இயல் 2 -இயற்கை
சிலப்பதிகாரம்
⚔ திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
அங்கண் உலகு அளித்த லான் ..
.. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்
மேல்நின்று தான் சுரந்தலான் -சிலப்பதிகாரம்
சொல்லும் பொருளும்
- திங்கள் = நிலவு
- பொற்கோட்டு = பொன்மயமான சிகரத்தில்
- திகிரி = ஆணைச் சக்கரம்
- நாமநீர் =அச்சம் தரும் கடல்
- கொங்கு = மகரந்தம்
- மேரு = இமயமலை
- அலர் =மலர்தல்
- அளி = கருணை
பொதுவானக்குறிப்புகள்
- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்
- சேர மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது
- இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு
- சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
- தமிழின் முதல் காப்பியம்
- இது முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள்
- திங்கள், ஞாயிறு, மழை -என இயற்கை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது
காணி நிலம்
⚔ காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் -அங்குத்
தூணில் அழகியதாய் -நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் ……
.. சித்தம் மகிழ்ந்திடவே -நன்றாய் இளம்
தென்றல் வர வேணும். – பாரதியார்
சொல்லும் பொருளும்
- காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
- மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
- சித்தம் - உள்ளம்
பொதுவானக்குறிப்புகள்
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் – பாரதியார்
- சுப்ரமணியம் இயற்பெயர்
- எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் பெற்றவர்
- பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு இவரின் படைப்புகள்
சிறகின் ஓசை
- பறவைகள் இடம் பெயர்தல் வலசை போதல்
- நிலவு, விண்மீன், புவியீர்ப்பு விசை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம்பெயர்கின்றன.
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- தலையில் சிறகு வளர்தல்
- இறகுகளின் நிறம் மாறுதல்
- உடலில் கற்றையாக முடி வளர்தல்
டாக்டர் சலீம் அலி
- இந்தியாவின் பறவை மனிதர் - டாக்டர் சலீம் அலி
- தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ எனப் பெயரிட்டார் (The fall of Sparrow)
- தற்கால பறவையியல் ஆய்வாளர்களின் முன்னோடி சலீம் அலி
பொதுவானக்குறிப்புகள்
- சிறகு அடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை - கப்பல் பறவை (Frigate Bird)
- இது தரையில் இறங்காமல் 400 கிலோமீட்டர் வரை பறக்கும் கப்பல் கூழைக்கடா - கடற்கொள்ளை பறவை என்றும் அழைக்கப்படும்
- நாராய் நாராய் செங்கால் நாராய் என்று சத்திமுத்தப் புலவர் வலசைபோதலை பற்றிப் பாடியுள்ளார்
- தென்திசை குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்’ எனக் குறிப்பிட்டுள்ளார்
- காக்கை குருவி எங்கள் சாதி - என்று பாரதியார் பாடினார்
- உலகிலேயே நெடுந்தொலைவு 22 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்யும் பறவை இனம் ஆர்டிக் ஆலா
- பறவையைப் பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY)
- உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20
கிழவனும் கடலும்
- (The old man and the sea) எனும் ஆங்கில புதினம்
- 1954 நோபல் பரிசு பெற்றது
- இதன் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
- முதலெழுத்து
- சார்பெழுத்து
முதல் எழுத்து
- உயிர் மெய் எழுத்துக்கள் 12 மெய்யெழுத்துக்கள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்
- பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே முதல் எழுத்து என்பர்.
சார்பு எழுத்துக்கள்
- பத்து வகைப்படும்
- உயிர்மெய்
- ஆயுதம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- மகரக் குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
உயிர்மெய்
- மெய் எழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தோன்றுபவை
- உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்
- வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிரெழுத்தை ஒத்திருக்கும்.
ஆய்தம்
- மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது
- முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை , அஃகேனம் என்று வேறு பெயர்கள் உண்டு
- நுட்பமான ஒலிப்புமுறை உடையது
- முன் ஒரு குறில் எழுத்தையும் பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்
- தனித்து இயங்காது
- முதலெழுத்துக்கள் ஆகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து வருவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்தாகும்
திருக்குறள்
- அறநூல்களில் ’உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படுவது .
- திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
- வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு
- திருக்குறள்: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் -என மூன்று பிரிவுகள் கொண்டது
- 133-அதிகாரங்கள் 1330-குறட்பாக்கள் கொண்டது
- உலகப்பொதுமறை, வாயுறைவாழ்த்து எனச் சிறப்புப் பெயர்கள் கொண்டது திருக்குறள்
- நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
கலைச்சொல் அறிவோம்
- கண்டம் - continent
- வலசை -migration
- தட்பவெப்ப நிலை -climate
- புகலிடம் -sanctuary
- வானிலை - weather
- புவியீர்ப்பு புலம் -gravitational field.
This blog has full Tamil medium history notes for 6th tamil notes. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2