Type Here to Get Search Results !

இயல் 7-7ம்-வகுப்பு-நயத்தகு-நாகரிகம்- eyal-7-7th-tamil-nayathagu-nagarigam

இயல் 7 -  7ம் வகுப்பு

நயத்தகு நாகரிகம்

table of contents(toc)

விருந்தோம்பல்

  • மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
    பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்
    பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
    ஒன்றுறா முன்றிலோ இல்  - முன்றுறை அரையனார்

  • பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் பாடல்

சொல்லும் பொருளும்

•    மாரி        - மழை
•    வறந்திருந்த     - வறண்டிருந்த
•    புகாவாக     - உணவாக
•    மடமகள்     - இளமகள்
•    நல்கினாள்     - கொடுத்தாள்
•    முன்றில்     - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது

நூல் வெளி

  • பழமொழி ஒன்றுறா முன்றிலோ இல் என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்
  • பழமொழி நானூறு  - முன்றுறை அரையனார்
  • பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் -சமண சமயத்தைச் பற்றியது.
  • பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது 400 பாடல்களைக் கொண்டது.

வயலும் வாழ்வும்

  • கால்படவும் கதிருபூரா - ஏலேலங்கிடி ஏலேலோ
    கழலுதையா மணிமணியா - ஏலேலங்கிடி ஏலேலோ              - தொகுப்பாசிரியர் – கி.வா. ஜகந்நாதன்

சொல்லும் பொருளும்

  • குழி     - நில அளவைப்பெயர்
  • சீலை    - புடவை
  • சாண்    - நீட்டல் அளவைப்பெயர்
  • மடை     - வயலுக்கு நீர் வரும் வழி
  • மணி     - முற்றிய நெல்
  • கழலுதல் - உதிர்தல்
  • சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக்கொள்ளும் துணிச்சுருள்

நூல் வெளி

  • மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று
    ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை -(நாட்டுப்புறப்பாடல்)
  • மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்தார்.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

  • பாண்டியர்களின் தலைநகரமாக மதுரை விளங்கியது.
  • இரண்டாவது தலைநகரமாகத் திருநெல்வேலி விளங்கியது.
  • திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரும்,
  • தண்பொருநைப் புனல்நாடு என்று சேக்கிழாரும் திருநெல்வேலியைப் போற்றியுள்ளனர்.
  • முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில்காடு என்பது அதன் பொருளாகும்.
  • பொதியி லாயினும் இமய மாயினும்
    பதியெழு அறியாப் பழங்குடி -என்று இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்தார்.
  • வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
  • மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் எனக் குற்றாலவளம் பற்றித் திரிகூடஇராசப்பக்கவிராயர் (குற்றாலக் குறவஞ்சி).
  • ஆதிச்ச நல்லூர்  நிகழ்ந்த அகழ்வாய்வில் இறந்தவர்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இது முன்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தது இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.
  • திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும். இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன.
  • பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.
  • தாமிரபரணி -தண்பொருநை நதியென அழைக்கப்பட்டது.பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியன இதன் கிளை ஆறுகள்.
  • இராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழை பயிரிடப்படுகின்றது.
  • நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை முதலிடம் வகிக்கின்றது.
  • தாமிரபரணி கடலில் கலக்கும் இடம் கொற்கை (துறைமுகம்)
  • முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை -(நற்றிணை 23:6)
  • கொற்கையில் பெருந்துறை முத்து -(அகம் 27:9) என்று இலக்கியங்கள் கொற்கையின் முத்துபற்றிக் கூறுகின்றன.
  • திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
  • வேலியுறை செல்வர் தாமே -என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடி.
  • காவற்புரை தெரு- காவற்புரை என்றால் சிறைச்சாலை.
  • கூழைக்கடைத் தெரு- கூலம் -தானியம். கூலக்கடைத்தெரு என்பது மருவிக் கூழைக்கடைத் தெரு.
  • அக்கசாலை - பொன் அணிகலன் விற்கும் தெரு.
  • அகத்தியர் - பொதிகை மலையில் வாழ்ந்தார்
  • சங்கப் புலவரான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்தவர்கள்.
  • அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு. போப், கால்டுவெல், வீரமாமுனிவர்

ஊர் பெயர்கள்

  • பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை வரவேற்ற இடம் பாண்டியபுரம்
  • அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை வரவேற்ற இடம் திருமங்கை நகர்.
  • நாயக்க மன்னரின் தளவாய் - அரியநாதரின் வழித் தோன்றல் வீரராகவர்- பெயரில் வீரராகவபுரம்
  • அவரது துணைவியார் மீனாட்சி அம்மையார் பெயரில் மீனாட்சிபுரம்.

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

  • கடிகைமுத்து புலவர் - வெங்கடேசுர எட்டப்பராஜா பாடல்
  • சீவலப்பேரி - மூக்கூடல் பள்ளு
    • ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி –
      மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!
  • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்,  நெல்லையப்பர்  கோவிலின் காந்திமதித் தாயிடம்  தனக்கு சுவாமியிடம்  சிபாரிசு செய்யவேண்டும் என்று முரண்டுகிறார் .
  • பிள்ளைப்பெருமாள் -சீவைகுண்டத்துப் பெருமாள் பற்றி பாடியுள்ளார்.
  • நம்மாழ்வார் (ஆழ்வார்திருநகரி) (பழம்பெயர் திருக்குருகூர்) - 1000 பாடல் திருவாய்மொழி
  • கொற்கை முத்துபற்றி முத்தொள்ளாயிர ஆசிரியர் பாடல்.
  • சீதக்காதி- காயல்பட்டணம் வள்ளல்பற்றி நமசிவாயப் புலவர் பாடல்
    • பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்
      நாமாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக்
      கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச்
      சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே!
  • அருணகிரிநாதர் - திருச்செந்தூர் நந்தவனம் பற்றியப் பாடல்கள்
  • காவடிச்சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார் கழுகுமலை முருகன்.
  • கோமதித் தாய்ப் பற்றி அழகிய சொக்கநாதர்
    • வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்
      கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! -எனப் பாடியுள்ளார்
  • கருவைநல்லூர் -கரிவலம் வந்த நல்லூர் பற்றி பல புலவர் பாடியுள்ளனர். திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி.(அதிகம் பக்தி பாடல்கள்)
  • திருஞான சம்பந்தர் -குற்றாலம் பற்றி 'நுண் துளி தூங்கும் குற்றாலம்',
  • மாணிக்கவாசகர் - குற்றாலம் பற்றி
    • உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
    • கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
      குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே
      கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!

டி.கே.சி-(டி.கே. சிதம்பரநாதர்)

  • வழக்கறிஞர் தொழில் செய்தவர்; தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்
  • சிறப்புப் பெயர் -இரசிகமணி
  • இவர் வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.
  • இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் புகழப்படுகிறார்.
  • இவரது நூல்களில் ஒன்று - இதய ஒலி .

அணி இலக்கணம்

அணி

  • அணி - அழகு எனப் பொருள்.
  • ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்

உவமையணி

  • ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். போல என்பது உவம உருபு
    எ.கா : மயில்போல ஆடினாள்.
  • ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.
  • போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகள்.

எடுத்துக்காட்டு உவமை அணி

  • தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்து ஊறும் அறிவ
  • மணற்கேணி என்பது உவமை. மாந்தர்க்குக்  கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம்.
  • இடையில் ‘அதுபோல்’ உவம உருபு மறைந்து வந்துள்ளது.
  • இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

இல்பொருள் உவமையணி

  • காளை கொம்பு முளைத்த குதிரைபோலப் பாய்ந்து வந்தது.
  • ‘கொம்பு முளைத்த குதிரைபோல’ என்னும் உவமை வந்துள்ளன.
  • கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்

கலைச்சொல் அறிவோம்.

  • நாகரிகம் - Civilization         
  • வேளாண்மை - Agriculture
  • நாட்டுப்புறவியல் - Folklore         
  • கவிஞர் - Poet
  • அறுவடை - Harvest             
  • நெற்பயிர் - Paddy

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.