Type Here to Get Search Results !

eyal-8-7th-tamil-oppuravu-olugu-இயல் 8- 7ம் வகுப்பு ஒப்புரவு ஒழுகு

இயல் 8- 7ம் வகுப்பு 

table of contents(toc)

ஒப்புரவு ஒழுகு

புதுமை விளக்கு

  • வையம் தகளியா வார்கடலே நெய்யாக
    வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
    சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
    இடர்ஆழி நீங்குகவே என்று       - பொய்கையாழ்வார்.

சொல்லும் பொருளும்

  • வையம்     – உலகம் 
  • வெய்ய     – வெப்பக்கதிர் வீசும் 
  • சுடர்ஆழியான் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால் 
  • இடர்ஆழி     – துன்பக்கடல்
  • சொல்மாலை     - பாமாலை.

நூல் வெளி

  • பொய்கையாழ்வார் காஞ்சிபுரம் அருகில் திருவெஃகாவில்  பிறந்தவர். 
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். 
  • அதன் முதல் பாடல் 'வையம் தகளியா ' ஆகும். 
  • அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி
    ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
    ஞானத்தமிழ் புரிந்த நான்         - பூதத்தாழ்வார்

சொல்லும் பொருளும்

  • தகளி     – அகல்விளக்கு 
  • ஞானம் – அறிவு 
  • நாரணன் - திருமால்

நூல் வெளி

  • பூதத்தாழ்வார் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பிறந்தவர். 
  • இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். 
  • இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல் பாடல் அன்பே தகளியா . 
  • ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் – முடிவு, ஆதி – முதல்).
  • இவ்வாறான பாடல்களால்  அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.
  • திருமாலைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும். 
  • இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.
  • முதலாழ்வார்கள்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் 


அறம் என்னும் கதிர்

  • இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
    வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
    அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
    பைங்கூழ் சிறுகாலைச் செய்      – முனைப்பாடியார்

சொல்லும் பொருளும்

  • வித்து     - விதை 
  • களை     - வேண்டாத செடி
  • ஈன     - பெற 
  • பைங்கூழ் - பசுமையான பயிர்
  • நிலன்     - நிலம் 
  • வன்சொல் - கடுஞ்சொல்.

முனைப்பாடியார்

  • ஊர்-திருமுனைப்பாடி 
  • சமயம்-சமணப்புலவர். 
  • இவரது காலம் 13 ம்  நூற்றாண்டு. 
  • இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. 
  • அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. 

 3. ஒப்புரவு நெறி

  • ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடைமை நெறியைத் திருவள்ளுவர் கூறுகிறார்
  • வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் என அப்பர் கூறினார். காந்தியடிகள் வழிமொழிந்தார். 
  • பாரதிதாசனும் உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்றார். 
  • செல்வத்துப் பயன் ஒப்புரவு. 
  • வறுமை =பிணி, செல்வம்= மருந்து எனக் கூறுவது தமிழ் மரபு
  • செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே -என்கிறது புறநானூறு
  • ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்
  • பேரறி வாளன் திரு. (குறள். 215)
  • உலகினர்க்கு உதவி செய்பவனின் செல்வம் ஊருணியில் உள்ள நீர் போல் பயன்படும்.
  • பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின். (குறள். 216)
  • நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது

குன்றக்குடி அடிகளார்

  • மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணி கருதி தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
  • குன்றக்குடி திருமடத்தின் தலைவராக இருந்தார். 
  • திருக்குறள் நெறியைப் பரப்புவதைக் கடமையாகக் கொண்டவர். 
  • படைப்புகள்: நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் 
  • இதழ்கள்:அருளோசை, அறிக அறிவியல் 

4. உண்மை ஒளி 

  • ஜென் =தியானம் செய் எனப் பொருள் (ஜப்பானிய மொழியில்).
  • புத்த மதத் துறவியரில் ஒரு பிரிவு- ஜென். 
  • சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்தார்கள் .

5. அணி இலக்கணம்

உருவக அணி

  • உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே எனத் தோன்றும் படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் (உவமேயம்) முன்னும் உவமை பின்னுமாக அமையும்
  • 'தேன் போன்ற தமிழ்’ என்பது உவமை. தமிழாகிய தேன் என்னும் பொருளில் ‘தமிழ்த்தேன்’ என்பது உருவகம் .
  • வையம் தகளியா வார்கடலே நெய்யாக
    வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
    சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
    இடர்ஆழி நீங்குகவே -என்று இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.

ஏகதேச உருவக அணி

  • அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.
  • அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. 
  • இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகதேசம் – ஒரு பகுதி)
  • பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்.
  • வள்ளுவர் மக்களின் (கருமம்)செயல்களைப் பொன் உரைகல்லாக உருவகம் செய்து , மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. 
  • எனவே இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்.


வினாச்சொற்கள். 

  • ‘எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை’ போன்றன வினாச்சொற்கள் ஆகும்.

கலைச்சொல் அறிவோம்.

  • குறிக்கோள் - Objective             பொதுவுடைமை - Communism 
  • வறுமை - Poverty                     செல்வம் - Wealth 
  • கடமை - Responsibility             ஒப்புரவுநெறி - Reciprocity 
  • லட்சியம் - Ambition                 அயலவர் - Neighbour 
  • நற்பண்பு - Courtesy

6.திருக்குறள்

  • வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.*

அணி : உவமை அணி



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.