Type Here to Get Search Results !

இயல் 6 தமிழ் 9ம் வகுப்பு கலை பல வளர்த்தல் iyel-6-9th-tamil-kalai pala valarththal-

 

இயல் 6
தமிழ் 9ம் வகுப்பு
கலை பல வளர்த்தல்


Table of contents(toc)

 

·   ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து 

மாலைத்தாமம் வளையுடன் நாற்றி 

விருந்துப்பக்  கிடந்த அருந்தொழில் அரங்கம் -சிலப்பதிகாரம் புகார் காண்டம் அரங்கேற்றுக் காதை


சிற்பக்கலை

·   கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை

பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன - திவாகர நிகண்டு. 

·   மணிமேகலையிலும் இத்தகு குறிப்புகள் காணப்படுகின்றன.

·   முழு உருவத்துடன் அமைந்த சிற்பம் -முழு உருவச் சிற்பங்கள்.

·   முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைந்த சிற்பங்கள்- புடைப்புச் சிற்பங்கள்.

·   தெய்வ உருவங்கள்இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள், முழு வடிவ உருவங்கள் (பிரதிமை) என நான்கு நிலைகளைக் கொண்டு உலோகம் மற்றும் கற்சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன,

·   சிற்ப இலக்கணத்தில் தேர்ச்சிப் பெற்றவர் கற்கவிஞர்

பல்லவர் காலச் சிற்பங்கள்

·   பல்லவர் காலச்  சிற்பங்கள் சுதை மற்றும் கருங்கற்களால் ஆனது.

·   கோவில் தூண்கள்: யாளி, சிங்கம், தாமரை, மலர் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டது.

·   பல்லவர் காலச்  சிற்பக்கலைக்கு சான்று - மாமல்லபுரச் சிற்பங்கள்.

·   கடற்கரை பாறையில் காணப்படும் பஞ்சபாண்டவர் ரதங்களில் பறவை, விலங்குகள் ஆகியவை பல்லவர் கால சிற்பக் கலைக்குச் சான்று.

·   காஞ்சி கைலாசநாதர் கோவிலின் சுற்றுச் சுவர் முழுதும் சிற்பங்களின் கலைக்கூடம்

·   காஞ்சி வைகுண்டப்  பெருமாள் கோவில், மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை பல்லவர் கால சிற்பக்கலைக்கு சான்று.

·   பல்லவர் காலக் குடைவரைக் கோயில்களில் நுழைவாயிலின் இருபுறமும் காவலர்கள் நிற்பது போன்று  சிற்பங்கள் உள்ளன.

பாண்டியர் காலச்  சிற்பங்கள்.

·   பாண்டியர் காலக் குகைக் கோயில்களில் சிற்ப வேலைப்பாடுகளுக்குச் சான்று: திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்.

·   கோவில்பட்டி மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோயிலில் அமைந்துள்ள சிற்பம் பாண்டியர் கால சிற்பக் கலைக்குச் சான்று.

சோழர் காலச்  சிற்பங்கள்

·   தஞ்சைப் பெரிய கோவில்- முதலாம் ராஜராஜன்

·   கங்கை கொண்ட சோழபுரம்- முதலாம் ராஜேந்திர சோழன்

·   தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்- இரண்டாம் ராஜராஜன்

·   திரிபுவன வீரேஸ்வரம் கோவில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆகியவை சோழர் கால சிற்பக் கலைக்குச் சான்று

·   தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள வாயிற்காவலர் உருவங்கள்  14 அடி உயரம் கொண்டது

·   கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரே கல்லால் ஆன நவக்கிரகமும் சிங்கமுக கிணறு குறிப்பிடத்தக்கது

·   புதுக்கோட்டை நார்த்தாமலையில் நடன முத்திரையுடன் சிற்பங்கள் உள்ளன

·   புதுக்கோட்டை கொடும்பாளூரில் இரண்டாம் பராந்தக சோழன் கட்டிய மூவர் கோவில் சிற்பம் அழகானது.

·   திருச்சி சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோவில்

·   இறுதியாகத் திருவரங்க  கோவிலினுள் அமைக்கப்பட்ட  சிற்பங்கள் வெளிப்படுத்தும் முகபாவனை சோழர் காலச்  சிற்ப நுட்பத்திற்கு சான்றாகும்.

·   சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம்

·   தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

·   போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். இது தமிழரின் தொடக்க கால சிற்பக்கலைக்கு சான்று 

·   சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு சிலை வடித்த செய்தி இடம்பெற்றுள்ளது 

·   மாளிகைகளில் பல  சிற்பங்களில் சுண்ணாம்பு  கலவை இருந்ததை மணிமேகலை கூறுகிறது 

·   மாமல்லபுரம் அரசு சிற்பக் கல்லூரி, சுவாமிமலை, கும்பகோணம்மதுரை ஆகிய இடங்கள்  உலோக படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் 

·   சென்னை மற்றும் கும்பகோணத்தில் அரசு கவின் கலைக்  கல்லூரி சிற்பக்கலை பற்றிய செய்திகள் கொண்ட நூல் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் "சிற்ப செந்நூல்".

விஜயநகர மன்னர் காலச் சிற்பங்கள்.

·   கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் இவர்கள் காலத்தில் எழுப்பப்பட்டது

·   தெலுங்கு மற்றும் கன்னட சிற்பங்களின் தாக்கம் தமிழ் சிற்பங்களில் இவர்கள் காலத்தில் ஏற்பட்டது.

·   குதிரையின் உருவங்கள் அதிகம் இடம் பெற்றன. வீரர் அமர்ந்த நிலையில் குதிரை  முன் கால்களைத் தூக்கி நிற்பது போன்ற சிற்பங்கள் இவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது.

·   இசை கற்றூண்கள் இவர்கள் எழுப்பினர்.

நாயக்கர் கால சிற்பங்கள்

·   பல இடங்களில் ஆயிரம் கால் மண்டபம் அமைத்தனர்

·   மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேஸ்வரம் பெருங்கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில், திண்டுக்கல் தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில் , கோவை பேரூர் சிவன் கோவில் இவர்கள்  கால சிற்பத்திற்கு எடுத்துக்காட்டு.

·   மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில்  தூண் சிற்பங்கள் - கண்ணப்பர் 

·   குறவன் குறத்தி, அரிச்சந்திரன், சந்திரமதி (இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி) 

·   இரதிதேவி சிலை கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்.

பௌத்த சமண சிற்பங்கள்

·   பவுத்த சமயத்தவர் வழிபட்டது புத்தர்.

·   சமண சமயத்தினர் அருகக் கடவுளை வணங்கினர் மற்றும் 24 தீர்த்தங்கரர்களின்  உருவங்களை வழிபட்டனர்

·   சமண மதத்தின் சிற்ப சான்றுகள் விழுப்புரம் செஞ்சிக்கு  அருகில் திருநாதர் குன்று ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.

·   மதுரையில் சமணர் படுக்கை

·   பைஞ்சுதை (சிமெண்ட்)

 

இராவண காவியம் - புலவர் குழந்தை

சொல்லும் பொருளும்: 

மைவனம் – மலைநெல்

முருகியம்- குறிஞ்சிப்பறை

சிறை- இறகு

சாந்தம் -சந்தனம்

பூவை-நாகணவாய்ப் பறவை

பொலம்- அழகு

கல்-மலை

முருகு- தேன்மணம், அழகுவிசும்பு- வானம்

கடறு- காடு

பொலி- தானியக்குவியல்; உழை- ஒரு வகை மான்.

குருளை- குட்டி

இனைந்து- துன்புறுதல்

உயங்குதல்- வருந்துதல். படிக்குஉற- நிலத்தில் விழ

கோடு- கொம்பு;.

மதியம்-நிலவு.

மல்லல்- வளம்

செறு- வயல்;

கரிக்குருத்து- யானைத்தந்தம் 

போர்- வைக்கோற்போர் புரைதப- குற்றமின்றி

தும்பி- ஒருவகை வண்டு துவரை-பவளம் 

மரை- தாமரை மலர் 

பூஞ்சினை-பூக்களை உடைய கிளை;

முக்குழல்-கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;

வாய்வெரீஇ- சோர்வால் வாய் குழறுதல்

 

·   ராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி  புரட்சி பொறி  உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் -அறிஞர் அண்ணா

இலக்கண குறிப்பு

·   பைங்கிளி, கருமுகில், இன்னிளங்குருளை         =பண்புத்தொகை 

·   பூவையும் குயில்களும் முதிரையும் சாமையும் வரகும் = எண்ணும்மைகள் 

·   அதிர் குரல்                   = வினைத்தொகை 

·   மன்னிய                      =பெயரெச்சம்.

·   வெரீஇ                          =சொல்லிசை அளபெடை

·   கடிகமழ்                        =உரிச்சொல் தொடர் 

·   மலர்க்கண்ணி           =மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

·   எருத்துக்கோடு -          =ஆறாம் வேற்றுமைத்தொகை 

·   கரைபொரு                 =இரண்டாம் வேற்றுமைத்தொகை 

·   மரைமுகம்                   = உவமைத்தொகை 

கோர்வை/கோவை: 

·   கோ-என்பது வேர்ச் சொல் கோப்பு, கோவை, கோரை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பது சரி

·   எ கா :ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான் 

பொதுவானக் குறிப்புகள்

·   20ம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் ராவண காவியம்

·   தமிழகக்  காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம். போர்க்காண்டம் என 5 காண்டங்கள் உள்ளது

·   இது 3100 பாடல்கள் கொண்டது

·   ஆசிரியர் புலவர் குழந்தை

·   தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதினார் 

·   யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்கள் படைத்துள்ளார்.

·   இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட ராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்ட காவியம் ராவண காவியம் 

 நாச்சியார் திருமொழி -ஆண்டாள்

சொல்லும் பொருளும்

·   தீபம் – விளக்கு; சதிர் – நடனம்; தாமம் - மாலை,

இலக்கணக் குறிப்பு

·   முத்துடைத்தாமம் - இரண்டாம் வேற்றுமைத்தொகை

பொதுவானக் குறிப்புகள்

·   திருமாலை வழிபட்டவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்

·   அவர்களில் ஆண்டாள் மட்டுமே பெண்

·   பாமாலை மட்டுமல்லாமல் பூமாலையையும் சூட்டியதால் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி".

·   இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் 

·   ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு  நாலாயிர திவ்ய பிரபந்தம்

·   ஆண்டாள் பாடியவை: திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

·   நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்டது

 

செய்தி - தி. ஜானகிராமன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்

·   அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி- 1970

·   சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - 1979 -  தி. ஜானகிராமன்

·   முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - 1987 - ஆதவன்

·   அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத்  தொகுப்பு) - 1996அசோகமித்ரன்

·   மின்சாரப் பூ (சிறுகதைகள்) - 2008 -  பொன்னுசாமி

·   சூடிய பூச்சூடற்க (சிறுகதைகள்) - 2010 - நாஞ்சில் நாடன்

·   ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – 2016 - வண்ணதாசன்.

மற்ற குறிப்புகள்

·   தி. ஜானகிராமனின் ஜப்பான் பயண அனுபவங்கள் -உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். 

·   இது 1967 இல் நூலாக வெளியிடப்பட்டது. 

·   ரோம், செக்கோஸ்லோவியா பயண அனுபவங்கள் கருங்கடலும் கலைக்கடலும் 1974இல் நூலாக வெளியிடப்பட்டது.

·   தமது காவிரிக்கரை வழியான பயண அனுபவங்கள் நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. 

·   இவரது மற்றுமொரு பயண கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.

நூல் குறிப்புகள்  

·   தி.ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதை படைத்தவர்

·   பணி உயர்கல்வி ஆசிரியர், வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளர்.

·   மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி ஆகிய இதழ்களில் இவர் படைப்புகள் வெளிவந்தன.

·   "அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை என்ற கோட்பாட்டைக் கொண்டவர்

·   சிவப்பு  ரிக்சா  அதில் ஒரு தொகுதி செய்தி இசையின் உயர்வு மற்றும் பொருள் பற்றிக் காணமுடிகிறது.

தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை        

·   உ.வே.சாமிநாதர், தி. ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை ராமையாதாஸ், தஞ்சாவூர் கவிராயர்.

நாகசுரம்

·   இக்கருவி 600 ஆண்டுகளுக்கு முன் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்ட கருவி

·   இக்கருவி பற்றி  13 ம் நூற்றாண்டில் எழுதபட்ட சங்கீத இரத்னாகரம் என்ற நூலில்  குறிப்பிடப்படவில்லை.

·   இக்கருவி பற்றி  13 ம் நூற்றாண்டு வரையில் எந்தப் பதிவிலும் குறிப்பிடப்படவில்லை

·   நாகசுரம் கருவி ஆச்சா மரத்தால் செய்யப்படுகிறது.

·   நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. 

·   சீவாளி, நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.


புணர்ச்சி

·   புணர்ச்சி என்பது இரு சொற்களுக்கு இடையில் நிகழ்வது

·   இரண்டுக்கும் மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி வருமொழி- வருமொழி, நிலைமொழியாகி நிற்கும்

·   இரு சொற்கள் இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வது உண்டு மாற்றம் இல்லாமல் இணைவதும்  உண்டு.

·   புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து உயிர்முதல் மெய்ம்முதல் எனவும் பிரிக்கலாம்

புணர்மொழியின் இயல்பு

         நான்கு வகை

  1. கலை + அழகு = உயிரீறு
  2. மண் + குடம் =மெய்யீறு
  3. வாழை + இலை =உயிர்முதல்
  4. வாழை + மரம் =மெய்ம்முதல்

·   புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம் 

·   உயிர்முன் உயிர் =மணி (ண்+இ) + அடி = மணியடி

·   உயிர்முன் மெய் =பனி + காற்று = பனிக்காற்று

·   மெய்ம்முன் உயிர் =ஆல் + இலை = ஆலிலை

·   மெய்ம்முன் மெய் =மரம் + (க்+இ) கிளை = மரக் கிளை

இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்

·   புணர்ச்சியின்போது மாற்றமின்றி இணைவது இயல்பு புணர்ச்சி

·   வாழை + மரம்= வாழைமரம் ; செடி + கொடி = செடிகொடி

·   புணர்ச்சியின்போது ஏற்படும் மாற்றம் விகாரப் புணர்ச்சி ஆகும் 

·   இது தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று வகைப்படும்

·   கல்லூரி + சாலை = கல்லூரிச் சாலை (தோன்றல்)

·   பல் + பசை = பற்பசை (திரிதல்)

·   புறம் + நானூறு = புறநானூறு (கெடுதல்)

உயிரீற்றுப் புணர்ச்சி

உடம்படுமெய்

·   ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு ஒரு மெய் தோன்றும். இதனை உடம்படுமெய் என்று சொல்வர்

·   இ ஈ ஐவழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்

உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும். -(நன்.162)

·   நிலைமொழியின் ஈற்றில்,,என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள் நிற்கும். அவற்றின்முன், பன்னிரண்டு  உயிர்களையும் முதலாவதாக உடைய சொற்கள் சேரும். அந்நிலையில் யகரம் உடம்படுமெய்யாக வரும்.

·   மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு

·   , , தவிர, பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும்போது வருமொழியில் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் வகர மெய் தோன்றும். 

·   பல + உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர்

·   நிலைமொழி ஈறாக ஏகாரம் வந்து, வருமொழியில் 12 உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணர்கையில் யகரமோ வகரமோ தோன்றும்.

·   சே + அடி = சே + ய் + அடி = சேயடிசே + வ் + அடி = சேவடி.

குற்றியலுகரப் புணர்ச்சி

·   வட்டு + ஆடினான் = வட்(ட் + உ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான் 

·   நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள் வந்தால், நிலைமொழியில் உள்ள உகரம் கெடும். வருமொழியில் உள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.

·   குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரங்களுக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும்.

·   உறவு + அழகு = உற(வ் +உ) = உறவ் + அழகு = உறவழகு

·   தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும். 

·   இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

நாக்கு, வகுப்பு

வன்தொடர்க் குற்றியலுகரம்

 நெஞ்சு, இரும்பு 

மென்தொடர்க் குற்றியலுகரம் 

மார்பு, அமிழ்து 

இடைத்தொடர்க் குற்றியலுகரம் 

முதுகு, வரலாறு 

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் 

எஃகு, அஃது 

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் 

காது, பேசு 

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

மெய்ம்மயக்கம்

·   புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும்போது வருமொழியில் க, , , ப வந்தால் சில இடங்களில் மீண்டும் அதே எழுத்து தோன்றும் இதை வலிமிகுதல் என்பர் 

·   சில இடங்களில் மெல்லினம் மிகுதலும் உண்டு ங, , , ம எழுத்துக்கள் மிகும்

·   யகர ஈற்று சொற்கள் முன் மெல்லினம் மிகும்

மெய்+ மயக்கம் =மெய்ம்மயக்கம்; மெய்+ஞானம் =மெய்ஞ்ஞானம்

·   வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ய ர,ழ முன்னர் வல்லினம் மிகும் 

வேய் +குழல் =வேய்ங்குழல்; கூர்+சிறை = கூர்ஞ்சிறை

·   புளி என்னும் சுவை பெயர் முன்னர் வல்லினம் மட்டுமின்றி மெல்லினமே மிகும் 

புளி +சோறு = புளிஞ்சோறு; புளி+ கறி= புளிங்கறி

·   உயிரெழுத்து இறுதிகள் கொண்ட மரப் பெயர்களுக்கு முன் வல்லினம் மிகும்

மா + பழம் =மாம்பழம்விள+காய் =விளங்காய்

·   பூ எனும் பெயர் முன்னர் வரும்  வல்லினதோடு மெல்லினமும் மிகும் 

பூ +கொடி =பூங்கொடிபூ +சோலை= பூஞ்சோலை ; பூ +தொட்டி = பூந்தொட்டி


எத்தனை பெரிய வானம்

எண்ணிப்பார் உனையும் நீயே;-பாவேந்தர் பாரதிதாசன் (வான் தந்த பாடம் )

Translation

How vast is the sky!

Think you of yourself;-( Pavendar Bharathidasan (The Lesson the Sky Teaches)

-(translated by P. Parameswaran)

கலைச்சொல் அறிவோம்


·   குடைவரைக்கோவில் – Cave temple

·   கருவூலம் – Treasury 

·   மதிப்புறு முனைவர் – Honorary Doctorate

·   மெல்லிசை - Melody

    ·    புணர்ச்சி – Combination              

    ·    ஆவணக் குறும்படம் – Document short film


அறிவை விரிவுசெய்

·   நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி

·   திருக்குறள் கதைகள் - கிருபானந்த வாரியார்

·   கையா, உலகே ஒரு உயிர் – ஜேம்ஸ் லவ்லாக்– தமிழில்: சா . சுரேஷ்

 

திருக்குறள்

·   அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண் - ஏகதேச உருவக அணி

·   ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 

ஆழி எனப்படு வார் - ஏகதேச உருவக அணி

·   உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது 

எழுவாரை எல்லாம் பொறுத்து- ஏகதேச உருவக அணி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.