகம்
· மைக்கேல் ஆல்ட்ரிச் (Michael Aldrich)
· இங்கிலாந்து 1979 இல் இணைய வணிகம்
கண்டுபிடிப்பு
· அமெரிக்காவில் 1989 ல் இணையவழி மளிகைக்கடை
தொடங்கப்பட்டது. 1991 - இணையம் பொதுமக்கள் பயன்பாடு.
· 1990 டிம் பெர்னெர்ஸ் லீ
- வையக விரிவு வலை வழங்கியை உருவாக்கினார் (www.- server)
· இணையத்தில் இது இல்லையெனில் உலகத்தில் அது நடக்கவில்லை எனப்பொருள்- லீ
· இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணைய வழி பதிவு IRCTC - 2002 சராசரியாக 29
பயணச் சீட்டுக்கள் ஒரு நாளைக்கு 1.4.2015 சராசரியாக
13 லட்சம் பயண சீட்டுக்கு ஒரு நாளிற்கு. ஒரு நிமிடத்திற்கு 1500
பேர்
தேசிய திறனறித் தேர்வு
· தேசிய திறனறித் தேர்வு (National Talent Search Exam),
· தேசிய திறனறித் தேர்வு மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு (National Means-cum -Merit
Scholarship Scheme Exam)
· ஊரக திறனறித் தேர்வுத் தேர்வு (TRUST–Tamilnadu Rural Students Talent Search Examination)
ஓ, என் சமகாலத் தோழர்களே
· கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை -வைரமுத்து
இலக்கணக்குறிப்பு
· பண்பும் அன்பும், இனமும் மொழியும் - எண்ணும்மைகள்.
· சொன்னோர் - வினையாலணையும் பெயர்.
பகுபத உறுப்பிலக்கணம்
· பொருத்துங்கள் - பொருத்து + உம் + கள்
பொருத்து - பகுதி
உம் - முன்னிலைப் பன்மை விகுதி
கள் - விகுதி மேல் விகுதி
கவிஞர் வைரமுத்து
· பிறப்பு : தேனி மாவட்டம் மெட்டூர்
· இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது
· சாகித்திய அகாடமி விருது கள்ளிக்காட்டு இதிகாசம் 2003
· இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது 7 முறை பெற்றுள்ளார்
· மாநில அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார்
இலக்கியங்களில் அறிவியல்
· புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி - புறநானூறு
· அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திற
லான்,
பெருந் தச்சனைக் கூவி,"ஓர்
எந்திர வூர்திஇ யற்றுமின்" -சீவக சிந்தாமணி
உயிர் வகை
· ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
இலக்கண
குறிப்பு
· உணர்ந்தோர் -வினையாலணையும் பெயர்
பொதுவான குறிப்புகள்
· ஓரறிவு -உற்றறிதல் (தொடுதல்) -புல்,
மரம்
· ஈரறிவு -உற்றறிதல், சுவைத்தல்- சிப்பி நத்தை
· மூவறிவு -உற்றறிதல், சுவைத்தல்,
நுகர்தல் -கரையான், எறும்பு
· நான்கறிவு -உற்றறிதல், நுகர்தல்,
காணல் -நண்டு, தும்பி
· ஐந்தறிவு - உற்றறிதல், சுவைத்தல்,
நுகர்தல், காணல், கேட்டல்
-பறவை, விலங்கு
· ஆறறிவு -உற்றது, சுவைத்தல்,
நுகர்தல், காணல், கேட்டல்,
பகுத்தறிவு (மனம்) -மனிதன்
· முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் இயற்றியவர் தொல்காப்பியர்
· எழுத்து, சொல், பொருள்
என மூன்று அதிகாரங்களும் 27 இயல்களும் கொண்டது.
· அகம் புறம் வாழ்வியலைப் பற்றியும் இலக்கியக் கோட்பாடு பற்றிய நூல்
விளக்குகிறது.
· பிறப்பியல் எழுத்து பிறக்கும் இடங்களை உடல் கூறு அடிப்படையில் விளக்கியுள்ளது
இதன் அறிவியல் சிறப்பு.
விண்ணையும் சாடுவோம்
சிவன்
· தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் சிவன் இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர்
· இப்பதவியேற்கும் முதல் தமிழர்
· 2015 விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின்
இயக்குநர்
· பிறந்த ஊர் நாகர்கோவில் சரக்கவிளை
· அப்பா கைலாசவடிவு
· படிப்பு வல்லங்குமாரவிளை அரசுப்பள்ளி
· இளங்கலை படிப்புக் கணினி அறிவியல் எம் ஐ
டி
· வானூர்திப் பொறியியல் மற்றும் எம் இ படித்து
முடித்தார்
· முதல் பணி விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் பொறியாளர்- 1982
· 1983 முதன்முதலாக பிஎஸ்எல்வி திட்டத்தைத்
தொடங்க அரசாங்கம் இசைந்தது
விக்ரம்
சாராபாய்
· இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
· ஆரியபட்டா என்ற முதல் செயற்கைகோள் ஏவ
காரணமானவர்
· செயற்கைக்கோள் உதவியுடன் 24000 கிராமங்களில் உள்ள மக்களுக்குக் கல்வியை எடுத்துச்
செல்ல உதவினார்
· திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையம், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் என
அழைக்கப்படுகிறது
· அங்கே வானூர்தியியல் (Aeronautics), வான்
பயண மின்னணுவியல் (Avionics), கூட்டமை பொருள்கள் (Composites),
கணினி தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள
உதவும் இடங்கள்
· இவரின் முயற்சியால் இஸ்ரோ தொடங்கப்பட்டது
· செயற்கை கோள் பற்றிய விவரம் கொண்ட செயலி - சித்தாரா (SITARA - Software for Integrated Trajectory
Analysis with Real time Application) உருவாக்கியவர் – சிவன்
அப்துல்
கலாம்
· இந்தியாவின் 11 ஆவது குடியரசுத்
தலைவர். ராமேஸ்வரத்தில் பிறந்தவர்
· இந்திய ஏவுகணை நாயகன் எனப் போற்றப்படுகிறார்
· இந்திய அரசின் பாரத ரத்னா விருதுப் பெற்றவர்
வளர்மதி
· அரியலூரில் பிறந்தவர். 2015 இல் தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம்
விருதை முதன் முதலில் பெற்றவர். 1984 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றுகிறார்
· உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) 2012ல் திட்டத்தின் இயக்குனர்.
· திட்ட இயக்குனராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்.
· ’நேவிக்’ (NAVIC)கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட செயலி.
· ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ஏவுகணை 2.25 டன்களிலிருந்து
3.25 டன்கள் சுமக்கும் திறன் கொண்டதாக
மாற்றப்படும்.
· ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ஏவுகணையின்
சுமக்கும் திறன் 3 டன்களிலிருந்து 6 டன்களாக அதிகரிக்கப்படும்.
· ஆய்வுப் பயண ஊர்தி இறங்குதலை (exploration vehicle lander).
அருணன் சுப்பையா
· இஸ்ரோவின் அறிவியலாளர் திட்ட இயக்குனர்
· பிறப்பு :திருநெல்வேலி ஏர்வாடி அருகில் கோதைசேரி
· படிப்பு: இயந்திரப் பொறியியல்
· பணி :1984 திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய்
விண்வெளி மையம்
· தற்போது பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்
· 2013 மங்கள்யான் செயற்கைக்கோள் இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனர்.
மயில்சாமி அண்ணாதுரை
· பிறப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி
கோதவாடி
· ஐந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்
· 682 இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணி
· ஆய்வுக்கலம் சந்திரயான்-1 திட்டத்தின்
திட்ட இயக்குனர்
· சந்திரயான் 2 திட்டத்திலும்
பணிபுரிகிறார்
· சர். சி .வி. ராமன் நினைவு அறிவியல் விருது
பெற்றுள்ளார் .
· கையருகே நிலா எனும் நூல் எழுதியுள்ளார்.
வல்லினம் மிகா இடங்கள்
அது செய், இது காண் |
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம்
மிகாது. |
எது கண்டாய்?,எவை தவறுகள்? |
இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது |
குதிரை தாண்டியது. கிளி பேசும். |
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. |
அண்ணனோடு போ. எனது சட்டை. |
மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. |
தந்தையே பாருங்கள். மகளே தா. |
விளித் தொடர்களில் வல்லினம் மிகாது |
வந்த சிரிப்பு ,பார்த்த பையன் |
பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. |
நாடு கண்டான். கூடு கட்டு |
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது |
வரும்படி சொன்னார். பெறும்படி கூறினார். |
படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம்
மிகாது |
வாழ்க தமிழ் ,வருக தலைவா! |
வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம்
மிகாது. |
குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன் |
வினைத் தொகையில் வல்லினம் மிகாது. |
ஒரு புத்தகம், மூன்று கோடி |
எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது. |
தாய்தந்தை, இரவுபகல் |
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. |
அன்று சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப் போன்ற கவிஞர் யார்? |
அன்று, இன்று, என்று, ஆவது,
அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. |
அவ்வளவு பெரியது. அத்தனை சிறியது. அவ்வாறு பேசினான். அத்தகைய பாடங்கள். அப்போதைய பேச்சு. அப்படிப்பட்ட காட்சி. நேற்றைய சண்டை |
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின்
வல்லினம் மிகாது |
என்னோடு சேர். மரத்திலிருந்து பறி. குரங்கினது குட்டி. |
மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது. |
தமிழ் படி. (ஐ) கைதட்டு. (ஆல்). வீடு சென்றாள்.(கு) கரை பாய்ந்தான். (இருந்து) |
இரண்டாம். மூன்றாம், நான்காம், ஐந்தாம்.
வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது |
தலைவி கூற்று. தொண்டர் படை |
நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது |
உறு பொருள் நனிதின்றான். கடி காவல் |
சால, தவ, தட, குழ
என்னும் உரிச்சொற்களைத்: தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது. |
பார் பார் ,சல சல |
அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. |
கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள் பைகள், கைகள் |
கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது
வல்லினம் மிகாது.(மிகும் என்பர் சிலர்) ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது |
அறிவை விரிவு
செய்.
1.
அக்னிச் சிறகுகள் - அப்துல்
கலாம்
2. மின்மினி- ஆயிஷா நடராஜன்
3.
ஏன், எதற்கு, எப்படி? - சுஜாதா
· பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு என எரிக்கும் - பாரதிதாசன்
கலைச்சொல்
அறிவோம்
· ஏவு ஊர்தி - Launch Vehicle
· ஏவுகணை - Missile
· கடல்மைல் - Nautical Mile
· காணொலிக் கூட்டம் - Video Conference
· பதிவிறக்கம் - Download
· பயணியர் பெயர்ப் பதிவு - Passenger Name Record (PNR)
·
மின்னணுக் கருவிகள் - Electronic devices.